PDA

View Full Version : சந்தையில் புதுசு



namsec
30-06-2007, 06:10 AM
சந்தையில் புது புது பொருள்கள் வருகின்றன நாம் கண்டதை தமிழ்மன்ற உரிப்பினர் அனைவரும் கான வழிசெய்வதே எனது நோக்கம். அதேபொல் நீங்களும் சந்தையில் புதிய பொருள் பார்த்தாலோ அல்லது உங்களுக்கு தெரிந்த்தாலோ இங்கு வெளியிடலாம்

namsec
30-06-2007, 06:10 AM
பேட்டரியில் ஓடும் வாகனம் விரைவில் டி.வி.எஸ்., அறிமுகம்

பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் தெரிவித்தார்.இதுகுறித்து டி.வி.எஸ்., மோட்டார் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்த கடந்த நிதியாண்டில் மூன்று ஆயிரத்து 928 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் புரிந்துள்ளது. முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டின் லாபம் 66 கோடி ரூபாய். இருசக்கர வாகனத் தயாரிப்புக்கான மூலப்பொருள்களான ஸ்டீல், ரப்பர், காப்பர், பாலிமர் உள்ளிட்டவற்றின் விலை கடந்த ஆண்டு 3 சதவீதம் உயர்ந்தது; ஆனால், எங்களது நிறுவனம் வாகனத்தின் விலையை உயர்த்தவில்லை. இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கு நிதியுதவியை பல நிறுவனங்கள் தற்போது அளித்து வருகின்றன. இதற்கேற்ப இருசக்கர வாகன சந்தையின் விற்பனையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.தற்போது 44 நாடுகளுக்கு எங்களது வாகனங்கள் ஏற்றுமதியாகி வருகிறது. புதிதாக ஏழு புதிய நாடுகளுக்கு ஏற்றுமதியை துவங்கியுள்ளோம். எங்களது நிறுவனத்தின் ஏற்றுமதி 29 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு லட்சம் இருசக்கர வாகனங்களை கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். இந்தோனேசியாவில் எங்களது இரு சக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இந்தியாவின் மொத்த இரு சக்கர வாகனச் சந்தையில் 11 சதவீத இடத்தை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த ஆண்டு ஆறு புதிய இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இரு மாடல்களில் பேட்டரியால் இயங்கக்கூடிய 'ஸ்கூட்டி'யை அறிமுகப்படுத்தவுள்ளோம். புதிய தயாரிப்புகள் அதிக மைலேஜ் கொண்டதாக வடிவமைக்கப்படும். அதே போல் மூன்று சக்கர வாகனங்களையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். ஆண்டுக்கு 90 ஆயிரம் மூன்று சக்கர வாகனங்களை தயாரித்து விற்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு வேணு சீனிவாசன் தெரிவித்தார்.

நன்றி தினமலர்

namsec
30-06-2007, 06:19 AM
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_2846753.jpg

குழந்தைகளின் பொழுது போக்கிற்கென ரிமோட் மூலம் இயங்ககூடிய வண்டு வடிவிலான ஹெலிகாப்டரை டோக்கியோவில் டேயோ எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

நன்றி தினமலர்

namsec
30-06-2007, 06:22 AM
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_2745129.jpg
காந்த சக்தியில் சுழலும் புதிய வகை உலக உருண்டையை ஜப்பான் நிறுவனம் ஒன்று டோக்கியோவில் அறிமுகப்படுத்தியது.

