PDA

View Full Version : மீண்டும் போவதெப்போ............?ஓவியன்
30-06-2007, 10:04 AM
நீர் நிறைந்த எங்கள்
சேற்று வயலில் மீள,
சோற்றுக்காக
நெல் விதைத்து!
பின் நாற்று நட்டு
களையெடுத்து!
வாய்க்காலிருந்து
தண்ணீர் பாய்ச்சி!
வெள்ளாமை செய்ய!
மீண்டும் போவதெப்போ
எங்கள் தேசத்திற்கு..?

நான் வளர்த்த
அருமை ஜிம்மி கூட
என்னை மறந்துதான்
போயிருக்கும்
மீண்டும் ஒரு முறை
நான் அதற்கு சுய அறிமுகம்
செய்யவேண்டும்,
ஜிம்மியின் நண்பனாக
அடிக்கடி வீடு வரும்
அந்த அழகான கீரிப்பிள்ளை!
வீட்டுச் சுவரேறி,
ஜிம்மிக்குப் பயந்து,
வீட்டுக் கூரையில் பதுங்கும்
பக்கத்து வளவு உடும்பு!
எல்லோருக்கும் ஒருதடவை
ஹாய் சொல்லி நலமறிய
மீண்டும் போவதெப்போ
எங்கள் தேசத்திற்கு..?

அப்பா நட்ட
கறுத்தக் கொழும்பான்
மா மரமேறி!
அணிலோடு போட்டியிட்டு,
மா(செ)ங்காய் பிடுங்கி!
கிணற்றடித் தென்னையில்
இளநீர் பறித்து!
முற்றத்துக் கோழிகளுடன்
செல்லமாக முறைத்து!
அம்மா வளர்க்கும்
ரோஜா செடிகளை
அளவழாவி ஆராதிக்க!
மீண்டும் போவதெப்போ
எங்கள் தேசத்திற்கு..?

பொறிக்கடவை அம்மனும்,
தியாகுவயல் காளியும்,
கனவில் வருவது கூட
குறைவடைந்து போயிற்று!
இந்த முறையாவது
வேள்விக்கும், மடைக்கும்
நானும் போகவேண்டும்!
கூடப்படித்த, கூடிப்படித்த
நண்பர், நண்பிகள்
இப்போதெல்லாம்
எப்படி இருப்பார்கள்?
திருமணமுடித்து
குழந்தை குட்டிகளுடன்...?
எல்லோரையும்
ஒரு தடவை மீள
பார்த்து வர
மீண்டும் போவதெப்போ
எங்கள் தேசத்திற்கு..?

காலை மணி பத்து
இன்னும் என்ன
உறக்கம் வேண்டியிருக்கு?
என அதட்டும் அப்பா!
பாவம் இங்கே தான்
அவன் இப்படி,
இன்னும் கிடக்கட்டும்
கொஞ்ச நேரம்!
என எனக்காக வக்காலத்து
வாங்கும் அம்மா!
அவள் மடியில்
இன்னமும் சேயாகி
அவள் கையால்
ஒரு பிடி சாதம்!
இதற்காகவாவது
மீண்டும் போவதெப்போ
எங்கள் தேசத்திற்கு..?

இனியவள்
30-06-2007, 10:12 AM
ஈழம் ஒரு நாள் கிடைக்கும்
சோகங்கள் எம்மை விட்டு பறக்கும்
அந்நியன் எம் தாய் தேசத்தை விட்டு புறப்படுவான்

எம் மண்ணை முத்தமிட்டு
நாம் கால் பதிக்கும் நாள்
வெகு தொலைவில் இல்லை

என்னுள்ளும் இருக்கும் ஏக்கங்கள் உங்கள் கவியில்
வாழ்த்துக்கள் ஒவியன்

அமரன்
30-06-2007, 10:15 AM
ஓவியன் படித்த சில கணங்களே போதும் இக்கவியை உணர. ஒரே அலைவரிசையில் இருப்பதால் சட்டென புரிய முடிந்தது. இத்திரியிலே சில கவிதைகளை இணைக்கலாம் என நினைக்கின்றேன். விரைவில் இணைகின்றேன் உங்களுடன்..

