PDA

View Full Version : இறுதி நொடியில்....

ஆதவா
30-06-2007, 07:56 AM
உலரவைத்த நெருப்பின் வாசனை
ஊடுறுவித் துளைத்து
ஓலங்களின் ஜலங்களால்
ஊசிப் போகிறது நாசி

அற்றை நாளில் அடிபணிந்து
ஒடிந்துபோய் ஓய்ந்து
அற்ற எலும்புகளின் ஓசை
சுவீகாரமாய் கேட்கிறது காது

மடித்து வைத்த உள் நாக்கில்
மரித்துப் போன பொய்மை ரணங்களையும்
அவலக் கிணறுகளையும்
அதட்டி ருசி பார்க்கிறது நாக்கு

அடமானம் வைக்கப்பட்ட
வைராக்கியத்தைத் திரும்பப் பெறாமலே
செத்தொழிகிறது
செதிலடைந்து பாழ்போன கண்கள்

சொல்லப் படாமல் அதக்கிய
அந்தரங்கங்களை நிழலாடிச் சொல்கிறது
கனவின் ரூபத்தில் கோலோச்சும்
மந்தார மனது

கரிசல் மண் துகள்களுக்குள்
தங்கம் தேடிய யாக்கை
பரிதவித்துக் கிடப்பதைக்
கவனிக்கிறது அனுதாபங்கள்

உலகறியும் தவறுகளுக்கு
உடந்தையிறா கால்,கைகளும்
இற்றுப் போய் அமிழ்கிறது
ஊற்றிய இருதுளி மரண திரவத்தில்..

இன்னும் ஓரிரு நிமிடங்கள் தான்
அக்னி தின்று ஏப்பம் விடும்
இவனின் அனைத்து ரகசியங்களையும்.....

சூரியன்
30-06-2007, 09:32 AM
நன்கு உண்ர்ந்து எழுதிய கவிதை.. ஆதவா அருமை

ஷீ-நிசி
01-07-2007, 03:36 PM
ஆதவா.. கவிதையின் முடிச்சு சிக்கவே மாட்டேங்குகிறது இருமுறை படித்த பின்னும்... தனி டிக்ஷனரி போடவேண்டுமப்பா உன் வார்த்தைகளுக்கு... உன் விளக்கம் வேண்டும் ஆதவா...

namsec
01-07-2007, 04:32 PM
எனக்கும் சரிவர விளங்கவில்லை அதிக பின்னூட்டங்கள் வந்தபின் பார்க்கிறேன்

ஓவியன்
01-07-2007, 06:38 PM
எத்தனை எத்தனையோ தீமைகள், குற்றங்கள் செய்த ஒருவனின் உடல் அவயவங்கள் எல்லாம் அவனுடனிறந்து தீயிலே வெந்து இல்லாமற் போவதை சொல்கிறது கவி!. (என் அறிவிற்கெட்டிய வரை)

நிலையாமை என்ற தத்துவத்தை உணர்த்தும் கவி!, சிரமமான சொற் பிரயோகம் தான், ஆனால் வித்தியாசமாக இருக்கிறது ஆதவா!

ஆதவா!
வர வர உங்களது ஆக்கத்தின் தரம் கூடிக் கொண்டே செல்கிறது!

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!.

அமரன்
01-07-2007, 06:43 PM
ஓவியன் நீங்கள் சொலவதுடன் சொல்லப்படாத அவனது ரகசியங்கள் பலவும் அவனுடன் சேர்ந்து எரிக்கப்படுகின்றது. இரு துளி மரண திரவம் எது என தெரிந்தால் ஓரளவு புரிந்துகொள்வேன். இல்லாதுவிடின் நிசி போடும் டிக்ஸனரியை எனக்கும் அனுப்பச்சொல்லவேண்டியதுதான்.

ஓவியன்
01-07-2007, 06:46 PM
உண்மைதான் அமர்!

இந்தக் கவி பல பொருள் தருவதாக எனக்குப் படுகிறது!.

இளசு அண்ணா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!.

அமரன்
01-07-2007, 06:51 PM
உண்மைதான் அமர்!
இந்தக் கவி பல பொருள் தருவதாக எனக்குப் படுகிறது!.
இளசு அண்ணா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!.

