PDA

View Full Version : உன்னையே நீ உணர்



நிரன்
30-06-2007, 03:32 PM
நீ மறக்க
நினைப்பது−என்னை
அல்ல.........
உன்னை

உன்மையுள்ள
நிரஞ்சன்

இனியவள்
30-06-2007, 03:36 PM
நீ மறக்க
நினைப்பது−என்னை
அல்ல.........
உன்னை

உன்மையுள்ள
நிரஞ்சன்

என்னை மறந்தாலும் மறப்பேனே ஒழிய
உன்னை என்றும் நான் மறவேன்

என் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும்
என் சுவாச மூச்சாக உன் நினைவுகள்
இருக்கும் போது
நான் எப்படி உன்னை மறப்பேன்

ஆதவா
30-06-2007, 03:37 PM
வணக்கம் நிரஞ்சன்,,

நான்கு வரிகள் என்றாலும் நன்றாக இருக்கிறது.. அழகிய குறுங் காதல் கவிதை. இப்படித்தான் எல்லாருமே தன்னை மறப்பதை அறியாமல் சவடால் விட்டுத் திரிகிறார்கள்... இறுதியில் எல்லாம் மறந்துபோய் காதல் என்ற ஆழியில் விழுந்து தொலைக்கிறார்க*ள்.... ம்ம்ம்... ச*ரியாத்தான் சொல்லியிருக்கிறீர்க*ள்... வாழ்த்துக்க*ள். நிர*ஞ்ச*ன்..

அக்னி
30-06-2007, 03:38 PM
காதலனில் காதலி அல்லது காதலியில் காதலன் கொண்ட நம்பிகையின் உச்சம்,
அவர்களுக்குள் வாழ்வது...
நான்குவரிகளில் கூறினாலும் தெளிவாகக் கூறி இருக்கின்றீர்கள்...
பாராட்டுக்கள்...

தமிழ்நிலா
30-06-2007, 03:49 PM
நண்பரே,நான்கு வரிகளில் காதல் தத்துவம் அருமை.கவிதை நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

சூரியன்
01-07-2007, 07:45 AM
அனைத்து கவிதைகளையும் நான்கு வரிகளில் முடித்து கொல்கிறீர்கள் ஏன்?

நிரன்
01-07-2007, 12:50 PM
அனைத்து கவிதைகளையும் நான்கு வரிகளில் முடித்து கொல்கிறீர்கள் ஏன்?


1 வினாடி என்பது ஒரு சிறிய அலகுதான் அவ் அலகு இல்லாவிட்டால் 1 மணித்தியாலமோ இல்லை நதளோ வராது அதுபோலதான் 4வரி கவியும் சில வேளைகளில் 40வரியில் செல்ல முடியாததை 4வரியில் செல்லலாம்

அமரன்
01-07-2007, 04:29 PM
நான்கு வரிகள் ஆழமான அழகான காதல் கவிதை. பாராட்டுகள் நிரஞ்சன்.