ஓவியன்
30-06-2007, 10:18 AM
ஓவியன் படித்த சில கணங்களே போதும் இக்கவியை உணர. ஒரே அலைவரிசையில் இருப்பதால் சட்டென புரிய முடிந்தது. இத்திரியிலே சில கவிதைகளை இணைக்கலாம் என நினைக்கின்றேன். விரைவில் இணைகின்றேன் உங்களுடன்..

நன்றி அமர்!

எனனக்கும் கவிச்சமரில் உதித்த கரு தான் இது!, நீங்கள் ஏற்கனவே இக் கருவைக் கவியாக்கிவிட்டீர்கள்.

இப்போது நான் − அவ்வளவுதான்.

ஓவியன்
30-06-2007, 10:20 AM
ஈழம் ஒரு நாள் கிடைக்கும்
சோகங்கள் எம்மை விட்டு பறக்கும்
அந்நியன் எம் தாய் தேசத்தை விட்டு புறப்படுவான்

எம் மண்ணை முத்தமிட்டு
நாம் கால் பதிக்கும் நாள்
வெகு தொலைவில் இல்லை

என்னுள்ளும் இருக்கும் ஏக்கங்கள் உங்கள் கவியில்
வாழ்த்துக்கள் ஒவியன்

நன்றி இனியவள்!

இது எனக்குள் உங்களுக்குள் மட்டுமல்ல, புலம் பெயர்ந்த எல்லோருடையதும் நெஞ்சத்து ஏக்கம்!.

ஓவியன்
30-06-2007, 11:34 AM
கவிச்சமர் இளையவர்களுக்கு ஒரு நல்ல களம் என்பது என் கருத்து, இந்தக் கருவும் இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9283&page=171) கவிச்சமரில் உதித்தது தான்!.

அமரன்
30-06-2007, 08:19 PM
நன்றி அமர்!

எனனக்கும் கவிச்சமரில் உதித்த கரு தான் இது!, நீங்கள் ஏற்கனவே இக் கருவைக் கவியாக்கிவிட்டீர்கள்.

இப்போது நான் − அவ்வளவுதான்.

ஆமாம். ஓவியன். இதே கருத்து கவிச்சமரில் உதித்தது. உதித்த அடுத்த கணத்தில் கவிதையாக்கினேன். என்னது ஒரு ரகம். உங்களது ஒரு ரகம்.
தொடருங்கள்.
அன்புடன்

அமரன்
30-06-2007, 08:20 PM
கவிச்சமர் இளையவர்களுக்கு ஒரு நல்ல களம் என்பது என் கருத்து, இந்தக் கருவும் இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9283&page=171) கவிச்சமரில் உதித்தது தான்!.

அதுதான் இனியவள் இரண்டு நாட்களாக கவிச்சமரில் பின்னுறாங்களே. சமாளிக்க முடியலைப்பா. கொஞ்சம் உதவுங்கள் ஓவியன்.

அக்னி
30-06-2007, 11:18 PM
உணர்வுகளை கிள்ளி எழுப்பும் கவிதைவரிகள்,
இயல்பாக ஓடுவது சிறப்பாக உள்ளது...
உணர்வுக்கவிதைக்கு உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள் ஓவியன்...

இனிமையான எதிர்பார்ப்புக்களைக் கவியாக்கிய இனியவள் அவர்களுக்கும்
இதயம் நிறைந்த பாராட்டுக்கள்....

அக்னி
30-06-2007, 11:26 PM
மீண்டும் போவோம் நாங்கள்...
இது கனவுகளல்ல...
ஆயிரமாயிரம் உயிர்களின்
குருதி ஊற்றி
பற்றி எரியும் வேள்வித்தீயின்,
யாகபலன்...
எம்மை
மீண்டும் சேர்க்கும்,
தாய்நிலத்தில்...

நாங்கள் தாய்மண் சேர்வதற்காய்,
தாய்மண் மடியில்
தொட்டில் கொண்டு
கண்ணுறங்கும்,
ஆத்மாக்களின் தியாகத்தில்,
மீண்டும் வாழ்வோம்,
சுதந்திர தேசத்தில்...

மீண்டு வரும் எம் தேசம்...
மீண்டும் போவோம் ஊர்கோலம்...