ஆதவன் பதிந்த அடுத்த வினாடி இக்கவிதையைப் படித்தேன். பதிலிடவில்லை. பல விடயங்கள் புரியவில்லை என் மரமண்டைக்கு.

அக்னி
01-07-2007, 06:54 PM
ஆனாலும், இறுதியில் அக்னி தின்று ஏப்பம் விடுவதாகக் கூறுவது,
முறையாகாது...
நான் உண்பதே மிகக் குறைவு ஆதவரே...:huh:

உண்மையிலேயே, ஒவ்வொரு முறையும் வாசிக்க, ஒவ்வொரு திசைகளில் மனம் பொருள் தேடிச் சோர்கின்றது...

கவிப்பெருமக்கள் வந்தால்தான் விடிவு...

ஆதவா
03-07-2007, 02:56 PM
அனைவருக்கும் எனது நன்றிகள்.... இந்த முறையாவது நேரடியாக எழுதியிருப்பேன் என்று நினைத்தேன்....

ஊற்றிய மரண திரவம் − விஷம்... அதாவது தற்கொலைக்கு முயன்று வெற்றி பெற்ற ஒருவனின் கடைசி நிமிடங்கள்.... வினாடிகள் என்று போட்டிருக்கலாம்.

ஒவ்வொரு புலன்களும் ஒவ்வொருவிதமாக நினைக்கிறது.

அவனின் மூக்கு, நெருப்பால் எழுந்த புகையால் அழுதவர்களின் ஜலங்களால் ஊசிப் போகிறது..

அன்றைய நாட்களில் அடிபணிந்து வேலை செய்து ஒடிந்து போன எலும்பின் ஓசையைக் காது கேட்கிற*து. அந்த* நிமிட*த்தில்..

அவ*ன் செய்த* அவ*ல*ங்க*ளும் பொய்மையான* ர*ண*ம் (நடித்தல்..) க*ளும் நாக்கு அறிகிற*து.... (இவ*ற்றிற்கு எல்லாம் கார*ண*ம் இந்த* நாக்கு தானே/?)

என்ன*தான் பொய் சொல்லி அவ*ல*ங்க*ள் கொண்ட* வாழ்க்கையும் வ*லியில்லாம*ல் ஜாலியாக* வாழ்க்கையும் வாழ்ந்த*தாக* சொன்னாலும் குட்டு வெளிப்ப*டாம*ல் போகாது.... அந்த* சம*ய*த்தில் வயிராக்கிய*ம் இழ*க்க*ப்ப*டும். அல்லது அடமானம் போல வைக்கப்படும்... அதைக் க*ண்க*ள் க*வ*னித்துப் போகிற*து.

அவ*ன் எதிரே அவ*னோடு ம*ட்டும் ப*ய*ணிக்கும் அவ*னின் அந்த*ர*ங்க*ங்க*ள்

அவ*ன் தேடிய* செல்வ*ம் கிடைக்காத*தைக் க*வ*னிக்கிற*து அனுதாப*ம்..

அவ*ன் செய்த* இத்த*னை வாழ்வுக்கும் உட*ந்தையாக* இருந்த* கை கால்க*ளும் இற்றுப் போக* நேரிடுகிற*து... விஷ*த்தால்... ஏனெனில் இத்த*னை ஆன*பின்னும் வாழ* அவ*ன் ம*றுக்கிறான்..

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

ஒரு இளைஞனின் த*ற்கொலை,,,, இதில் ம*றைத்து வைத்து எதுவுமே இம்முறை நான் எழுத*வில்லை..

ஓவிய*ன் க*ருவை பிடித்துவிட்டார்.... (நன்றி த*லை)

மிக* எளிமையாக* அல்லாவிடினும் ஓர*ள*வு புரியும் ப*டி இருக்கும் என்று நான் நினைத்தேன்... (த*வ*றோ???)

இனி உங்க*ள் க*ருத்து சொல்லுங்க*ள்..... ஏதேனும் த*வ*றிருந்தால் சுட்டிக் காட்டி குட்டுங்க*ள்....

ந*ன்றி ந*ண்ப*ர்க*ளே!