நன்றி தினமலர்

namsec
30-06-2007, 12:43 PM
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_TM_30-06-07_E1_06-01_20CNI.jpg
அமெரிக்கர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஐ-போன் செல்போனை ஆப்பிள் நிறுவனம் நேற்று வெளியிட்டது. முதல் நாள் இரவே சென்று வரிசையில் கால் கடுக்க நின்று ஐ-போனை வாங்கிவிட்ட மகிழ்ச்சியில் டைசன்ஸ் கார்னர் நகரில் உள்ள ஆப்பிள் நிறுவன வளாகத்தில் போஸ் கொடுக்கும் இளசுகள்.

http://uk.gizmodo.com/iphone.jpg

நன்றி : தமிழ்முரசு

சூரியன்
30-06-2007, 12:59 PM
நல்ல தகவல்கள் நண்பரே

namsec
02-07-2007, 03:50 AM
ஜூலை 02,2007,00:38


http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_6362530.jpg
புதிய மெனோ ரோபோட்குழந்தைகளுக்கென ஜப்பானின் டாய் நிறுவனம் மெனோ எனும் புதிய ரோபோட்டை தயாரித்து அறிமுகப்படுத்தியது.

நன்றி தினமலர்

அமரன்
02-07-2007, 07:37 AM
சித்தரே நல்ல வேலை செய்தீர். பாராட்டுகளும் நன்றிகளும். தொடருங்கள்.
(பொம்மைச் செய்தி போட்டு என்னை வீட்டில் மாட்டிவிட்டிரே)

namsec
04-07-2007, 04:50 AM
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_7779309.jpg

ஜப்பானின் டாய் நிறுவனம் 30 செ.,மீ உயரமுள்ள பேசும் கிளி ரோபோட்டை டோக்கியோவில் அறிமுகப்படுத்தியது

நன்றி தினமலர்

namsec
04-07-2007, 04:53 AM
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_9035718.jpg
ஜப்பானில் சோனி நிறுவனம் புதிய ரக கையடக்க வீடியோ காமிராவை அறிமுகப்படுத்தியது.

namsec
04-07-2007, 01:05 PM
புதிய வகை காரை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய் நிறுவனம்
கார் உலகில் மிகப்பிரபல நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் சிஎன்ஜி சான்ட்ரோ என்ற புதிய வகை காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் விலை ரூ 3,25, 361 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

namsec
06-07-2007, 06:34 AM
புதிய ரக அப்பாச்சி ஆர்டீஆர் 160
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_1856763.jpg

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் அப்பாச்சி ஆர்டீஆர் 160 எனும் புது ரக மோட்டாரை பெங்களூரில் அறிமுகப்படுத்தியது.

namsec
06-07-2007, 06:37 AM
மகேந்திராவின் 'லோகன்' கார்களில் புதிதாக இரு மாடல்கள் அறிமுகம்
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_2231213.jpg
சென்னை:மகேந்திரா ரெனால்ட் நிறுவனம் தனது 'லோகன்' கார்களில் புதிய இரு ரகங்களை கூடுதல் வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது.மகேந்திரா ரெனால்ட் நிறுவன விற்பனை பிரிவு துணைத் தலைவர் நளின் மேத்தா கூறியதாவது:
மகேந்திரா ரெனால்ட் நிறுவனம் 'லோகன்' கார்களில் புதிய மாடல்களாக, பெட்ரோலில் ஓடும் 5.35 லட்சம் ரூபாயில் ஜி.எல்.எக்ஸ்., மற்றும் டீசலில் ஓடும் 6.11 லட்சம் ரூபாயில் 'டிசிஐ' டி.எல்.எக்ஸ்., கார்களை கூடுதல் வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. கார் விற்பனையில் 'லோகன்' 40 சதவீத இடம் பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட 'லோகன்' கார் இரண்டாயிரத்து 786 விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் மட்டும் இரண்டாயிரத்து 380 கார்கள் விற்பனையாயின.கடந்த 2006 பிப்ரவரியில் மகேந்திரா அண்டு மகேந்திரா மற்றும் ரோனோ கூட்டாக இந்தியாவில் லோகன் கார்களை தயாரித்து விற்க ஒப்பந்தம் செய்தது. நாசிக் தொழிற்சாலையில் 60 ஆயிரம் கார்கள் தயாரிக்கப்படும்.இவ்வாறு மேத்தா தெரிவித்தார்.

shivasevagan
06-07-2007, 06:45 AM
பயனுள்ள தகவல்கள்.

