PDA

View Full Version : யாஹு புகைப்பட சேமிப்பகம்



இணைய நண்பன்
30-06-2007, 06:39 PM
இணையத்தில் புகைப்படம் சேமித்து வைப்பதில் பல நிறுவனங்கள் இடவசதி வழங்குகின்றன.அதில் ஒன்று தான் யாஹு புகைப்பட சேமிப்பகம்.இலவசமாக இதுவரை நடாத்தப்பட்டு வந்த இந்த சேவை முடிவுக்கு வருகிறது.அதாவது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி முதல் இந்த இலவச யாஹு புகைப்பட சேமிப்பு சேவை மூடப்படுகிறது.அதனால் தங்கள் ஏற்கனவே சேமித்துள்ள படங்களில் கணனியில் அல்லது வேறு தளத்திற்கு மாற்றிக்கொள்வது நல்லது

அக்னி
30-06-2007, 06:44 PM
ஏதாவது காரணங்கள் உண்டா நிறுத்தப்படுவதற்கு..?
மிகவும் முக்கியமான தகவலாக பலருக்குப் பயன்படும்.

நன்றி!

சூரியன்
01-07-2007, 07:39 AM
ஏன் மூடுகிறார்கள் ? இருந்தாலும் பயனுள்ள தகவல்...

அன்புரசிகன்
01-07-2007, 09:55 AM
அவர்கள் தற்சமயம் மின்னஞ்சலின் சேமிப்பளவின் வரையறையை நீங்கியுள்ளார்கள். அது ஒரு காரணமாக இருக்கலாம்.
தகவலுக்கு நன்றி.

இணைய நண்பன்
01-07-2007, 10:02 AM
ஏன் மூடுகிறார்கள்..எப்போது மூடுகிறார்கள்..மாற்று வழி என்ன? இதோ இந்த சுட்டியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
http://help.yahoo.com/l/us/yahoo/photos/photos2/closing/

மனோஜ்
01-07-2007, 10:10 AM
நல்ல தவல் நன்றி நண்பரே

சூரியன்
01-07-2007, 10:12 AM
தகவலுக்கு நன்றி இக்ராம் அண்ணா.

மயூ
05-07-2007, 10:05 AM
அடப் பாவிங்களா இருக்கிறாங்களே... என்னோட கிளப் படம் எல்லாம் துலைஞ்சுது...!!! உடனே மாறோணும் ஏதும் நல்ல தளம் ;இருக்குதா??? ஃபிளிக்கர் என்னமாதிரி???

இணைய நண்பன்
06-07-2007, 09:42 AM
பிளிக்கர் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தான் இருக்கிறது.

ஜோய்ஸ்
06-07-2007, 04:06 PM
மிகவும் முக்கிய தகவல்.நன்றி.

இணைய நண்பன்
06-07-2007, 05:41 PM
இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து விடுங்கள்.அவர்கள் அறியவில்லை என்றால் புகைப்படங்களை இழக்க நேரிடும் அல்லவா?
நன்றி கூறிய நண்பர்களுக்கு எனது நன்றி

vimal100
09-07-2007, 04:32 AM
இப்போதல்லாம் எந்த பிரபலமான கம்பனியும் நம்பமுடியவில்லை எப்ப என்ன செய்வார்களோ தெரியவில்லை!

அரசன்
09-07-2007, 12:43 PM
அப்படியென்றால் வேறு ஒரு நல்ல இணையத்தளத்தை கூறுங்களேன் என்னோட படங்களை சேமிக்க வேண்டும்.

தகவல் கொடுத்ததற்கு நன்றி.

இணைய நண்பன்
14-07-2007, 09:26 PM
அப்படியென்றால் வேறு ஒரு நல்ல இணையத்தளத்தை கூறுங்களேன் என்னோட படங்களை சேமிக்க வேண்டும்.

தகவல் கொடுத்ததற்கு நன்றி.

இதோ சில தளங்கள்.முயற்சி செய்துபாருங்கள்
http://www.pbase.com/?welcome=007

http://www.photosite.com/
http://jalbum.net/
http://www.comehome.net/
http://www.vicman.net/lib/free/photoalbums
http://www.fujifilm.net/

மயூ
15-07-2007, 01:43 PM
நான் பிளிக்கருக்கு என்னுடைய புகைப்படங்களை மாற்றிவிட்டேன்... ஒப்பீட்டளவில் ஃபிளிக்கர் யாகூ ஃபோட்டோசை விட லாபம்... அதிகளிவில் புகைப்படம் எடுத்துப் பதிவேற்றுவதானால் நீங்கள் பணம் கொடுக்கவேண்டும். ஒரு மாதத்திற்கு 100 எம்பி இலவசமாக ஏற்றலாம். அதைவிட ஃபோட்டோ பகிரும் வசதி நன்றாக உள்ளது.