PDA

View Full Version : காதல்(அமர்)க்களம்



அமரன்
29-06-2007, 09:21 AM
காதலே.. புரியவில்லை!

அழைத்தபோது வராத நீ
என்னுள் புகுந்ததும்−அவள்
இமைகள் மூடுகின்றன


நீ கொடுக்கும் உஷ்ணத்தால்
செந்நீர் கண்ணீராக-என்
இமைகள் மூடுகின்றன

கண்ணின் இமைகளோ
இதயத்தின் கதவுகள்
காதலே.. புரியவில்லை!

இனியவள்
29-06-2007, 09:28 AM
அழைத்தபோது வராத நீ
என்னுள் புகுந்ததும்−அவள்
இமைகள் மூடுகின்றன


நீ கொடுக்கும் உஷ்ணத்தால்
செந்நீர் கண்ணீராக-என்
இமைகள் மூடுகின்றன

இதயத்தின் கதவுகள்
கண்ணின் இமைகளோ
காதலே.. புரியவில்லை !

இதயத்தின் கதவுகளை
அவன் மூடியதால்
கண்கள் கண்ணீர் வடிக்கின்றன

உன்னை புரிந்து நான் ஏற்றுக்கொண்ட போது
உன் கண்கள் காட்டிய அன்பு
இன்று தீயாய் அனல் கக்குகின்றது

உன் பிரிவின் காரணம் தெரியாமல்
தவிக்கும் இந்த இதயத்திற்க்கு
உன் நினைவுகளே ஆதரவு

எனக்கு புரிந்தும் புரியாமலும் இருக்கின்றது
உன் காதல் காதலா இல்லை கானல் நீரா ??

கவி அருமை பாரட்டுக்கள் அமரன்

அமரன்
29-06-2007, 09:35 AM
நன்றி இனியவள். பொதுவாக காதல் கவிதைகள் பக்கம் நான் திரும்புவதில்லை. அதையும் முயற்சி செய்து பார்ப்போமே என்பதன் விளைவே இக்கவிதை.


எனக்கு புரிந்தும் புரியாமலும் இருக்கின்றது
உன் காதல் காதலா இல்லை கானல் நீரா ??

காணல் நீயாக இருக்கும்போது
கானல் ஆகுமா காதல்
சந்தேகத்தை அழித்துவிடு-காதல்
தேகத்தில் புகுந்துவிட
சோகமெல்லம் மறைந்துவிடும்

இனியவள்
29-06-2007, 09:47 AM
நன்றி இனியவள். பொதுவாக காதல் கவிதைகள் பக்கம் நான் திரும்புவதில்லை. அதையும் முயற்சி செய்து பார்ப்போமே என்பதன் விளைவே இக்கவிதை.
காணல் நீயாக இருக்கும்போது
கானல் ஆகுமா காதல்
சந்தேகத்தை அழித்துவிடு-காதல்
தேகத்தில் புகுந்துவிட
சோகமெல்லம் மறைந்துவிடும்
எதையும் முயற்சித்து பார்த்தால் தானே நல்ல முடிவும் சிறந்த அனுபவங்களூம் கிடைக்கின்றன

சோகமெல்லாம் நீ தந்தது
சந்தோஷங்களும் நீ தந்தது
அன்பு என்னும் மழையிலே
என்னை நலைய வைத்த நீ
கண்ணீர் என்ற கடலிலும் மூழ்க வைத்து விட்டாய்

அமரன்
29-06-2007, 10:07 AM
எதையும் முயற்சித்து பார்த்தால் தானே நல்ல முடிவும் சிறந்த அனுபவங்களூம் கிடைக்கின்றன

சோகமெல்லாம் நீ தந்தது
சந்தோஷங்களும் நீ தந்தது
அன்பு என்னும் மழையிலே
என்னை நலைய வைத்த நீ
கண்ணீர் என்ற கடலிலும் மூழ்க வைத்து விட்டாய்


முயன்று பார்க்கும் முடிவுடன் தலைப்பை மாற்றிவிட்டேனே...

முகம் பார்த்த நீ-என்
அகம் பார்க்கவில்லை
அகம்பாவ மாந்தர்நிறை
அகத்தை காதலித்தாய்
அகம் பாவம் -இப்போது
மூழ்கிறது கண்ணீரில்......

இனியவள்
29-06-2007, 10:27 AM
முயன்று பார்க்கும் முடிவுடன் தலைப்பை மாற்றிவிட்டேனே...

முகம் பார்த்த நீ-என்
அகம் பார்க்கவில்லை
அகம்பாவ மாந்தர்நிறை
அகத்தை காதலித்தாய்
அகம் பாவம் -இப்போது
மூழ்கிறது கண்ணீரில்......