சூரியன்
01-07-2007, 07:23 AM
நல்ல படைப்பு

lolluvathiyar
01-07-2007, 07:27 AM
உங்களிடம் புதை ந்திருக்கு ஆயிரம் உனர்ச்சிகள், ஏக்கங்கள்
ஒரு சில வார்த்தையில் உனர வைத்தீர்கள்.
விரைவில் நல்ல காலம் பிறக்கும் என்று நம்புவோமாகா

ஓவியன்
01-07-2007, 10:36 AM
மீண்டும் போவோம் நாங்கள்...
இது கனவுகளல்ல...
ஆயிரமாயிரம் உயிர்களின்
குருதி ஊற்றி
பற்றி எரியும் வேள்வித்தீயின்,
யாகபலன்...
எம்மை
மீண்டும் சேர்க்கும்,
தாய்நிலத்தில்...

நாங்கள் தாய்மண் சேர்வதற்காய்,
தாய்மண் மடியில்
தொட்டில் கொண்டு
கண்ணுறங்கும்,
ஆத்மாக்களின் தியாகத்தில்,
மீண்டும் வாழ்வோம்,
சுதந்திர தேசத்தில்...

மீண்டு வரும் எம் தேசம்...
மீண்டும் போவோம் ஊர்கோலம்...நன்றி அக்னி!

உங்கள் பதில் கவிதை அருமையாக நம்பிக்கை தருவதாக உள்ளது, பாராட்டுக்கள்!.

ஓவியன்
01-07-2007, 11:09 AM
நல்ல படைப்பு

நன்றி சூரியன்!

இது எங்கள் உள்ளோதோடு ஊறிவிட்ட ஒரு ஏக்கம்!.

ஓவியன்
01-07-2007, 11:11 AM
உங்களிடம் புதை ந்திருக்கு ஆயிரம் உனர்ச்சிகள், ஏக்கங்கள்
ஒரு சில வார்த்தையில் உனர வைத்தீர்கள்.
விரைவில் நல்ல காலம் பிறக்கும் என்று நம்புவோமாகா

நன்றி நண்பரே!

நல்லகாலம் பிறந்தால் அது எல்லோருக்கும் நல்லது!

நம்புவோம் - நம்பிக்கைதானே வாழ்க்கை!.

masan
01-07-2007, 11:12 AM
அடுத்த வருடம் முடிவதற்குள் நாங்கள் போகலாம் எங்கள் மண்ணுக்கு

ஓவியன்
01-07-2007, 11:13 AM
அதுதான் இனியவள் இரண்டு நாட்களாக கவிச்சமரில் பின்னுறாங்களே. சமாளிக்க முடியலைப்பா. கொஞ்சம் உதவுங்கள் ஓவியன்.

உங்களாலேயே சமாளிக்க முடியலையென்றால் நான் எப்படி..........?

பரவாயில்லை, சமாளிக்க முடியாவிட்டால் செல்வண்ணாவைக் காலில் விழுந்தாவது கூட்டி வருவோம், அவர் தான் சரியான ஆள்!.

ஓவியன்
01-07-2007, 11:16 AM
அடுத்த வருடம் முடிவதற்குள் நாங்கள் போகலாம் எங்கள் மண்ணுக்கு

நிச்சயமாக மாசன்!

எங்கள் தேசத்தில்
புயல் கருக்கட்டுகிறது!
அது
இடியுடன் மின்னலுடன்
பெருமழையாகி
எங்கள் தாயவள்
விடுதலைக்குக்
கட்டியம் கூறும்
நாள்!
வெகுதொலைவில் இல்லை!.

ஷீ-நிசி
01-07-2007, 03:33 PM
காலை மணி பத்து
இன்னும் என்ன
உறக்கம் வேண்டியிருக்கு?
என அதட்டும் அப்பா!
பாவம் இங்கே தான்
அவன் இப்படி,
இன்னும் கிடக்கட்டும்
கொஞ்ச நேரம்!
என எனக்காக வக்காலத்து
வாங்கும் அம்மா!
அவள் மடியில்
இன்னமும் சேயாகி
அவள் கையால்
ஒரு பிடி சாதம்!
இதற்காகவாவது
மீண்டும் போவதெப்போ
எங்கள் தேசத்திற்கு..?ஓவியன்.... நிஜமாலுமே நானே வெளியூர்வாசி போல ஒரு உணர்ச்சி ஏற்பட்டது.. நானும் இதை அனுபவிக்க வேண்டுமென.... மேற்கோளிட்ட வரிகள் உங்கள் உணர்வுகளின் வலியை காட்டியது.. வாழ்த்துக்கள்!

