PDA

View Full Version : நிமிட்ஸ் போர்கப்பல் குறித்து கருத்து



namsec
30-06-2007, 08:31 AM
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_pic1.jpg

நிமிட்ஸ் போர்கப்பல் குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க போர் கப்பல் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்கா வின் அணு சக்தி போர் கப்பல் "யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ்'நாளை காலை சென்னை துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் துїரத்தில் நிறுத்தப்படுகிறது. இந்த கப்பல் வருவதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இது குறித்து தெளிவான தகவல் எதையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை.இந்திய கடலோர எல்லையில் தீங்கு விளைவிக்கும் பொருள்களை இக்கப்பல் குவிக்கக் கூடும். எனவே, இந்திய கடலோர எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று மத்திய அரசு தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நிமிட்ஸ் அணுசக்தி போர் கப்பலினால் தீங்கு ஏற்படுமா என அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு எந்த கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

நன்றி தினமலர்

lolluvathiyar
30-06-2007, 08:34 AM
அது அனுசக்தி போர் கப்பல் அனுஆயுத போர் கப்பல் அல்ல, நீண்ட நாள் எந்த பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்பாக ஓடியது என்று அமெரிக்கா அறிக்கை தந்திருகிறது. இருந்தாலும் அமெரிக்கவ என்னைக்கும் நம்ப முடியாது

роЕрооро░ройрпН
30-06-2007, 08:42 AM
இதுபற்றி சரியான தகவல் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் மக்களுக்கு தெளிபடுத்தவெண்டியது அரசின் கடமை.
நன்றி
அன்புடன்

роЪрпВро░ро┐ропройрпН
30-06-2007, 08:43 AM
ஒரு கப்பலினால் பிர*ச்சனையா

роЬрпЛропрпНро╕рпН
01-07-2007, 07:58 AM
காலத்துக்கு தகுந்தாற்ப்போல நாமும் மாறவேண்டியதுதான்.அனு வெடியை செய்து வெடித்திருக்கும் நாம்,அனு உலையை வடிவமைத்து மின் சக்த்தியை பெறும் நாம்,இப்படி எத்தனையோ பல அனு சாதனங்களை கையாளும் நாம்,சில அரசியல்வாதிகளின் கூப்பாடுக்கு பயந்து ஏன் இப்படி பயப்பட வேண்டும்?
நமக்கு நாமே துனிவுடன் பாதுகாப்பு அரணை அமைத்து அந்த கப்பலை உள்லே விட்டால் என்னவாம்?

உலக தாதா அமெரிக்கா அனுகப்பலை கையாளுவானாம்,ஆனால் நம்மளால் ஒரு வாரத்துக்கு கூட வைத்து பார்க்க முடியாதாம்.என்னப்பா இது கூத்து?

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்று ஆடுதுன்னு
வேடிக்கையாகக் கூட சொல்லிவிடாதே!

என்ற புரட்சிக் கருத்துள்ள பாட்டுதான் என் மனதுக்கு சட்டுன்னு வருது.