PDA

View Full Version : சும்மா அதிருதுல்லே!!!lenram80
29-06-2007, 12:30 AM
உள்ளே வந்த சில நாட்களிலேயே
உயிரை வெளுவெளுவென வெளுத்து
உடம்பை துவைதுவையென துவைத்து
சொர்க்க நரகத்தில் தொங்க வைத்தாயே!

நான் உனக்காக எழுதிய கவிதைகளுக்காக
நீ பதில் கவிதை எல்லாம் எழுதவேண்டாம்!
நானே உன்னிடம் இருந்து பொறுக்கிவிட்டேன்!

உனக்குத் தெரியாமல் நான் கிழித்த
உன் பெயர் எழுதிய உன் நோட்டு முதல் பக்கம்!

உன் முத்தம் கிடைத்து, அதனால் உன் எச்சில் குடித்து
அதனால் உடல் சூடாகி, அதனால் இன்னும் கொஞ்சம்
அதிகமாக கறுப்பாக எழுதும் உன் HB பென்சில்!

உன் அம்மா மடியில் உட்கார்ந்து கொண்டு
போட்டோகாரரை பூச்சாண்டி என நினைத்து
உன் அழுகையை அருமையாய் பதிவு செய்த
அந்த உன் மூன்று வயது புகைப்படம்!

இப்படி எனக்கு கவிதையாக தெரிந்தவைகளை எல்லாம்
உனக்குத் தெரியாமல் திருடி வைத்திருக்கிறேன்!
இவையெல்லாம் போக நீயாக எதாவது கொடுக்க நினைத்தால்

கடைக்கண் மோதல், என் தலை கோதல்,
கன்ன முத்தம், சினுங்கியபடி செல்ல அடி,
உன் விரலோடு என் விரல், என் பெயரை ரசித்துச் சொல்லும் உன் குரல்
இப்படி ஏதாவது ஒன்றை வேண்டுமானால்
என் கவிதைகளுக்கு பதிலாகக் கொடு!

உன்னை பார்க்கும் போதெல்லாம்
இதயம் நிரப்பிய உன் நினைவுகள்
உன்னை நினைக்கும் போதெல்லாம்
அடிவயிற்றில் எம்பிக் குதித்து
அணுகுண்டாய் வெடிக்கும் போது
என் அகிலமே சும்மா அதிருதுல்லே!!!!!!

அக்னி
29-06-2007, 12:39 AM
சிவாஜி விமர்சனம் கவிதையாயும் வந்துவிட்டதோ என்று வந்தேன்.
ஏமாற்றமாய் இருந்தாலும்...
கவிதை மாறுதலாய் சுவை தந்தது...

நான் உனக்காக எழுதிய கவிதைகளுக்காக
நீ பதில் கவிதை எல்லாம் எழுதவேண்டாம்!
நானே உன்னிடம் இருந்து பொறுக்கிவிட்டேன்!

கவிதைக்குப் பதிலை கேட்டவரே அள்ளுவதும்,

கடைக்கண் மோதல், என் தலை கோதல்,
கன்ன முத்தம், சினுங்கியபடி செல்ல அடி,
உன் விரலோடு என் விரல், என் பெயரை ரசித்துச் சொல்லும் உன் குரல்
இப்படி ஏதாவது ஒன்றை வேண்டுமானால்
என் கவிதைகளுக்கு பதிலாகக் கொடு!
மேலும் பதிலாக, இப்படிக் கேட்டதும்,

கவிதை ஏதோ ஒரு இனம்புரியாத இன்பத்தை,
நெஞ்சுக்குள் ஏற்படுத்துகின்றது...

பாராட்டுக்கள்...

பென்ஸ்
29-06-2007, 01:58 AM
லெனின்..

என்னதான் சொல்லுங்க காதல் கவிதை படிப்பதில் இருக்கும் சுகமே தனிதான்...

அந்த "சொர்க்க நரகம்" நல்ல சொல்லாடல்...

புத்தக முதல் பக்கம்
சிறுகுழந்தை போட்டோ..

கூடுதலாக

பாலோடு தேனும் கேட்கும் மனம்...

கவிதை படிக்கும் போது மனமும் "அதிருதில்லே"

சத்ரியன்
29-06-2007, 04:25 AM
நல்ல படைப்பு

தங்கவேல்
29-06-2007, 04:27 AM
காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல் என்றான் பாரதி..

காதல் இருக்கும் வரை
காதல் கவிதைகளும்
இருக்கத்தான் செய்கிறது.

காதல் என்பது
ஒரு அலங்காரம்.
அதை போலவே
காதல் கவிதைகளும்.
அலங்கார வார்த்தைகளில்
காதல் உணர்வுகள் துள்ளுகின்றன.
இருக்கட்டும்
காதலித்தவர்களுக்கு தான்
காதல் பற்றி தெரியும்.

அருமை அண்ணா...

aren
29-06-2007, 04:32 AM
நானும் ஏதோ சிவாஜி ஸ்டைலில் கவிதை இருக்கப்போகிறதோ என்று உள்ளே வந்தேன். இன்ப அதிர்ச்சி. அருமையான கவிதை. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சூரியன்
29-06-2007, 05:14 AM
நல்ல படைப்பு நண்பரே

அமரன்
29-06-2007, 07:08 AM
அற்புதம் லெனின்!
காதல் சொட்டும் கவிதை. கவிதைக்குப் பதிலாக நீங்களாகவே எடுத்துக்கொண்ட கவிதைகளின் பட்டியல், அவ பெயர் எழுதியநோட்டின் முதல்பக்கம், அவ பென்சில், மூன்று வயது புகைப்படம்...அடடா...காதலென்னா என்னன்னு தெரியாவன் கூட ரசிக்கக்கூடிய வரிகள் அவை. தொடரும் வரிகளின் நயம். கலகிட்டீங்க லெனென். என்ன் ஒரு குறை நீங்கள் இப்போதெல்லாம் அடிக்கடி மன்றம் வந்து கவிதைகள் தருவதில்லையே என்பதுதான். நன்றிகளுடன் பாராட்டுகளும் லெனின்.
அன்புடன்,

இனியவள்
29-06-2007, 07:32 AM
கவி அருமை வாழ்த்துக்கள்
என்னை ரசிக்க வைத்த கவிதைகளில் இதுவும் ஒன்று..
தொடரட்டும் உங்கள் பணி