ஓவியன்
01-07-2007, 03:43 PM
ஓவியன்.... நிஜமாலுமே நானே வெளியூர்வாசி போல ஒரு உணர்ச்சி ஏற்பட்டது.. நானும் இதை அனுபவிக்க வேண்டுமென.... மேற்கோளிட்ட வரிகள் உங்கள் உணர்வுகளின் வலியை காட்டியது.. வாழ்த்துக்கள்!

நன்றிகள் ஷீ!

இந்தக் கவிதையின் அனைத்து வரிகளும் நூற்றுக்கு நூறு உண்மையானவை, துளியேனும் கற்பனை சேர்க்காமல் எழுதினேன், என் சொந்த வாழ்க்கையை வைத்து!..

அமரன்
01-07-2007, 03:52 PM
உங்களாலேயே சமாளிக்க முடியலையென்றால் நான் எப்படி..........?

பரவாயில்லை, சமாளிக்க முடியாவிட்டால் செல்வண்ணாவைக் காலில் விழுந்தாவது கூட்டி வருவோம், அவர் தான் சரியான ஆள்!.

அவர்தான் வந்து பார்த்துவிட்டுப் போகின்றாரே...

ஓவியன்! இன்றுதான் கவிதையை முழுமையாகப் படித்தேன். நீங்கள் சொன்ன ஒவ்வொன்றும் நிதர்சனம். நிசிக்குப் பிடித்த அதே வரிகளுடன் வயல் வரிகளும் பசுமரத்தாணியாக. இரவில் தோழர்களுடன் இணைந்து நிலா வெளிச்சம் துணைகொண்டு தண்ணி பாய்ச்சும் காலம்....அதை நினைவு படுத்தி விட்டீர்கள்.

ஏக்கத்தை அதிகரித்த வரிகள். பாராட்டுகள் சொல்வதை விட நன்றிகள் சொல்வதே பொருத்தமானது.
அன்புடன்

ஓவியன்
01-07-2007, 04:04 PM

ஆகா அம*ரா!

நானும் அண்ணனும் இரவிரவாகவே நிலாவொளியில் நீர் பாச்சுவோம், மற்றவர்களின் வயலுக்கு வேண்டிய நீரைக் கூட இரவில் களவாக எங்கள் வயலுக்கு கொண்டு வருவோம்:D , பின்னர் காலையில் வாய்க்காலை முன்போல் சீரமைத்துவிட்டு ஒன்றுமே தெரியா அப் பாவிகளாக, அப்ப*டியா?, உண்மையாகவா? :D

அப்படியெல்லாம் கேட்டிருக்கிறோம்!:D

ஹூம், அதெல்லாம் ஒரு காலம்!

மீண்டும் நன்றிகள் அமர் உங்கள் பின்னூட்டங்களிற்கு!.

அமரன்
01-07-2007, 04:06 PM
ஆகா அம*ரா!

நானும் அண்ண*னும் இர*விர*வாக*வே நிலாவொளியில் நீர் பாச்சுவோம், ம*ற்ற*வ*ர்க*ளின் வ*ய*லுக்கு வேண்டிய* நீரைக் கூட* இர*வில் க*ள*வாக* எங்க*ள் வ*ய*லுக்கு கொண்டு வ*ருவோம்:D , பின்ன*ர் காலையில் வாய்க்காலை முன்போல் சீர*மைத்துவிட்டு ஒன்றுமே தெரியா அப் பாவிக*ளாக*, அப்ப*டியா?, உண்மையாக*வா? :D

அப்ப*டியெல்லாம் கேட்டிருக்கிறோம்!:D

ஹூம், அதெல்லாம் ஒரு காலம்!

