PDA

View Full Version : இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி பெறுவது எப



மீனாகுமார்
29-06-2007, 11:15 AM
இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி பெறுவது எப்படி ??

இது வெறும் கற்பனையே. நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலிய கிர்கெட்போர்டு அதற்கான வீரர்களை தேர்வு செய்யும் போது நம்ம ஆதம் கில்கிரிஸ்ட் வந்தார். தேர்வாளர் கேட்டார்- உங்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது என்று. அதற்கு கிலகிரிஸ்ட் சொன்னார்- நான் விளையாட்டு வீரனில்ல.. பொறுக்கி.. ரௌடி. நான் பிறப்பிலேயே ஒரு பொறுக்கி. ரௌடியும் கூட. ஒன்றுக்கும் உதவாதவன் என்று என்னை வீட்டிலிருந்து துரத்திவிட்டனர். செய்வதறியாது சென்று கொண்டிருந்த போது ஒரு கிரிக்கெட் பந்து என் பக்கத்தில் வந்து வீழ்ந்தது. அதை பொறுக்கிப் போட்ட எனக்கு கிரிக்கெட் பந்து பொறுக்கி போடும் வேளை கிடைத்தது. ஒருநாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் வராத போது என்னை பேட்டிங் பிடிக்கச் சொன்னார்கள். நானும் என் ரௌடித்தனத்தைக் காட்டி வெளு வெளு என்று வெளுத்து விட்டேன். அதன் பிறகு கீப்பரும் பேட்ஸ்மேனுமாக எனக்கு நிரந்தர வேலை கிடைத்தது. இப்போது நாட்டிற்க்காக ஆட வந்து விட்டேன். என்றார்.

சில காலங்களாகவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு ஒரு உண்மையை உணர்ந்திருந்தது. நல்ல விளையாட்டு வீரரை உருவாக்க வேண்டுமென்றால் அதற்க்கு பல காலமும் செலவும் நிறைய ஆகிறது. அதனால் மாற்று வழியாக நாட்டில் திரியும் நல்ல பொறுக்கி ரௌடிகளை தேர்வு செய்து அவர்களுக்கு மட்டை சுழற்ற கற்றுக்கொடுத்தால் மிகவும் செயலூக்கம் (effective) மிக்கதாக இருந்ததை அவர்கள் அனுபவபூர்வமாகவே கண்டுவிட்டார்கள். எனவே அதே பாணியைக் கையாண்டு இன்று உலகையே வென்றும் இருக்கிறார்கள்.

சரி. உலகம் இப்படி இருக்க.. நாம் மட்டும் நல்ல வீரர்களை பயிற்சி கொடுத்து உருவாக்கி எவ்வளவு கஷ்டப்படுகிறோம். அதனாலே இந்திய கிரிக்கெட் போர்டும் ஆஸ்திரேலிய போர்டு போலேவே பல ரௌடிகளை தேர்வு செய்து 6 மாதமோ ஒரு வருடமோ பயிற்சி கொடுத்தால் இந்தியா அடுத்த உலகக் கோப்பையை வெல்வது உறுதி.

அமரன்
29-06-2007, 11:18 AM
ஹா...ஹா...தமாசாக எழுதியுள்ளீர்கள் மீனாகுமார். கில்லிக்குப்பின்னால் இவ்வளவு கதையா....எல்லா நாடும் இதைக்கடைப்பிடித்தால் யாருக்கு உலககிண்ணம் கிடைக்கும்....அடடா நல்ல நகைச்சுவை ஒன்று விளையாட்டு பகுதியில். நகைச்சுவைப்பகுதிக்கு மாற்றிவிடலாமா?
நட்புடன்

ஓவியா
29-06-2007, 12:05 PM
ஹி ஹி ஹி அசத்தல்.

நன்றி மீனாக்குமார்.

இனியவள்
11-07-2007, 05:36 PM
ஹீ ஹீ மீனாக்குமார் சூப்பருங்கோ

ஆமாம் இது போக்கிரி விஜய்க்கு தெரியுமா:icon_wacko: :icon_wacko: :icon_wacko: :icon_wacko: :icon_wacko: :icon_wacko: