PDA

View Full Version : இலங்கை-பங்களாதேஸ் கிரிக்கட்



அமரன்
29-06-2007, 01:31 PM
இலங்கை-பங்களாதேஸ் அணிகளுக்கான கிரிக்கட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்று ஒரு நாள்போட்டிகளும் இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளது. இம்முதலாவது போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்க்ஸாலும் 234 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது.

பங்களாதேஸ் அணியின் நஃபீஸ்,அஸ்றஃபுல் போன்றோர் சிறபாக ஆடினர்.

இலங்கை அணியில் நான்கு வீரர்கள் சதமடித்தனர். மஹெல ஜயவர்தனே- 127. வன்டோட் - 117,பிரசன்ன ஜயவர்தனே - 120, சமிந்தாவாஸ்- 100. முரளீதரன் 9 இலக்குகளை வீழ்த்தினார்.

சமிந்தவாஸ் ஓட்டங்கள் பெற்றதன் மூலம் அவரது டெஸ்ட் போட்டியில் 100 ஓட்டங்கள் என்றகனவு நனவாகியுள்ளது