namsec
07-07-2007, 05:18 AM
உலகின் முதல் மெக்கானிக்கல் பென்சில்
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_7763745.jpg
உலகின் முதல் மெக்கானிக்கல் பென்சிலான சப்பிலியோ எனும் புதிய வகை பென்சிலை ஜப்பானின் பென்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

நன்றி தினமலர்

namsec
07-07-2007, 05:22 AM
அதிநவீன பாத்டப்
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_1847302.jpg
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் துவங்கியுள்ள உமன்ஸ் எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன பாத்டப் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது. இதன் விலை ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய். டிவி பார்த்துக் கொண்டே குளிக்கும் வசதி உள்ளிட்ட பல நவீன வசதிகள் இந்த பாத்டப் பில் உள்ளன.

நன்றி தினமலர்

namsec
09-07-2007, 08:29 AM
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_787_prem_topshot_375.jpg
அமெரிக்காவைச் சேர்ந்த விமானங்களை வடிவமைக்கும் நிறுவனம், 'போயிங் கார்ப்பரேஷன்!' இந்நிறுவனம், குறைந்த விலையில், எரிபொருளை சிக்கனமாக செலவழிக்கும், 'போயிங் 787 ட்ரீம்லைனர்' என்ற புதிய விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

namsec
11-07-2007, 06:20 AM
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_6363599.jpg
புதிய ரக இ-பைக்கை ஆமதாபாத்தில் ஏசிஇ மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

நன்றி தினமலர்

namsec
12-07-2007, 06:14 AM
சோனி நிறுவன புதிய தயாரிப்பு
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_9370801.jpg

சோனி நிறுவனம் ஆர்கானிக் ஒளியை வெளிப்படுத்த கூடிய டயோடு பொருத்தப்பட்ட புதிய ரக 11 இன்ச் டி.வி.,யை டில்லியில் அறிமுகப்படுத்தியது.

namsec
13-07-2007, 01:26 PM
புதிய ஆக்டிவ் ப்ளே வீடியோ கேம்
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_2687451.jpg
அமெரிக்காவின் வீ பிட் நிறுவனம் பிரசர் போர்டு ஒன்றின் மீது ஏறி நின்று இயக்க கூடிய ஆக்டிவ் ப்ளே வீடியோ கேமை அறிமுகப்படுத்தியது.

namsec
14-07-2007, 04:17 AM
புது ரக தங்க மொபைல்
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_1960980.jpg
18 காரட் தங்க உலோக தகட்டினால் செய்யப்பட்ட மொபைல் போனை சாம்சங் நிறுவனம் தயாரித்துள்ளது.

aren
14-07-2007, 04:46 AM
புது ரக தங்க மொபைல்
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_1960980.jpg
18 காரட் தங்க உலோக தகட்டினால் செய்யப்பட்ட மொபைல் போனை சாம்சங் நிறுவனம் தயாரித்துள்ளது.


இதில் பேசினால் சத்தம் வருமா?

namsec
16-07-2007, 05:26 AM
சாவ்ரோலெட் ஸ்பார்க் கார் அறிமுகம்
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_8435895.jpg
ஜென்ரல் மோட்டார்சின் புதிய ரக காரான சாவ்ரோலெட் ஸ்பார்க் கார் டில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

namsec
19-07-2007, 12:57 PM
இலவசமாக டெலிபோன் இணைப்பு தரும் கருவி அமெரிக்காவில் அறிமுகம்

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிக்கான் வேலி பகுதியில் இருக்கும் ஊமா என்ற கம்பெனியினர், வீடுகளுக்கு இலவசமாக டெலிபோன் இணைப்பு கொடுக்கும் ஊமாஸ் ஹப் என்ற கருவியை கண்டுபிடித்துள்ளனர். 399 டாலர் விலையில் விற்கப்படும் இந்த கருவி மூலம் வீடுகளிடையே இலவசமாக டெலிபோன் இணைப்பு, கான்பரன்ஸ் காலிங், வாய்ஸ் மெயில் போன்ற வசதிகளை பெறலாம். இதனை சோதனை செய்து பார்க்கும் விதமாக தற்போது குறிப்பிடத்தக்க வீடுகளுக்கு மட்டும் சப்ளை செய்துள்ளனர்.