இளசு
03-07-2007, 08:07 PM
வாழ்க்கையின் மிக சவாலான சுவாரசியங்களில்
மரணத்தின் முந்தைய நிமிடங்களில் மனித மனம்
என்ன என்ன நினைக்கும் என்பது.....??!!!
முதல் 10−ல் வரும்.

தற்கொலையை ஒரு மனிதனாய் நான் ஆதரிக்காவிட்டாலும்
அவனின் கடைசி நேரச் சிந்தனையை வடித்த
ஆதவாவுக்கு ரசிகனாய் பாராட்டுகள்!

(ஓவியன்,அக்னி,ஷீ..அமரன் யாராவது விளக்குவாங்கன்னு படிசச்சிட்டே வந்தேன்..
நல்ல வேளை.. ஆதவனே வெளிச்சம் போட்டுக்காட்டியதால் பிழைத்தேன்..)

அக்னி
03-07-2007, 08:21 PM
ஆதவா கவி உங்களது தவறல்ல...
கவிந்த பொருளைக் காணததுவே எம் தவறு...

அமரன்
03-07-2007, 08:48 PM
ஆதவன் கவிதையில் தப்பில்லை. உங்கள் மற்றைய கவிதைகளைப் படித்துவிட்டு ஏதாவது மறைத்து வைத்திருப்பீர்கள் என்று தேடியதில் தெளிவாகத் தெரிந்த பொருள் பிடிபடவில்லை.

ஆதவா
04-07-2007, 10:06 AM
வாழ்க்கையின் மிக சவாலான சுவாரசியங்களில்
மரணத்தின் முந்தைய நிமிடங்களில் மனித மனம்
என்ன என்ன நினைக்கும் என்பது.....??!!!
முதல் 10−ல் வரும்.

தற்கொலையை ஒரு மனிதனாய் நான் ஆதரிக்காவிட்டாலும்
அவனின் கடைசி நேரச் சிந்தனையை வடித்த
ஆதவாவுக்கு ரசிகனாய் பாராட்டுகள்!

(ஓவியன்,அக்னி,ஷீ..அமரன் யாராவது விளக்குவாங்கன்னு படிசச்சிட்டே வந்தேன்..
நல்ல வேளை.. ஆதவனே வெளிச்சம் போட்டுக்காட்டியதால் பிழைத்தேன்..)

மிக*வும் ந*ன்றி அண்ணா.. த*ற்கொலையை நானும் ஆத*ரிக்க* மாட்டேன். அது தைரியமிக்க கோழைத்தன*ம். ஆனாலும் சில*ர் அதை செய்யும் போது அந்த* காட்சியைப் ப*திவு செய்தாகவேண்டுமே.... மிக* மிக* ந*ன்றியும் கூட*....

அண்ணா அதென்ன* முத*ல் 10 ???

ஆதவா
04-07-2007, 10:09 AM
ஆதவா கவி உங்களது தவறல்ல...
கவிந்த பொருளைக் காணததுவே எம் தவறு...

இருக்க*லாம் அக்னி... ஆனால் உண்மையில் நேர*டி பொருள் த*ரும் க*விதையே சிற*ப்பான*தும் கூட*.... இந்த* க*விதை அப்ப*டி இருக்கும் என்று நான் நினைத்தேன்... த*வ*றாக* போச்சுது. ந*ன்றிங்க*....

ஆதவன் கவிதையில் தப்பில்லை. உங்கள் மற்றைய கவிதைகளைப் படித்துவிட்டு ஏதாவது மறைத்து வைத்திருப்பீர்கள் என்று தேடியதில் தெளிவாகத் தெரிந்த பொருள் பிடிபடவில்லை.

நன்றி அமரன்... மறைத்து இனி எதுவும் எழுதப் போவதில்லை... மிக முக்கிய* விஷ*ய*ங்க*ளைத் த*விர*.... ப*டித்து ரசித்த*மைக்கு மிக*வும் ந*ன்றி..

அமரன்
04-07-2007, 10:13 AM
நன்றி அமரன்... மறைத்து இனி எதுவும் எழுதப் போவதில்லை... மிக முக்கிய* விஷ*ய*ங்க*ளைத் த*விர*.... ப*டித்து ரசித்த*மைக்கு மிக*வும் ந*ன்றி..

