PDA

View Full Version : கரம் பற்றி வாழ



நிரன்
30-06-2007, 09:53 PM
கரம் பற்றி வாழ நினைத்தேன்−இருதியில்
கூண்டு கம்பியை எண்ண வைத்தாய்
நான் பற்றியது இரும்புக்கம்பி
என் மனம் பற்றியது அவளை

என்றும்
நிரஞ்சன்

இனியவள்
30-06-2007, 09:58 PM
கரம் பற்றி வாழ நினைத்தேன்−இருதியில்
கூண்டு கம்பியை எண்ண வைத்தாய்
நான் பற்றியது இரும்புக்கம்பி
என் மனம் பற்றியது அவளை

என்றும்
நிரஞ்சன்

கவி அருமை நிரஞ்சன் வாழ்த்துக்கள்

theepa
01-07-2007, 12:32 AM
நிரஞ்சன் உங்க கவிதை எல்லாம் நான் படிப்பேன் மிகவும் அருமையாக உல்லது வாழ்த்துக்கல் நிரஞ்சன் தொடர்ந்தும் எலுதுங்கல்

சூரியன்
01-07-2007, 07:15 AM
நிரஞ்சன் உங்களுக்கு காதலில் அனுபவம் அதிகம் போலும் ?

lolluvathiyar
01-07-2007, 07:18 AM
அட பாவமே, கூண்டுக்கு போகும் அளவுக்கா காதல் உங்களை மாற்றி விட்டது

அமரன்
01-07-2007, 04:54 PM
கரம் பற்றி வாழ நினைத்தேன்−இருதியில்
கூண்டு கம்பியை எண்ண வைத்தாய்
நான் பற்றியது இரும்புக்கம்பி
என் மனம் பற்றியது அவளை


கரம்பற்ற நினைத்த உன்னை
இதயக்கூண்டில் இருத்திவிட்டாள்
நாடிக்கம்பியை மீட்டிவிடு
பற்றிவிடுவாள் உன் கரத்தை.

(தவறுதலாக நாளத்தை மீட்டினால்
அப்பி விடுவாள் முகத்தில் கரியை(தாடியை)

அழகான கவிதை. நீங்கள் கூண்டு என்று குறிப்பிட்டது எதை என்று தெரியவில்லை. அதை வைத்தே பதில் கவிதையின் கரு எடுத்தேன். நன்றியும் பாராட்டுகளும். நிரஞ்சன்.

ஏங்க இனியவள் பதில் கவிதை எங்கே.

இனியவள்
01-07-2007, 05:18 PM
கரம்பற்ற நினைத்த உன்னை
இதயக்கூண்டில் இருத்திவிட்டாள்
நாடிக்கம்பையை மீட்டிவிடு
பற்றிவிடுவாள் உன் கரத்தை.

(தவறுதலாக நாளத்தை மீட்டினால்
அப்பி விடுவாள் முகத்தில் கரியை(தாடியை)

அழகான கவிதை. நீங்கள் கூண்டு என்று குறிப்பிட்டது எதை என்று தெரியவில்லை. அதை வைத்தே பதில் கவிதையின் கரு எடுத்தேன். நன்றியும் பாராட்டுகளும். நிரஞ்சன்.

ஏங்க இனியவள் பதில் கவிதை எங்கே.

கூண்டுக்கிளி எதனைக் குறிக்கின்றது என்று தெரியவில்லை அமர் அது தான் யோசிச்சு கொண்டு இருக்கின்றேன் விடை கிடைத்தவ்வுடன் பதில் கவிதை வந்து விடும்

அமரன்
01-07-2007, 05:20 PM
கூண்டுக்கிளி எதனைக் குறிக்கின்றது என்று தெரியவில்லை அமர் அது தான் யோசிச்சு கொண்டு இருக்கின்றேன் விடை கிடைத்தவ்வுடன் பதில் கவிதை வந்து விடும்

நிரஞ்சன் சீக்கிரம் வாங்க. அழகான கவிதை ஒன்றுக்கு வழி செய்யுங்க.

இனியவள்
01-07-2007, 05:27 PM
கரம் பற்றி வாழ நினைத்தேன்−இருதியில்
கூண்டு கம்பியை எண்ண வைத்தாய்
நான் பற்றியது இரும்புக்கம்பி
என் மனம் பற்றியது அவளை

என்றும்
நிரஞ்சன்

கூண்டு கம்பியை இதயச் சிறை என்று நினைக்கின்றேன்

இதயத்தை சிறையாக்கி
அன்பை கம்பியாக்கி
உன்னை சிறைப் பிடித்திருக்கின்றேன்
என் இதயத்துக்குள்

உன் மனம் பற்றியது இரும்பு கம்பியைத் தான்
ஆனால் அந்த இரும்புக்குள்ளும் அழகான
ஆழமான அன்பும் காதலும் காத்திருக்கின்றது
நீ பற்றிய இரும்புக்கையல்ல சொர்க்க வாசல்
என்பதை உணரவைப்பதற்கு

தவறாக இருப்பின் மன்னிக்கவும் நிரஞ்சன்

நிரன்
01-07-2007, 06:28 PM
நிரஞ்சன் உங்களுக்கு காதலில் அனுபவம் அதிகம் போலும் ?

கவி எழுத காதல் தேவையில்லை சூரியன் கற்பனை வளம் இருந்தால் போது முயன்றால் முடியும் அத்துடன் எனக்கு காதல் அணுபவமும் இல்லை சில நேரத்தில் நானே நினைப்போன் நான் என்ன கவிதையா எழுதுகிறோன் என்று

நிரன்
01-07-2007, 06:31 PM
கூண்டு கம்பியை இதயச் சிறை என்று நினைக்கின்றேன்

இதயத்தை சிறையாக்கி
அன்பை கம்பியாக்கி
உன்னை சிறைப் பிடித்திருக்கின்றேன்
என் இதயத்துக்குள்

உன் மனம் பற்றியது இரும்பு கம்பியைத் தான்
ஆனால் அந்த இரும்புக்குள்ளும் அழகான
ஆழமான அன்பும் காதலும் காத்திருக்கின்றது
நீ பற்றிய இரும்புக்கையல்ல சொர்க்க வாசல்
என்பதை உணரவைப்பதற்கு

தவறாக இருப்பின் மன்னிக்கவும் நிரஞ்சன்


கவிதை பார்ப்பவர்க்கு ஒரு ரசனையைக் கொடுக்கும் ஆனால்
நான் இக்கவிதை எழுதும் போது சிறைக்குள் இருக்கும் காதலனை நினைத்தேன்:) ஒரு பக்கக் காதல் மறுபக்கம் பிடிப்பின்மை:)
(நான் கம்பி என்னல்லீங்க)

இருந்தாலும் தங்கள் கவிதை அற்புதமாக உள்ளது அக்கா!