namsec
19-07-2007, 12:57 PM
புதிய யு- மெட் மொபைல் போன்

ஹெல்மெட் வடிவிலான யு- மெட் எனும் புதிய ரக மொபைல் போனை ஜப்பானின் டானிஸ்வா எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சோலார் பேட்டரி, கேமரா ,வயர்லெஸ் 3ஜி போன் ஹெட்செட் , ஜிபிஎஸ் , போன்ற அதி நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

alaguraj
19-07-2007, 01:43 PM
அய்யா, பொம்பளைங்க அழுகை, புலம்பல் நிறுத்த ஏதாவது புதுசா வந்த கொஞ்சம் மறக்காம பதிவை போடுய்யா ராசா..நீ நல்லருப்பே....

namsec
19-07-2007, 03:59 PM
அய்யா, பொம்பளைங்க அழுகை, புலம்பல் நிறுத்த ஏதாவது புதுசா வந்த கொஞ்சம் மறக்காம பதிவை போடுய்யா ராசா..நீ நல்லருப்பே....

என்னங்க நீங்க அது எப்பவும் கிடைக்கிற பொருள் நீங்க வாங்கி தறவில்லை என்றால் அதுக்கு யார் பொருப்பு

சென்னையில் கிடைக்கும் இடம் : GRT , லலிதா ஜீவல்லரி, உம்முடி பாங்காரு செட்டி, சரவணா ஸ்டோர் தங்கமாளிகை இன்னும் என்னில் அடங்கா

namsec
21-07-2007, 06:07 AM
நடனமாடும் அதிசய ரோபோட்
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_8351361.jpg
டோக்கியோவின் ஐ-சோபாட் நிறுவனம் உலகின் சின்ன மனித வடிவிலான நடனமாடும் ரோபோவை தயாரித்துள்ளனர்.இந்த ரோபோ 10 குரல் கட்டளைகளுக்கேற்ப இயங்ககூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த ஒரு ரோபோவின் விலை சுமார் 9919 ரூபாய் .

namsec
22-07-2007, 05:23 AM
டாடா இண்டிகாம் புதிய மோடம் அறிமுகம்
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_2311932.jpg

டாடா இண்டிகாம் நிறுவனம் 'ப்ளக்2 சர்ப் விஸ்' என்ற புதிய மோடம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் எந்த இடத்தில் பயணம் செய்து கொண்டிருந்தாலும் இணையதளத்தில் தகவல்களை தேடலாம்.
தொலை தொடர்பு சேவை வழங்குவதில் முன்னணியில் உள்ள டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம், 'சன்ஜில் யுஎஸ்பி மோடம் - ப்ளக்2 சர்ப் விஸ்' என்னும் மோடத்தை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோடத்தை, 'லேப்-டாப்' அல்லது 'டெஸ்க்-டாப்' கம்ப்யூட்டரின் யுஎஸ்பி போர்ட்டில் செருகி, தடையின்றி, இணைய தள இணைப்பைப் பெறலாம்.

இந்த 'பாக்கெட்' அளவிலான மோடத்திற்கு, 'நெட்ஒர்க் கேபிள்' மற்றும் போன் இணைப்பு தேவையில்லை. அதனால், இந்தியாவில் எந்த இடத்தில் பயணம் செய்து கொண்டிருந்தாலும், இணையதள இணைப்பு பெற்று, இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம். இதன் விலை ரூ.இரண்டாயிரத்து 850. சிம்கார்டுக்கு தனியாக ரூ.99 செலுத்த வேண்டும்.

