PDA

View Full Version : லஞ்சம் என்றால்...

அக்னி
28-06-2007, 10:31 PM
லஞ்சம் என்றால்,

அஞ்சும் புத்தி,
கெஞ்சும் பயம்,
விஞ்சும் மனம்...

கஞ்சம் வசம்,
தஞ்சம் புகும்,
நெஞ்சம் வரும்...

கொஞ்சும் சுகம்,
பஞ்சம் விடும்,
மஞ்சம் சுடும்...

மிஞ்சும் சிறை,
வஞ்சம் தீர்க்கும்,
பஞ்சும் மிஞ்சா...

கொஞ்சம் லஞ்சம்... கொள்கின்..,
துஞ்சும் வாழ்வு... நீள்கும்...

நன்றி:− ஓவியா

ஓவியா
28-06-2007, 10:47 PM
யாராவது இந்த கவிதையை அக்குவேரா ஆணிவேரா பிரிச்சு எழுதுங்கப்பா, அப்பாலே விமர்சனம் போடுரேன்...

வர வர எனக்கு குருஜி பசங்க அதிமாகி போய்ட்டாங்களே.. என்ன சொல்லராங்கனு புரிய மாட்டேங்குதே!!

ஒரு விசயம் அக்கினியாரே, நீ'ர் கிடு கிடுனு மன்றத்திலே வளருகிறீர்.

அமரன்
29-06-2007, 07:44 AM
அஞ்சும் புத்தி,
கெஞ்சும் பயம்,
விஞ்சும் மனம்

லஞ்சம் என்றவுடன் புத்தி அஞ்சும் என்கின்றார்.(உண்மையாகவா?!) வேண்டாம் என்று பயத்தில் கெஞ்சும்.. ஆசை யாரை விட்டுது. விளைவுகள் மனதிற்குத் தெரிவதில்லையே. இருதியில் மனம் வெற்றி பெறுகின்றது. இவ்வரிகளை கொடுப்பவனுக்கும் வாங்குபவனுக்குமாக அமைத்துள்ளார். ஆனால் அடுத்த வரிகள் கொடுப்பவனுக்கு மட்டுமானது.

கஞ்சம் வசம்,
தஞ்சம் புகும்,
நெஞ்சம் வரும்

கொடுபவன் அதிகம் என்பான். வாங்குபவன் அதுவே குறைவானது என்பான். இறுதில் ஒரு முடிவுக்கு வந்து வந்துவிடுவார்கள்.அடுத்த வரிகள் லஞ்சத்தின் பின்னரான விளைவுகளை கூறுகின்றது.

கொஞ்சும் சுகம்,
பஞ்சம் விடும்,
மஞ்சம் சுடும்...

மிஞ்சும் சிறை,
வஞ்சம் தீர்க்கும்,
பஞ்சும் மிஞ்சா...
மாட்டுபப்ட்டால் சிறைதான் என்கிறார். (மாட்டுப்பாடம் லஞ்சம் வாங்குவது எப்படின்னு புத்தகம் ஏதும் இல்லையா)

வாழ்த்துகள் அக்னி. எடுத்துக்கொண்ட கரு அசத்தல். எனக்கு புரிந்த வகையில் சொல்லியுள்ளேன். தவறாயின் மன்னிக்க. சொல்லாடல் சிறப்பாக இருக்கின்றது. பாவித்த இடங்களில் சில சறுக்கல்கள் உள்ளன. எழுத எழுத சரியாகிவிடும்.
அன்புடன்

devendira
29-06-2007, 08:06 AM
உலகின் மூலை முக்குகள் எங்கு எதை யாரை எப்படி என்ன அனைத்துக்கும் விடையளிக்கும் வார்த்தயே லஞ்சம். கதவுகளை திறக்க வைக்கும் கள்ளச்சாவி

அக்னி
30-06-2007, 01:10 AM
வாழ்த்துகள் அக்னி. எடுத்துக்கொண்ட கரு அசத்தல். எனக்கு புரிந்த வகையில் சொல்லியுள்ளேன். தவறாயின் மன்னிக்க. சொல்லாடல் சிறப்பாக இருக்கின்றது. பாவித்த இடங்களில் சில சறுக்கல்கள் உள்ளன. எழுத எழுத சரியாகிவிடும்.
அன்புடன்

நன்றி அமரன்... விரிவான பின்னூட்டத்திற்கு...
கொஞ்சம் கோர்வையாக, ஒவ்வொரு பந்தியையும் பாருங்கள்...
நான் நினைத்தவற்றிலிருந்து, கொஞ்சமே தள்ளி நிற்கின்றீர்கள்...
சறுக்கல்களைத் திருத்திக்கொள்ள ஒவ்வொருவரினதும் பின்னூட்டங்களே,
படிப்பினைகள் தருகின்றன...
வேறு யாரும் விமர்சிக்கவில்லை என்றால், நான் நினைத்ததை தருகின்றேன்...
அதன் பின், சறுக்கல்களை... சுட்டிக்காட்டி புடம்போடுங்கள் என்னை...
நன்றி!