மூழ்கிறது கண்ணீரில் காதல்
கை கொடுத்து கரை சேர்ப்பாய்
என்ற நம்பிக்கையோடு
காத்திருக்கின்றேன்
தூங்கா விழிகளுடன்


ம்ம் கவனித்தேன் அமரன் வாழ்த்துக்கள்

அமரன்
29-06-2007, 10:43 AM
காத்திருக்கின்றேன்
தூங்கா விழிகளுடன்

தூங்கா விழிகளுடன் நீ இருக்க
சிலையோ என நினைத்து
கடந்து செல்கிறது
இமைத்து பார்.....
அழைப்பை ஏற்றுக்கொண்டு
உன்வசம் ஆகிவிடும்
காதல்

இனியவள்
29-06-2007, 12:26 PM
தூங்கா விழிகளுடன் நீ இருக்க
சிலையோ என நினைத்து
கடந்து செல்கிறது
இமைத்து பார்.....
அழைப்பை ஏற்றுக்கொண்டு
உன்வசம் ஆகிவிடும்
காதல்

காதல் என்னும் கடலில்
அள்ள அள்ள குறையாதாது
அன்பு மட்டுமே

அமரன்
29-06-2007, 12:33 PM
காதல் என்னும் கடலில்
அள்ள அள்ள குறையாதாது
அன்பு மட்டுமே

அள்ளி கொடுத்தாலும்
கிள்ளி கொடுத்தாலும்-என்
கிள்ளைக்குப் புரியவில்லை
காதலின் புனிதம்

இனியவள்
29-06-2007, 01:12 PM
அள்ளி கொடுத்தாலும்
கிள்ளி கொடுத்தாலும்-என்
கிள்ளைக்குப் புரியவில்லை
காதலின் புனிதம்

காதலின் புனிதம் தெரியவில்லை
நீ என்னவன் ஆகும் வரை

அமரன்
29-06-2007, 02:01 PM
காதலின் புனிதம் தெரியவில்லை
நீ என்னவன் ஆகும் வரை

உடையவனாகியும்-என்
காதல் புரியாத உனக்கு
எப்படிப் புரிந்தது
காதலின் புனிதம்
காதலே ஆச்சரியம்-நீ
அதைவிட ஆச்சரியம்

இனியவள்
29-06-2007, 04:19 PM
உடையவனாகியும்-என்
காதல் புரியாத உனக்கு
எப்படிப் புரிந்தது
காதலின் புனிதம்
காதலே ஆச்சரியம்-நீ
அதைவிட ஆச்சரியம்

ஆச்சரியம் உன் அன்பை பார்த்து
பார்த்து பார்த்து பழகிய உன் முகம்
பார்க்காமல் இருக்கும் போது
ஏதோ ஒரு தவிப்பு என்னுள்

அமரன்
29-06-2007, 07:07 PM
தவிப்புடன் காத்திருந்து
உன் முகம் பார்த்திருக்க
நெருஞ்சி முள்ளாய் குத்துதே
உன் வகிட்டு சிவப்புப்பொட்டு

அக்னி
30-06-2007, 12:58 AM
சிவப்புப்பொட்டு
உன் நெற்றியில் இட்டேன்...
காதல்
முடிவுற்றது...

காதல் கவிச்சமர் அருமையாக உள்ளது...
அமரன், இனியவள் இருவருக்கும் பாராட்டுக்கள்...

அமரன்
30-06-2007, 07:32 AM
காதல் கவிச்சமர் அருமையாக உள்ளது...
அமரன், இனியவள் இருவருக்கும் பாராட்டுக்கள்...

நன்றி அக்னி. நாமும் காதல் கவிதை எழுதிப்பார்ப்போமே என்று எழுதினேன். அதற்குப் பின்னூட்டமிட்டு இனியவள் அவர்கள் அதை தொடராக்கிவிட்டார். அவரது கவிதைக்கு பதில் கவிதை எழுதப்போய் திரி இப்படி ஆகிவிட்டது. இனியவளுக்கு நன்றி.

இனியவள்
30-06-2007, 09:42 AM
சிவப்புப்பொட்டு
உன் நெற்றியில் இட்டேன்...
காதல்
முடிவுற்றது...

காதல் கவிச்சமர் அருமையாக உள்ளது...
அமரன், இனியவள் இருவருக்கும் பாராட்டுக்கள்...

நன்றி அக்னி

என் நெற்றியில் நீ பொட்டிட்டது
காதல் முடிவுறது என்கின்றாயோ
காதல் வானம் போல் முடிவற்றது
அள்ள அள்ள குறையாதது
என்பதை நீ எப்போது அறிவாய்

இனியவள்
30-06-2007, 09:43 AM
நன்றி அக்னி. நாமும் காதல் கவிதை எழுதிப்பார்ப்போமே என்று எழுதினேன். அதற்குப் பின்னூட்டமிட்டு இனியவள் அவர்கள் அதை தொடராக்கிவிட்டார். அவரது கவிதைக்கு பதில் கவிதை எழுதப்போய் திரி இப்படி ஆகிவிட்டது. இனியவளுக்கு நன்றி.

உங்கள் கவி நன்றாக இருந்தது அமரன் ஆகையால் கவியிலே தொடராலாம் என்று நினைத்தேன்..அது இப்படி வளரும் என்று நினைக்கவில்லை :nature-smiley-008:

சூரியன்
30-06-2007, 09:47 AM
அமரன் நல்ல கவிதை

அமரன்
30-06-2007, 10:27 AM
உங்கள் கவி நன்றாக இருந்தது அமரன் ஆகையால் கவியிலே தொடராலாம் என்று நினைத்தேன்..அது இப்படி வளரும் என்று நினைக்கவில்லை :nature-smiley-008:

எனக்கு அதில் சந்தோசமே. தொடருங்கள்.