namsec
31-07-2007, 03:58 PM
மஸ்தாவின் மினிகார் அறிமுகம்
மஸ்தாஸ் டீமியோ எனும் புதிய ரக மினிகாரை மஸ்தா கார் நிறுவனம் டோக்கியோவில் அறிமுகப்படுத்தியது.

namsec
31-07-2007, 03:59 PM
அழகு பொருந்திய குட்டி கார் அறிமுகம்


டோயாட்டோ மோட்டார் கார்ப்ரேஷன் கம்பெனி மிக எளிமையாக ஓட்டி செல்லும் வகையில் குறைந்த நீளம் (4 மீட்டருக்கு சற்று குறைவாக) அகலம் 1. 7 மீட்டர் அளவு கொண்ட புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பார்க்க மிக அழகாகவும் இளைஞர்களை மிகவும் கவரும் என்று இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

namsec
01-08-2007, 07:39 AM
மோட்ரோலோவின் புதிய ரக மொபைல்

மோட்டோ க்யூ மொபைல் எனும் புதிய ரக மொபைலை மோட்ரோலோ நிறுவனம் டில்லியில் அறிமுகப்படுத்தியது.

namsec
08-08-2007, 08:54 AM
ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனியின் புது மாடல் ஐமேக் கம்ப்யூட்டர்


http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_destop.jpg

அமெரிக்காவின் ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனி, புது மாடல் கம்ப்யூட்டரை வடிவமைத்திருக்கிறது. ஐமேக் என் பெயரில், ஸ்லிம் மானிட்டர், அதிக வேகமுள்ள சிப், வழவழப்பான பளீச்சென்று தெரியும் ஸ்கிரீனுடன் அலுமினியம் கேசிங்கில் தயாரான இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தான் இதுவரை வழக்கத்தில் இருக்கும் கம்ப்யூட்டரை மாற்ற இருக்கிறது.

namsec
21-08-2007, 03:34 PM
புதிய வகை டிஜிட்டல் கேமிரா அறிமுகம்
http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_7330701.jpg
கேனான் நிறுவனத்தின் நியூ இஓஎஸ் 40டி எனும் புதிய வகை டிஜிட்டல் கேமிரா டோக்கியோவில் அறிமுகப்படுத்தப்பட்டது . இந்த கேமிரா ஆகஸ்டு 31ம் தேதி முதல் சந்தைக்கு வர துவங்கும்.

mgandhi
21-08-2007, 06:49 PM
நல்ல தகவலுக்கு நன்றி

சூரியன்
24-10-2007, 05:08 PM
http://www.dinamalarbiz.com/admin/news/2520062.jpg
'அல்ட்ரா மோட்டார்' நிறுவனமும், 'ஹீரோ' நிறுவனமும் இணைந்து, பெங்களூரில் 'மேக்சி' என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளன. விலை 35 ஆயிரம் ரூபாய்.

thanks:dinamalar

சூரியன்
24-10-2007, 05:10 PM
http://www.dinamalarbiz.com/admin/news/3871686.jpg
லாண்ட் குரிய்சர் எனும் புதிய ரக காரை டொயோட்டோ மோட்டார் நிறுவனம் டோக்கியோவில் அறிமுகப்படுத்தியது.

thanks:dinamalar

சூரியன்
24-10-2007, 05:13 PM
http://www.dinamalarbiz.com/admin/news/2257916.jpg
எலக்ட்ரோலக்ஸ் நிறுவனத்தின் புதிய ரக குளிர்சாதனப் பெட்டி டில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சூரியன்
24-10-2007, 05:14 PM
http://www.dinamalarbiz.com/admin/news/956494.jpg
டோக்கியோ : மாறுதல் செய்யப்பட்ட ஹோண்டா ஃபிட் காரை, ஹோண்டா மோட்டார் கார்பரேஷனின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி அதிகாரி ஹிரோயுகி யோசினோ டோக்கியோவில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கார் அக்டோபர் 26ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

சூரியன்
24-10-2007, 05:15 PM
http://www.dinamalarbiz.com/admin/news/6865765.jpg
'பயர்பாக்ஸ் பைக்ஸ்' நிறுவனமும், 'ட்ரெக்' சைக்கிள் நிறுவனமும் இணைந்து புதிய சைக்கிள்களை டில்லியில் அறிமுகப்படுத்தின. சைக்கிள்களின் விலை ரூ.14 ஆயிரத்திலிருந்து துவங்குகிறது.

