PDA

View Full Version : பீட்ஸா உணவகம் தொடங்கலாமா?



muttham
29-06-2007, 06:32 PM
நான் புதியதாக பிட்சா ரெஷ்டாரென்ட் எங்கள் ஊரில் ஆரம்பிக்க விரும்புகிறேன்.அது லாபகரமான தொழிலா தெரிவிக்கவும்

அறிஞர்
29-06-2007, 06:45 PM
அன்பரே.. தலைப்பு தமிழில் இருக்கட்டும்.

எந்த ஊரில் ஆரம்பிக்க போறீங்க.......

ஓவியா
29-06-2007, 06:59 PM
எங்கு ஆரம்பிக்க போகின்றீர்கள். வீட்டில் உணவு சமைத்து சாப்பிடும் மக்களின் கூட்டம் அதிகம் இருந்தால் சற்று சிரமம், இருப்பினும், நகரம் என்றால் லாபகரமான வருமாம் வரலாம்.


உங்க தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.

namsec
30-06-2007, 05:49 AM
ஓவியா சொல்வதைப் போல் எந்த இடம் என்று பாருங்கள்

அமரன்
30-06-2007, 07:49 AM
ஆமாம் நண்பரே! உங்கள் வசிப்பிடம் போன்ற தகவல்கள் தெரியாது கருத்துக் கூறுவது சரியில்லை. உங்களைப் பற்றிய சிறிய அறிமுகத்தை இங்கே (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) கொடுத்துவிடுங்களேன்.

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

நன்றி.
அன்புடன்

muttham
30-06-2007, 03:02 PM
நன்றி..எல்லாருக்கும் நான் நாகப்பட்டினத்தைசார்ந்தவன்

சூரியன்
01-07-2007, 07:47 AM
உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்..

muttham
01-07-2007, 04:02 PM
அதற்க்கான ஆலோசனைகள் தேவை

அமரன்
01-07-2007, 04:03 PM
அதற்க்கான ஆலோசனைகள் தேவை

காத்திருங்கள் நண்பரே. அனுபவம் உள்ள நண்பர்கள் பதிலளிப்பர்.

saguni
07-07-2007, 09:50 AM
இளைஞர்கள் வட்டாரமே பீட்சாவை அதிகமாய் உபயோகிக்கிறது எனவே கல்லூரியின் அருகில் அல்லது முக்கிய வணிக வளாகங்களின் அருகில் துவங்கினால் சிறந்தது. பீட்ஸாவுடன் சேர்த்து சாப்பிட கோலா பெப்சி முக்கியம். இட்லிக்கு சட்னி போல.

பீட்ஸா நன்றாக அறிமுகம் கிடைக்க நாட்கள் பிடிக்கும் மற்ற பாஸ்ட் புட்களான சாண்ட்விச் ப்ரென்ச் ப்ரை, பர்கர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எனவே துவங்கி வெற்றிபெற வாழ்த்துக்கள்.