PDA

View Full Version : சர்வேதேச மொழிகளில் யூ ட்யூப் சேவை



நிரன்
30-06-2007, 12:27 AM
உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் கூகிள் நிறுவனத்தின் வீடியோ ஆன்லைன் இணைய தளமான யூ ட்யூப், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிகளிலேயே இணைய தளத்தை ஏற்படுத்த உள்ளது.

பிரேசில். நெதர்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், போலந்து,.ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அந்தந்த நாடுகளின் மொழிகளிலான தகவல்களுடன் உருவாகிறது.

உள்ளூர் மொழிகளில் தேடுதல் எந்திரங்களும் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் அந்தந்த மொழிகளிலேயே யூ ட்யூப் பயனர்கள் சிறந்த அனுபவங்களைப் பெறுவார்கள் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூ ட்யூப் நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதத்தில் கூகிள் நிறுவனம் 1.65 பில்லியன் டாலர் மதிப்பில் கையகப்படுத்தியது.

இணையதள உபயோகிப்பாளர்கள் யாராக இருந்தாலும், தங்களின் வீட்டு டிஜிட்டல் கேமரா, மொபைல் கேமரா, ஹேண்டி கேமராவில் பதிவு செய்த வீடியோ பதிவுகளை யூ ட்யூப் மூலம் இணையதளத்தில் பதிப்பிக்கலாம். இதன்மூலம் உலக அளவில் அந்த வீடியோ பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்க எளிதான நிலை உருவானது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே யூ ட்யூப் வசதியைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது பல்வேறு நாட்டு மொழிகளிலும் யூ ட்யூப் வாய்ப்பு ஏற்படுவதால், மிக அதிகமான அளவு இணையவாசிகள் இனி பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி
மல்டித*மிழ்

vimal100
09-07-2007, 04:37 AM
தகவளுக்கு மிக்க நன்றி

shivasevagan
09-07-2007, 04:44 AM
நல்ல செய்தி நண்பரே!

இதைப் போல Google Video வும் உள்ளது. அதிலும் படங்கள் ஏற்றலாம்.

அமரன்
09-07-2007, 08:04 AM
நல்ல செய்தி. பகிர்ந்துகொண்ட நிரஞ்சனுக்கு நன்றி.

மயூ
25-09-2007, 06:03 AM
தகவலுக்கு நன்றி...
தமிழ் இல்லையே போங்க@@@!!!!

ஓவியன்
25-09-2007, 06:32 AM
தமிழ் இல்லையே போங்க@@@!!!!

சரி, சரி மயூ என்ன செய்வது..?
வருங்காலங்களில் சேர்க்கப்படுமென நம்புவோம்... :)

சராஜ்
25-09-2007, 12:12 PM
சீன மொழியிலும் இல்லை... :(

மயூ
25-09-2007, 12:14 PM
அது சரி.. சீனமே இல்லை எனும் போது எப்படித் தமிழைத்தருவார்கள்!!!!!

ஓவியன்
27-09-2007, 03:00 AM
சீன மொழியிலும் இல்லை... :(

உலகில் அதிகமானோர் பேசும் மொழி சீன மொழி என்று எங்கோ படித்த ஞாபகம்..........!!!

அதற்கே இந்த நிலையா....?????!!!????? :confused: