PDA

View Full Version : பிறவிக் கடன்



இனியவள்
29-06-2007, 01:48 PM
என்னைத் தூக்கி வளர்த்த கடனை
உன்னைச்சுடுகாடு வரை தூக்கி கழித்தேன்
எனக்குப் பாலூட்டிய கடனை
உனக்கு வாய்க்கரிசியிட்டுக் கழித்தேன்
எனக்குத் திருட்டி பொட்டிட்ட கடனை
உன் படத்திற்கு மாலையிட்டு கழித்தேன்
என்னை பிறசவிக்கும் போது பட்ட கடனை
எதை செய்து கழிப்பேன் ??

அமரன்
29-06-2007, 01:57 PM
அன்னைக்கு ஓர் கவிதை. ஒவ்வொரு வரியிலும் அன்னையின்பால் கொண்ட காதல் தெரிகின்றது. பாராட்டுகள் இனியவள். அக்கடனை எப்படி அடைப்பது. முடியாத காரியம் அது.

அக்னி
30-06-2007, 02:06 AM
பெற்ற அன்னைக்கு கடன் தீர்க்க முடியாது என்பதை,
உணர்த்தும் கவிதை, அருமையாக உள்ளது...
கடன்கழித்தல் என்பதையும் மீறி,
அன்னையின் மறைவு தரும் சோகம், கருவாக இருந்து, மனதை அழுத்துகின்றது.