PDA

View Full Version : ஹெரிடேஜ் பிரெஷ் அங்காடிகள் சென்னையில் 30 இ



namsec
29-06-2007, 12:10 PM
கனிகள், காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வேண்டுவோர் போன் செய்தால் போதும் வீட்டிற்கு கொண்டு வந்து தரும் விதத்தில், சென்னையில் 30 இடங்களில் ஹெரிடேஜ் நிறுவனம் தினசரி அங்காடிகளை துவக்குகிறது.ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம் தினமும் ஏழு லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் பழங்கள், காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் 'பிரெஷ்' மையங்களை கடந்த 16ம் தேதி முதல் துவக்கி வருகிறது. ஐதராபாத்தில் 16, பெங்களூரூவில் மூன்று மையங்கள் என துவக்கப்பட்டுள்ளது.சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று 'பிரெஷ்' துவக்கப்பட்டது. ஜூலை முதல் தேதி கோபாலபுரம், வேளச்சேரியில் ஆகிய இடங்களில் துவங்கப்படுகிறது. தொடர்ந்து அசோக் நகர், மடிப்பாக்கம் உட்பட 2008 மார்ச் இறுதிக்குள் 30 விற்பனை மையங்கள் சென்னையில் படிப்படியாக துவக்க திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து ஹெரிடேஜ் சில்லறை பிரிவின் துணைத் தலைவர் ஜகதீஷ் கூறுகையில், ''ஆந்திரா, கர்நாடகாவில் 'உறவு முறை விவசாயம்' என்ற நவீன அணுகுமுறையைப் பயன்படுத்தி விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை நேரடியாக வாங்கி, 'பேக்கிங்' செய்து நுகர்வோருக்கு பசுமையுடன்(பிரெஷ்) வழங்குகிறோம்.இங்கு பழங்கள், காய்கறிகள், பால், பேக்கரி மற்றும் மளிகைப் பொருட்கள் கிடைக்கும். இரண்டாயிரத்து 500 சதுரடியில் சிறப்பு அங்காடிகள், ஆயிரம் சதுரடியில் 'தினசரி அங்காடிகள்' துவங்கப்படும். நுகர்வோர் போன் செய்தால் இலவசமாக வீட்டிற்கே சென்று பொருட்களை வழங்கிட, 'இல்லத்திற்கே டெலிவரி' திட்டமிடப்பட்டுள்ளது. தொடரும் வாடிக்கையாளருக்கு சிறப்பு பரிசுகள், சலுகை திட்டங்கள் மற்றும் சிறப்புரிமைகள் வழங்கப்படும்,'' என்றார்.பால் பொருட்கள் விற்பனையில் தென்னிந்தியாவின் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஹெரிடேஜ் புட்ஸ் இந்தியா லிமிடெட் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட (முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமானது) ரூ. 294 கோடி மதிப்புடைய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.