மீண்டும் நன்றிகள் அமர் உங்கள் பின்னூட்டங்களிற்கு!.
ஹி....ஹி....அதற்கு வயல்காவல் என்று பெயர் வேறு....:angel-smiley-033: :angel-smiley-033:

ஓவியன்
01-07-2007, 04:10 PM
ஹி....ஹி....அதற்கு வயல்காவல் என்று பெயர் வேறு....:angel-smiley-033: :angel-smiley-033:

ஆமா!

சரிதானே! − நம்ம வயலுக்குக் காவல்!

ஹி!:icon_clap:

ஓவியன்
01-07-2007, 07:10 PM
நீர் நிறைந்த எங்கள்
நான் வளர்த்த
அருமை ஜிம்மி கூட
என்னை மறந்துதான்
போயிருக்கும்
மீண்டும் ஒரு முறை
நான் அதற்கு சுய அறிமுகம்
செய்யவேண்டும்,நான் வீடுவிட்டு
நாடுவிட்டுத் தேசாந்திரம்!
வந்த போது எனக்காக*
இரண்டு நாள்!
உண்ணா நோன்பிருந்த*
ஒரு உயர்ந்த ஜீவன் − ஜிம்மி!.

அமரன்
01-07-2007, 07:12 PM
நான் வீடுவிட்டு
நாடுவிட்டுத் தேசாந்திரம்!
வந்த போது எனக்காக*
இரண்டு நாள்!
உண்ணா நோன்பிருந்த*
ஒரு உயர்ந்த ஜீவன் − ஜிம்மி!.

நன்றியுள்ள ஜீவன்.

இனியவள்
01-07-2007, 07:14 PM
ஒரு ஜந்தறிவு உள்ள ஜீவனுக்கு இருக்கும் பாசம் கூட ஆறறிவு உள்ள மனிதனுக்கு இல்லை .. அப்படி இருந்தால் இவ்வூலகத்தில் போர் என்ற வார்த்தை கூட வந்து இருக்காது...அன்பு இருக்கும் இடத்தில் ஆசை வருவதில்லை ஆசை வந்ததினாலே ஒருவன் பொருளுக்கு இப்படி யுத்தம் செய்து உயிரை உடமையை அழிக்கின்றார்கள் :−(

ஓவியன்
01-07-2007, 07:24 PM
உண்மைதான் இனியவள்!

அன்பினால் வெல்ல முடியாததும் உண்டோ?

என்னெ செய்ய?, அதை விளங்கிக் கொள்ளவும் விளங்கிச் செல்லவும் உலகத்தாருக்கு நேரம் போதுமானதாக இருப்பதில்லை.

அமரன்
01-07-2007, 07:27 PM
உண்மைதான் இனியவள்!

அன்பினால் வெல்ல முடியாததும் உண்டோ?

என்னெ செய்ய?, அதை விளங்கிக் கொள்ளவும் விளங்கிச் செல்லவும் உலகத்தாருக்கு நேரம் போதுமானதாக இருப்பதில்லை.

போதுமான நேரம் இருந்தும் குறுகிய* மனமே காரணம்.

இனியவள்
01-07-2007, 07:34 PM
போதுமான நேரம் இருந்தும் குறுகிய* மனமே காரணம்.

அஃதே அஃதே அமர்...
குறுகிய மனமுடையவன்
தன்னையும் அழித்து பிறரையும்
அழிக்கின்றான்

இளசு
03-07-2007, 08:53 PM
எழுத்தில் ஓர் யதார்த்த ஆவணப்படக்காட்சி காட்ட முடியுமா?

எழுதும் தூரிகை ஓவியனின் விரல்களில் இருந்தால் − முடியும்!

கண்களை கொஞ்சம் கலங்கவிட்ட கவி ஓவியம்!

ஓவியன் − மன்றத்தின் கவி ஓவியர்!
பாராட்டுகள்!

அமரன்
03-07-2007, 09:07 PM
ஓவியன் − மன்றத்தின் கவி ஓவியர்!

இன்றுமுதல் அருமை நண்பர் ஓவியன்இளசு அண்ணன் கொடுத்த பட்டமாகிய கவி ஓவியர் என்றே அழைக்கப்படுவர். பாராட்டுகள் கவிஓவியரே

ஓவியன்
04-07-2007, 05:23 AM
எழுத்தில் ஓர் யதார்த்த ஆவணப்படக்காட்சி காட்ட முடியுமா?