ஓவியன்
30-06-2007, 10:30 AM
அமர்க்களத்தில்
செந்நீர்!
காதலில்
கண்ணீர்!
இர*ண்டுமே
ஒன்றுதான்
வ*லியிலும்
பெறும*தியிலும்.

இனியவள்
30-06-2007, 02:13 PM
அமர்க்களத்தில்
செந்நீர்!
காதலில்
கண்ணீர்!
இர*ண்டுமே
ஒன்றுதான்
வ*லியிலும்
பெறும*தியிலும்.

தியில் உருகும் நெய் போல்
உன் அன்பில்
உருகுகின்றேன் நானும்

theepa
01-07-2007, 01:42 AM
காதலே ஒரு புரியாத புதிர் தானே நன்பரே அதை புரிந்து கொண்டால் எல்லோருக்கும் நல்லது வாழ்த்துக்கல் உங்கல் கவிதைக்கு நன்பரே

அமரன்
01-07-2007, 12:35 PM
சிவப்புப்பொட்டு
உன் நெற்றியில் இட்டேன்...
காதல்
முடிவுற்றது...

நெற்றியில் இட்டபொட்டு
சிவப்பாக இருக்கும்போதும்
தெரியவில்லை
காதலுக்கு நீ காட்டிய
சிவப்புக்கொடி அதுவென்று..

இனியவள்
01-07-2007, 12:54 PM
நெற்றியில் இட்டபொட்டு
சிவப்பாக இருக்கும்போதும்
தெரியவில்லை
காதலுக்கு நீ காட்டிய
சிவப்புக்கொடி அதுவென்று..

சிகப்புக் கொடி காட்டிய நீ
பச்சைக்கொடி காட்டுவாய் என்ற
நம்பிக்கையில் கலர் கனவுகளோடு
காத்திருக்கின்றேன் என் விடியலுக்காய்

அமரன்
01-07-2007, 01:07 PM
பச்சைக்கொடி காட்டுவாய் என்ற
நம்பிக்கையில் கலர் கனவுகளோடு
காத்திருக்கின்றேன் என் விடியலுக்காய்
விடியலுக்காய் காத்திருக்கும்
எனதருமை தோழியே
கிழக்குவான் சிவப்புக்கூட
விடியலின் தூதுவனே..
வாசல்வரை வந்துவிட்ட
விடியலை காணாது
தொலைதூரம் பார்க்கிறாயே.

இனியவள்
01-07-2007, 01:10 PM
விடியலுக்காய் காத்திருக்கும்
எனதருமை தோழியே
கிழக்குவான் சிவப்புக்கூட
விடியலின் தூதுவனே..
வாசல்வரை வந்துவிட்ட
விடியலை காணாது
தொலைதூரம் பார்க்கிறாயே.


எனதருமை தோழனே
கிழக்கு வானம் சிவந்தால் கூட
என்னவன் சம்மதம் வரும்வரை
விடியல் கூட விடிய மறுக்கின்றது
எனக்கு அவன் சம்மதம் ஒன்றே
என் வாழ்வில் விடியல் தரும்

அமரன்
01-07-2007, 01:48 PM
மதங்கள் தப்பால்
சம்மதம் தாமதமகலாம்
மதம் மாறாதிரு
காதலே மதமாயிரு

இனியவள்
01-07-2007, 01:56 PM
மதங்கள் தப்பால்
சம்மதம் தாமதமகலாம்
மதம் மாறாதிரு
காதலே மதமாயிரு

காதலே மதமாய்
இதயமே சின்னமாய்
அன்பே மொழியாய்
நீயே என் தெய்வமாய்
போற்றி வழிபடுகின்றேன்
ஒரு பக்தையாய்

அமரன்
01-07-2007, 02:18 PM
பக்தையாய் இருப்பதால்
கிருஷ்ணனாய் ஆனேனே
அடி (எடுத்து) கொடுத்துவிட்டு
அழுது புலம்புகிறாய்

இனியவள்
01-07-2007, 02:26 PM
பக்தையாய் இருப்பதால்
கிருஷ்ணனாய் ஆனேனே
அடி (எடுத்து) கொடுத்துவிட்டு
அழுது புலம்புகிறாய்

பக்தையாய் இருந்தேன் ஆதலால்
கிருஷ்ணன் ஆனேன் என்கின்றாயே
ஏன் உன்னால் ராமன் ஆகமுடியவில்லை
என்று நான் கேட்கும் கேள்விக்கு
பதில் சொல்(லுங்கள்)

அடி எடுத்துக்கொடுத்தேன்
என்னை நீ விளங்கிக் கொள்வதற்கு
அடியை தப்பாக புரிந்து
அத்திவாரத்தை வேறு இடத்தில்
போட்டு என் வாழ்க்கையை
இருள் என்னும் கொடியவனிடம்
ஒப்படைத்து சென்றுவிட்டாயே