அக்னி
30-06-2007, 01:13 AM
உலகின் மூலை முக்குகள் எங்கு எதை யாரை எப்படி என்ன அனைத்துக்கும் விடையளிக்கும் வார்த்தயே லஞ்சம். கதவுகளை திறக்க வைக்கும் கள்ளச்சாவி

உலகில் இலஞ்சம் பொதுவாக, பரவி இருந்தாலும், ஒப்பீட்டளவில் எமது ஆசிய நாடுகளிலேயே மிகவும் புரையோடிப் போயுள்ளது...
கதவுகளைத் திறக்க வைக்கும் கள்ளச்சாவி...
நிதர்சனமான பார்வை...
நன்றி!

அக்னி
30-06-2007, 01:16 AM
யாராவது இந்த கவிதையை அக்குவேரா ஆணிவேரா பிரிச்சு எழுதுங்கப்பா, அப்பாலே விமர்சனம் போடுரேன்...

வர வர எனக்கு குருஜி பசங்க அதிமாகி போய்ட்டாங்களே.. என்ன சொல்லராங்கனு புரிய மாட்டேங்குதே!!

ஒரு விசயம் அக்கினியாரே, நீ'ர் கிடு கிடுனு மன்றத்திலே வளருகிறீர்.

நிச்சயமாக நான் விமர்சனம் எதிர்பார்ப்பவர்களில் நீங்களும் ஒருவர்...
மன்றத்தில், நான் வளர முக்கிய காரணமே,
மன்ற முன்னோடிகளின் ஊக்குவிப்பும், வழிகாட்டலும், பாசமுமே...
என்றும் கடமைப்பட்டிருக்கின்றேன்...

ஆதவா
30-06-2007, 07:48 AM
நல்ல விளையாட்டோடு கருத்தடங்கிய கவிதை... வாழ்த்துக்கள் அக்னி.... அலுவலகமாயிருந்திருந்தால் விமர்சனம் இன்னும் அதிகம் இட்டிருப்பேன்.. மன்னிக்க.... இந்த மாதிரி கவிதைகளை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்...

சூரியன்
30-06-2007, 09:40 AM
வரிகளில் லஞ்சத்தை இழிக்க வேண்டும் என்ற என்னம் வெளிப்படுகிறது

ஓவியன்
30-06-2007, 11:13 AM
அக்னி!

வரிகள் கொஞ்சம் புரிகிறது, கொஞ்சம் உதைக்கிறது வருகிறேன் விரிவான விமர்சனத்துடன் பின்னர்.

அக்னி
30-06-2007, 11:27 AM
நல்ல விளையாட்டோடு கருத்தடங்கிய கவிதை... வாழ்த்துக்கள் அக்னி.... அலுவலகமாயிருந்திருந்தால் விமர்சனம் இன்னும் அதிகம் இட்டிருப்பேன்.. மன்னிக்க.... இந்த மாதிரி கவிதைகளை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்...
முயற்சிக்கின்றேன் ஆதவா!
நீங்கள் காட்டிய பாதையில் பயணித்து சிகரம் தொட முடியாவிட்டாலும்,
தொடர்ந்து பயணிக்க முயற்சிப்பேன்...

வரிகளில் லஞ்சத்தை இழிக்க வேண்டும் என்ற என்னம் வெளிப்படுகிறது
சமூகத்தை அழிக்கும் சாபக்கேடு...

அக்னி!

வரிகள் கொஞ்சம் புரிகிறது, கொஞ்சம் உதைக்கிறது வருகிறேன் விரிவான விமர்சனத்துடன் பின்னர்.
வரவேண்டும்....
விமர்சனங்களினால் எனது தவறுகள் திருத்தியமைக்கப்படும் என்பதற்காகவே
சுயநலத்தோடு எதிர்பார்க்கின்றேன்...

