PDA

View Full Version : யாருக்கு யார்?



நிரன்
30-06-2007, 03:14 PM
காதலுக்காக கவிதையும் இல்லை!
கவிதைக்காக காதலும் இல்லை!
ஆனால் இரண்டிற்காகவும்
மனிதன் உள்ளான்

அன்புடன் நிரஞ்சன்.......

இனியவள்
30-06-2007, 03:22 PM
காதலுக்காக கவிதையும் இல்லை!
கவிதைக்காக காதலும் இல்லை!
ஆனால் இரண்டிற்காகவும்
மனிதன் உள்ளான்

அன்புடன் நிரஞ்சன்.......


கவிதை லயத்தோடு காதலும்
காதல் லயத்தோடு கவிதையும்
கலந்து இருக்கும்

பாரட்டுக்கள் நிரஞ்சன்

அமரன்
01-07-2007, 05:13 PM
காதலுக்காக கவிதையும் இல்லை!
கவிதைக்காக காதலும் இல்லை!
ஆனால் இரண்டிற்காகவும்
மனிதன் உள்ளான்

(க)விதை இருந்தும்
விளைச்ச*லில்லை
அலைந்து திரிந்து
பெற்ற*திலே..

ஏங்க நிரஞ்சன் காதல் கவிதைகளில் அசத்திக்கொண்டு இப்படி சொல்றீங்க இப்படி உண்மையெல்லாம் சொல்லக்கூடாது. நிஜத்தினை கவியாக படைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்

அமரன்
01-07-2007, 05:16 PM
கவிதை லயத்தோடு காதலும்
காதல் லயத்தோடு கவிதையும்
கலந்து இருக்கும்



லயத்தோடு இருக்கசொன்னால்
கால் முளைத்து பாய்கிறாயே
மனம் விட்டு மனம்.


லயமாக காதலைசொன்ன உங்களுக்கு பாராட்டுகள் இனியவள்.

(இப்படிசொன்னால் குதிரையாக பாய்ந்து ஓடிவிடமாட்டார்களா)

இனியவள்
01-07-2007, 07:36 PM
லயத்தோடு இருக்கசொன்னால்
கால் முளைத்து பாய்கிறாயே
மனம் விட்டு மனம்.


லயமாக காதலைசொன்ன உங்களுக்கு பாராட்டுகள் இனியவள்.

(இப்படிசொன்னால் குதிரையாக பாய்ந்து ஓடிவிடமாட்டார்களா)

நன்றி அமர்

மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடுகின்ற மாதிரி அவைக்கும் போட வேண்டியது தான் அமர் :D

அமரன்
01-07-2007, 07:39 PM
நன்றி அமர்

மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடுகின்ற மாதிரி அவைக்கும் போட வேண்டியது தான் அமர் :D

அட ஒரு வேடிக்கை பாருங்கள். மாடுகளில் பசுவுக்கு மூக்கணாங்கயிறு இல்லை. மனிதர்களில் பெண்ணுக்கு தாலி எனும் தங்க மூக்கணாங்கயிறு..கேட்டாம் நாம் பகுத்தறிவாளிகளாம்.

இனியவள்
01-07-2007, 07:41 PM
அட ஒரு வேடிக்கை பாருங்கள். மாடுகளில் பசுவுக்கு மூக்கணாங்கயிறு இல்லை. மனிதர்களில் பெண்ணுக்கு தாலி எனும் தங்க மூக்கணாங்கயிறு..கேட்டாம் நாம் பகுத்தறிவாளிகளாம்.

நல்லதொரு ஆராச்சி அமர்..

அமரன்
01-07-2007, 07:49 PM
நல்லதொரு ஆராச்சி அமர்..

அதிலும் பாருங்க சிலர் தாலியைப் புரிந்துகொள்வதில்லை.

உனக்கு வேலியென நினைத்து
நான்கட்டிய தாலிச்சரடை
சடங்குச் சீதனத் துணையுடன்
எடுக்கும்போதே புரிந்துகொண்டேன்
என்னுயிர் இருக்கும்
கூடு அதுவென்று.

இனியவள்
01-07-2007, 07:52 PM
அதிலும் பாருங்க சிலர் தாலியைப் புரிந்துகொள்வதில்லை.

உனக்கு வேலியென நினைத்து
நான்கட்டிய தாலிச்சரடை
சடங்குச் சீதனத் துணையுடன்
எடுக்கும்போதே புரிந்துகொண்டேன்
என்னுயிர் இருக்கும்
கூடு அதுவென்று.