அக்னி
24-10-2007, 07:26 PM
சந்தைப் புதுவரவுகளின் தகவல் களஞ்சியத் திரியை,
தொடங்கிய சித்தர் அவர்களுக்கும், தொடரும் சூரியன் அவர்களுக்கும்
நன்றிகளும், பாராட்டுக்களும்...

சூரியன்
10-11-2007, 10:52 AM
http://www.dinamalarbiz.com/admin/news/742718.jpg
சென்னை : கொரியாவை சேர்ந்த பிரபல எல்.ஜி. நிறுவனம், இந்திய எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய பியர்ல் பிளாக் எல்சிடி டி.வி. மற்றும் ஷைன் என்ற மொபைல் போன் நன்கு விற்பனை ஆகிறது. 2006ல் ரூ.8,250 கோடியாக இருந்த எல்.ஜி. நிறுவனத்தின் வரவு செலவு, இந்த ஆண்டில் ரூ.9,500 கோடியாக இருக்கும் என்று எல்.ஜி. இந்தியாவின் மேலான்மை இயக்குனர் மூன் சின் தெரிவித்தார். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் எல்.ஜி.யின் விற்பனை விற்று முதல் ரூ.1,100 கோடி. இதை 2010ல் இரட்டிப்பாக்க முயன்று வருகிறோம். அந்த இலக்கை அடைந்து விடுவோம் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். எங்களது தயாரிப்புகளின் தரத்தில்தான் நாங்கள் பெரும் அக்கறை கொண்டுள்ளோம். எங்களது வருடாந்திர வரவு செலவில் 4 முதல் 5 சதவீதம் வரை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு ( ஆர் அன்ட் டி ) செலவு செய்கிறோம் என்றார் மூன் சின். அடுத்த வருடத்தில் இவர்கள் புளு ரே டிஸ்க் பிளேயரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறார்கள். மேலும் வேக்வம் கிளீனர், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் போன்ற வீட்டு உபயோகப்பொருட்களையும் அறிமுகப்படுத்துகிறார்கள். 22 இங்ச் எல்சிடி டி.வி, 32 இஞ்ச் பிளாஸ்மா டி.வி. ஆகியவையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

viju
26-02-2008, 03:23 PM
அய்யா நாங்கள் சுத்தமான கம்பு மாவு அரைத்து விற்பனைக்கு தருகிறோம.................விலை 8 ருபாய் 1\2கிலோ..............................

சும்மா வெளிநாட்டு சரக்கா சொன்னா எப்படி?்

க.கமலக்கண்ணன்
09-03-2008, 09:36 AM
நல்ல தகவல் சூரியன் தொடர்ந்து அசத்துங்கள்


அய்யா நாங்கள் சுத்தமான கம்பு மாவு அரைத்து விற்பனைக்கு தருகிறோம.................விலை 8 ருபாய் 1\2கிலோ..............................

viju நீங்கள் பின்னூட்டம் இடும்போது அடுத்தவர்கள் மனம் நோகாமல் பின்னூடம் இடுங்கள். ஒவ்வொரு தகவலையும் அவர் சேரிக்க எவ்வளவு கஷ்டப்படிருப்பார் என்று அவருக்குதான் தெரியும். சரியா. தயவுசெய்து கவனமாக பின்னூட்டம் இடவும்...

அனுராகவன்
13-03-2008, 02:13 AM
ஓ நல்ல தகவல் சூரியன் அவர்களே!!
தொடர்ந்து தாருங்கள்..
நாங்கள் பின் தொடர்வோம்..