நன்றி!

ஷீ-நிசி
01-07-2007, 03:24 PM
அக்னி! நல்ல வித்தியாசமான முயற்சி... தொடர்ந்து ஒரே உச்சரிப்பைக் கொண்ட வார்த்தைகளை வைத்து இவ்வளவு பெரிய கவிதை.. வாழ்த்துக்கள்!

ஓவியன்
01-07-2007, 03:36 PM
இங்கே அக்னி!, லஞ்சம் வாங்குபவரது பார்வையில் இந்தக் கவியை வடித்துள்ளார்!.

அஞ்சும் புத்தி, − லஞ்சம் வாங்காதே என்று புத்தி சொல்லும்!
கெஞ்சும் பயம், − லஞ்சம் வாங்கி மாட்டினாய் மவனே நீ சங்கு தான் என்று பயம் கெஞ்சும்!
விஞ்சும் மனம்... − முடிவில் மனம் பயத்தை விஞ்சி லஞ்சம் வாங்கச் சொல்லும்!.
அக்னி!
இங்கே எனக்கொரு சந்தேகம் அதாவது மனமும் புத்தியும் வேறு வேறா?
மனதைக் கட்டுப் படுத்துவதே புத்தியல்லவா?

கஞ்சம் வசம் −
தஞ்சம் புகும் −
நெஞ்சம் வரும்...

கஞ்சனிட*ம் இருப்பதைப் போன்ற மனது லஞ்சம் வாங்குபவனிடம் வந்து வாய்க்கும்!

கொஞ்சும் சுகம், − சுகம் கொஞ்சும், ஏன் ஊஞ்சல் கூட ஆடும்!
பஞ்சம் விடும், − வீட்டிலே பஞ்சம் என்ற சொல்லே இல்லாமற் போகும், லஞ்சம் தந்த பொன்னாலும் பொருளாலும்!
மஞ்சம் சுடும்... − என்ன தான் இருந்தாலும் உழைப்பால் வராத பணமல்லவா (லஞ்சத்தால் வந்தது), ஆதலால் தூக்கம் கெடும்.
மிஞ்சும் சிறை − இறுதியில் மிச்சமாகக் கிடைப்ப*து சிறை வாழ்வு! (மாட்டிக் கொண்டால், மாட்டி வைத்தால்!)
வஞ்சம் தீர்க்கும் − வாங்கிய லஞ்சம் சிறையாக, தண்டனைகளாக வஞ்சம் தீர்க்கும்!.
பஞ்சும் மிஞ்சா... − இறுதியில் வீட்டில் பஞ்சு கூட மீதமிருக்காது, எல்லாவற்றையும் அரச அதிகாரிகள் அள்ளிப் போய்விடுவார்களே!!:D
கொஞ்சம் லஞ்சம்... கொள்கின்..,
துஞ்சும் வாழ்வு... நீள்கும்... − லஞ்சம் கொஞ்சமென்றாலும் வாங்கினால் துன்பப்படுத்தும் வாழ்வே கிடைக்கும்.

சரியா அக்னி?

என்னால் முடிந்த வரை விளக்கினேன், தவறிருப்பின் பொறுத்தறுளுக....:icon_03:

namsec
01-07-2007, 04:29 PM
யாப்பா எத்தனை வார்த்தைகள் என்னால் பிரிக்க முடியாது

அக்னி
02-07-2007, 11:44 AM
அக்னி! நல்ல வித்தியாசமான முயற்சி... தொடர்ந்து ஒரே உச்சரிப்பைக் கொண்ட வார்த்தைகளை வைத்து இவ்வளவு பெரிய கவிதை.. வாழ்த்துக்கள்!
ஒரு சிறு முயற்சி செய்தேன்...
வாழ்த்துக்கு நன்றி!

இங்கே அக்னி!, லஞ்சம் வாங்குபவரது பார்வௌயில் இந்தக் கவியை வடித்துள்ளார்!.

அஞ்சும் புத்தி, − லஞ்சம் வாங்காதே என்றும் புத்தி!
கெஞ்சும் பயம், − லஞ்சம் வாங்கி மாட்டினான் மவனே நீ சங்கு தான் என்று பயம் கெஞ்சும்!
விஞ்சும் மனம்... − முடிவில் மனம் பயத்தை விஞ்சி லஞ்சம் வாங்கச் சொல்லும்!.
அக்னி!
இங்கே எனக்கொரு சந்தேகம் அதாவது மனமும் புத்தியும் வேறு வேறா?
மனதைக் கட்டுப் படுத்துவதே புத்தியல்லவா?