ம்ம் ஆமாம் அமர்

தங்கக் கூடு என்று நினைத்து
அடகு வைக்கப் போனான்
அந்தக் கூட்டுக்குள் தான்
அவனுடைய உயிர்
இருப்பதை மறந்து

அமரன்
01-07-2007, 08:00 PM
ம்ம் ஆமாம் அமர்

தங்கக் கூடு என்று நினைத்து
அடகு வைக்கப் போனான்
அந்தக் கூட்டுக்குள் தான்
அவனுடைய உயிர்
இருப்பதை மறந்து

நச் கவிதை இனியவள். பாராட்டுகள்.

உயிரைப் போக்க
தாலி கேட்கின்றான்
தன்னுயிர் அதிலே
இருப்பது அறியாது.

உயிரோடிருக்கையில்
கழட்டிக்கொடுக்கிறாள்
பதி விரதை.

இனியவள்
01-07-2007, 08:17 PM
நச் கவிதை இனியவள். பாராட்டுகள்.

உயிரைப் போக்க
தாலி கேட்கின்றான்
தன்னுயிர் அதிலே
இருப்பது அறியாது.

உயிரோடிருக்கையில்
கழட்டிக்கொடுக்கிறாள்
பதி விரதை.

அவன் கேட்பது அவன் உயிரையே
பறிக்கும் என்பதை அறியாத பதிவிரதை
குடிக்கு அடிமையாகி
குடியைக் கெடுக்கும்
கணவர்மாரை போற்றும்
பெண்கள் உள்ள வரை
குடி(மது)யால் அழியும்
குடும்பங்கள் வந்து கொண்டே இருக்கும்
கேட்டதும் கலட்டிக்கொடுக்கும் பெண்ணே
நீ கேள்விகள் கனைதனை தொடுத்தால்
உன் வாழ்வில் விடியாது என்று இருந்த
பொழுது என்றோ விடிந்திருக்கும்
தவறும் உன்னுடையதே இனியாவது
திருந்து நாளைய சமூகமாவது
வெளிச்சத்தைக் காணட்டும்

கவி நீண்டு விட்டதோ எங்கையோ ஆரம்பித்த திரி எங்கையோ முடிய போகின்றது:ohmy:

அமரன்
01-07-2007, 08:21 PM
அவன் கேட்பது அவன் உயிரையே
பறிக்கும் என்பதை அறியாத பதிவிரதை
குடிக்கு அடிமையாகி
குடியைக் கெடுக்கும்
கணவர்மாரை போற்றும்
பெண்கள் உள்ள வரை
குடி(மது)யால் அழியும்
குடும்பங்கள் வந்து கொண்டே இருக்கும்
கேட்டதும் கலட்டிக்கொடுக்கும் பெண்ணே
நீ கேள்விகள் கனைதனை தொடுத்தால்
உன் வாழ்வில் விடியாது என்று இருந்த
பொழுது என்றோ விடிந்திருக்கும்
தவறும் உன்னுடையதே இனியாவது
திருந்து நாளைய சமூகமாவது
வெளிச்சத்தைக் காணட்டும்

கவி நீண்டு விட்டதோ எங்கையோ ஆரம்பித்த திரி எங்கையோ முடிய போகின்றது:ohmy:

குடிக்கு அடிமையாகி
சொத்துகள் பல இழந்து
குடிசையில் கொலுவிருக்கும்
வறுமை தேவதையின்
முழுக்கண் பார்வைபட்டும்
இல்ல தேவதையின்
எண்ணவறுமை தீரலையே..

திரி முடியுமா தெரியாது இனியவள்

இனியவள்
01-07-2007, 08:27 PM
குடிக்கு அடிமையாகி
சொத்துகள் பல இழந்து
குடிசையில் கொலுவிருக்கும்
வறுமை தேவதையின்
முழுக்கண் பார்வைபட்டும்
இல்ல தேவதையின்
எண்ணவறுமை தீரலையே..

திரி முடியுமா தெரியாது இனியவள்

வறுமை தீரவில்லையே என்று கவலைப்பட்டு
உழைக்காமல் இருந்தால் வறுமை தீராது
உனக்கு தேவையானவறை உழை
அப்போது உணர்வாய் உழைப்பின் மகத்துவத்தை

நாமறியோம் பராபராமே