எழுதும் தூரிகை ஓவியனின் விரல்களில் இருந்தால் − முடியும்!

கண்களை கொஞ்சம் கலங்கவிட்ட கவி ஓவியம்!

ஓவியன் − மன்றத்தின் கவி ஓவியர்!
பாராட்டுகள்!

மிக்க நன்றிகள் அண்ணா!

கவி ஓவியராக்கி விட்டீர்களே?

வண்ணங்கள் மேல்
நான் கொண்ட காதல்
எனை ஓவியனாக்க

தமிழ் மன்றத்தின் மேல்
நான் கொண்ட காதல்
எனை காவியனாக்குகிறது!.

நன்றி!.

ஆதவா
04-07-2007, 10:03 AM
ஓவியன்.... மனதிலிருந்து வார்த்தைகளை எடுத்துப் போட்டு எழுதும்போது அதன் ரணம் எப்படிப்பட்டது என்பது எனக்குத் தெரியும்.. கடல் மட்டுமே பாதையாகிப் போனாலும் அலைகளாவது கரை சேர்க்காதா என்று எண்ணி எண்ணி துடிக்கும் பலரின் இதயத்துடிப்பை உணர்ந்ததுண்டு, சிறு நாய் கூட நம்மை தெரிந்து வைத்திருக்குமோ என்பது சந்தேகம் தான்.. காலத்தின் கட்டாயம். விதியின் விளையாட்டு என்று எத்தனையோ சமாதானம் சொன்னாலும் நெஞ்சில் நிற்காது.. இக்கவிதை அத்தனை ஏக்கம் படைத்த வெளிநாடு வாழ் மக்களுக்கும் பொருந்தும்.....

ஓவியன்
04-07-2007, 10:05 AM
இன்றுமுதல் அருமை நண்பர் ஓவியன்இளசு அண்ணன் கொடுத்த பட்டமாகிய கவி ஓவியர் என்றே அழைக்கப்படுவர். பாராட்டுகள் கவிஓவியரே

அடடா!, மாட்டிக்கிட்டேனே!

ஆனால் ஒரு சின்ன விண்ணப்பம் அமர் ஓவியர் என்று மரியாதையெல்லாம் வேண்டாம், கவி ஓவியன் என்று அழைத்தால் இன்னும் சந்தோசப் படுவான் இந்த ஓவியன்.

ஓவியன்
04-07-2007, 10:25 AM
ஓவியன்.... மனதிலிருந்து வார்த்தைகளை எடுத்துப் போட்டு எழுதும்போது அதன் ரணம் எப்படிப்பட்டது என்பது எனக்குத் தெரியும்.. கடல் மட்டுமே பாதையாகிப் போனாலும் அலைகளாவது கரை சேர்க்காதா என்று எண்ணி எண்ணி துடிக்கும் பலரின் இதயத்துடிப்பை உணர்ந்ததுண்டு, சிறு நாய் கூட நம்மை தெரிந்து வைத்திருக்குமோ என்பது சந்தேகம் தான்.. காலத்தின் கட்டாயம். விதியின் விளையாட்டு என்று எத்தனையோ சமாதானம் சொன்னாலும் நெஞ்சில் நிற்காது.. இக்கவிதை அத்தனை ஏக்கம் படைத்த வெளிநாடு வாழ் மக்களுக்கும் பொருந்தும்.....

உண்மைதான் ஆதவா!

என்னதான் வெளிநாடுகளில் நாங்கள் கை நிறையச் சம்பாதித்தாலும், ஊரிலே வீட்டிலே உண்டியலின் ஒரு ரூபாவுக்கு ஈடாக மகிழ்ச்சியைப் பெற முடியாது!.

அனுபவத்தில் கண்டவன் நான், ஆதலால் தான் மனதிலே ஊருக்குப் போகும் எண்ணம் எப்போதும்....
ஆனால் வரவேண்டாம் என்று சொல்லும் உறவினர்கள், நண்பர்கள்..........
பலருக்காக வெளிநாட்டு ஏழையாக வாழ வேண்டியுள்ளது, இது தான் புலம் பெயர்ந்த பலருடைய நிலை.......