மறைத்து எழுதுங்க ஆதவா. அப்போதான் எனது அறிவை வளர்க்கலாம்.

ஆதவா
04-07-2007, 10:17 AM
மறைத்து எழுதுங்க ஆதவா. அப்போதான் எனது அறிவை வளர்க்கலாம்.

ஹஹ..... மறைத்து எழுதினால் உங்கள் அறிவு வளரும்.... மறைத்து எழுதினால் எனக்கு வரவு குறையும்... ஹ ஹ.... அடுத்த கவிதை எப்போது எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்..

ஓவியன்
04-07-2007, 10:20 AM
அடுத்த கவிதை எப்போது எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்..

அதென்ன யோசனை!

இப்போதே எழுதுங்க

நன்றே செய் - அதை இன்றே செய் என்று பெரியவங்க சொல்லி இருக்காங்க.......:icon_wink1:

ஆதவா
04-07-2007, 10:22 AM
அதென்ன யோசனை!

இப்போதே எழுதுங்க

நன்றே செய் - அதை இன்றே செய் என்று பெரியவங்க சொல்லி இருக்காங்க.......:icon_wink1:

நீளமான தனிக் கவிதைகள் எழுதும் போது,.. காகிதத்தில் மட்டுமே எழுதுவேன்... இப்போது இருக்கும் இடத்தில் காகிதமும் இல்லை.,. எனக்கு காலமும் இல்லை... நாளை முடிந்தால் எழுதிவருகிறேன் அன்பரே!

அமரன்
04-07-2007, 10:23 AM
அதென்ன யோசனை!

இப்போதே எழுதுங்க

நன்றே செய் - அதை இன்றே செய் என்று பெரியவங்க சொல்லி இருக்காங்க.......:icon_wink1:

சந்தடி சாக்கில உங்களை பெரியவனாக்கிவிட்டீங்க.

ஆதவா வரவு குறையுதா. குறைவா வந்தாலும் நிறைவா வருகுதல்ல.

ஆதவா
04-07-2007, 10:25 AM
சந்தடி சாக்கில உங்களை பெரியவனாக்கிவிட்டீங்க.

ஆதவா வரவு குறையுதா. குறைவா வந்தாலும் நிறைவா வருகுதல்ல.

குறைவு இப்போது இல்லை... ஆனால் ஆகிவிடக்கூடாதே என்ற கவலை அமரன்..

அமரன்
05-07-2007, 11:53 AM
இதில் கவலை என்ன ஆதவா? நிறைவுக்கு ஒன்று. நிறைவுக்கு இன்னொன்று.

பென்ஸ்
05-07-2007, 12:17 PM
ஆதவா....

வாசித்தேன்....

கவிதை வாசிக்கும் போது எனக்கு புரியவில்லைதான், ஓவியன் விளக்கம் கேட்டு தெளிந்தேன்....

வார்த்தைகளை அருமையாக பயன்படுத்தி இருக்கிறிர்கள்... அதை தொடுத்த விதம் இன்னும் அருமை...

என் நண்பன் ஒருவன் ஒருமுறை விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தான், நான் பார்க்க சென்றிருந்த போது அவனுக்கு அவனுக்கு எதோ குடிக்க கொடுத்து வாந்தி எடுக்க வைத்து கொண்டிருந்தார்கள்.... வாந்தியோடு வாந்தியாக "எப்பாடியாவது என்னை காப்பாற்றிவிடுங்கள் டாக்டர் " என்று அவன் கெஞ்சியது அவன் இறந்து வருடங்கள் பல ஆனாலும் என் மனதில் வலியாய்...

நல்ல கவிதை நண்பா...

ஆதவா
09-07-2007, 06:39 AM

மிகவும் நன்றிங்க பென்ஸ்.... ஒவ்வொருவர் வாழ்விலும் இந்த மாதிரி சமப்வங்கள் இருப்ப*துண்டு.... க*விதையை ஆழ*ப்ப*டுத்துவ*தாக* நினைத்துக் கொண்டு புரியாம*ல் எழுதிவிடுகிறேனோ???