புரிதலுக்கு மிக்க நன்றிகள் நண்பா!.

அமரன்
04-07-2007, 10:41 AM
அடடா!, மாட்டிக்கிட்டேனே!

ஆனால் ஒரு சின்ன விண்ணப்பம் அமர் ஓவியர் என்று மரியாதையெல்லாம் வேண்டாம், கவி ஓவியன் என்று அழைத்தால் இன்னும் சந்தோசப் படுவான் இந்த ஓவியன்.

ஓவியன் என்பதில் உள்ள நெருக்கம் ஓவியர் என்பதில் இல்லையே. கவிஓவியன் என்றே அழைகின்றேன்.

(ரொம்ப நெருங்கினால் டே ஓவியன் என்று அழைக்க ஆரம்பித்து விடுவேன்.
அக்னி: அப்போ இரவில் நைட் ஓவியன் என்றா கூப்பிடுவீங்க.)

ஓவியன்
04-07-2007, 10:58 AM

அடடே!

அக்னிக்கு அப்படி சந்தேகம் வராது, வருவதென்றால் அன்புக்குத்தான் வரும்:icon_dance: .

பென்ஸ்
04-07-2007, 02:42 PM
இந்த கவிதைகளை ஒரு வாரத்திற்க்கு முன் கொடுத்திருந்தால் உடைந்து போயிருப்பேன் ஓவியன்.

சின்ன சின்ன விசயங்கள் தான்,
ஆனால், இன்று கிடைக்கும் காசு கொடுத்தாலும்.. கிடைக்காமல் இருக்கும் விசயங்கள்...

கால சக்கரத்தின் ஓட்டத்தில் விட்டு விடு
அதுவே உன்னை மீண்டும் வீடு கொண்டு சேர்க்கும்...
நினைவுகளுக்கு வயதில்லை...

ஓவியன்
04-07-2007, 03:41 PM
உண்மைதான் அண்ணா!

காலச்சக்கரத்தில் விடுவதுதான் இப்போது கண் முன்னே உள்ள ஒரே வழியும் கூட.................

ஆதலால் அதனைத் தான் செய்து கொண்டிருக்கிறேன்..............
என்றோ ஒரு நாள் விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையோடு................

இலக்கியன்
25-08-2007, 08:35 AM
தாயகத்து நினைவுகள் மீட்டது உங்கள் கவிதை வாழ்த்துக்கள்

இதயம்
25-08-2007, 08:46 AM
மனதை நெருடும், நெகிழ வைக்கும் கவிதை..! இவ்வுலகில் பிறக்கும் எல்லோருக்கும் தாய், தந்தையர், சொந்த தேசம், அதன் சுகமான அனுபவங்கள் உண்டு. அது எல்லோருக்குமா இறுதி வரை கிடைக்கிறது.? இல்லை..! சூழ்நிலை எனும் அரக்கன் செய்யும் அநீதியால் அது சிலருக்கு இடையில் கனவாகவும் போய்விடுகிறது. எதிலும் இருந்தும் இல்லை நிலை எத்தனை கொடியது..? அதை அந்த அற்புத இன்பங்களை இழந்தவர்களை கேட்டால் தான் தெரியும் அதன் இயல்பு வலி..! அந்த வலியை நான் உங்கள் கவிதையை படிக்கும் போது உணர்கிறேன். சூழ்நிலையின் சூழ்ச்சிக்கு பலியானவர்களின் காயங்களுக்கு காலம் தான் மருந்திட வேண்டும். உங்களின் இரணங்களுக்கு முதலுதவி சிகிச்சையாக அவ்வப்போது உங்களுக்கான என் ஆறுதல்களும், அன்பும் இருக்க வேண்டும் என்பது ஆசை..!

ஓவியன்
30-08-2007, 06:48 PM
மிக்க நன்றி இலக்கியன்....

அன்பான இதயம்!

உணர்ந்து, உள்வாங்கி விமர்சித்துள்ளீர்கள்....
உங்கள் அன்பும் ஆதரவுக்கும் தலை வணங்குகிறான் இந்த ஓவியன்.......
அது இன்று போலவே, என்றென்றும் வேண்டும் எமக்கு.......