கஞ்சம் வசம் −
தஞ்சம் புகும் −
நெஞ்சம் வரும்...

கஞ்சனிட*ம் இருப்பதைப் போன்ற மனது லஞ்சம் வாங்குபவனிடம் வந்து வாய்க்கும்!

கொஞ்சும் சுகம், − சுகம் கொஞ்சும், ஏன் ஊஞ்சல் கூட ஆடும்!
பஞ்சம் விடும், − வீட்டிலே பஞ்சம் என்ற சொல்லே இல்லாமற் போகும், லஞ்சம் தந்த பொன்னாலும் பொருளாலும்!
மஞ்சம் சுடும்... − என்ன தான் இருந்தாலும் உழைப்பால் வராத பணமல்லவா (லஞ்சத்தால் வந்தது), ஆதலால் தூக்கம் கெடும்.
மிஞ்சும் சிறை − இறுதியில் மிச்சமாகக் கிடைப்ப*து சிறை வாழ்வு! (மாட்டிக் கொண்டால், மாட்டி வைத்தால்!)
வஞ்சம் தீர்க்கும் − வாங்கிய லஞ்சம் சிறையாக, தண்டனைகளாக வஞ்சம் தீர்க்கும்!.
பஞ்சும் மிஞ்சா... − இறுதியில் வீட்டில் பஞ்சு கூட மீதமிருக்காது, எல்லாவற்றையும் அரச அதிகாரிகள் அள்ளிப் போய்விடுவார்களே!!:D
கொஞ்சம் லஞ்சம்... கொள்கின்..,
துஞ்சும் வாழ்வு... நீள்கும்... − லஞ்சம் கொஞ்சமென்றாலும் வாங்கினால் துன்பப்படுத்தும் வாழ்வே கிடைக்கும்.

சரியா அக்னி?

என்னால் முடிந்த வரை விளக்கினேன், தவறிருப்பின் பொறுத்தறுளுக....:icon_03:
ஓவியரே! கை கொடுங்கள். நான் நினைத்து வடித்த வரிகளை பிசறாமல் தந்துவிட்டீர்கள்...
உண்மையிலேயே சந்தோஷம் கொள்பவன் நானே...
மிக்க நன்றி!
பொதுவாக, புத்தி ஆசைப்படுவதாகக் கூறுவதில்லை.
ஆசை கொள்வது மனமே.
அதனாற்தான் அப்படி எழுதினேன்...
மீண்டும் நன்றிகள்!

யாப்பா எத்தனை வார்த்தைகள் என்னால் பிரிக்க முடியாது
அதான் அக்குவேறு ஆணிவேறாக ஓவியன் பிரித்து விட்டாரே...

ஓவியன்
02-07-2007, 04:07 PM
ஓவியரே! கை கொடுங்கள். நான் நினைத்து வடித்த வரிகளை பிசறாமல் தந்துவிட்டீர்கள்...
உண்மையிலேயே சந்தோஷம் கொள்பவன் நானே...
மிக்க நன்றி!
பொதுவாக, புத்தி ஆசைப்படுவதாகக் கூறுவதில்லை.
ஆசை கொள்வது மனமே.
அதனாற்தான் அப்படி எழுதினேன்...
மீண்டும் நன்றிகள்!...

சந்தோசம் அக்னி!

எங்கே நான் சொல்வது தவறாகப் போய்விடுமோ என்று பயந்து பயந்து தான் எழுதினேன்!.

அக்னி
02-07-2007, 06:53 PM
உங்கள் கோணம், வித்தியாசமான பார்வை தந்தாலும் கூட, அது எமது பார்வைத்திறனை ஆழமாக்குமே தவிர மூடிப்போகாதுதானே...
பிறகென்ன தயக்கம்..?

இளசு
02-07-2007, 07:24 PM
கவிக்கோ அலசிய கலைஞரின் கவிதையில் வரிகள் எல்லாம்
எதுகையும் சீரும் அளவாய் பொருளோடு அமைந்த விதம்.. அழகு..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6627

அப்படி ஓர் எதுகை அழகும் ஆழ்ந்த பொருளும்
(நன்றி ஓவியன்) இந்த அக்னித் தெறிப்பில் கண்டேன்..

பாராட்டுகள் அக்னி!

ஓவியன்
02-07-2007, 07:34 PM
கவிக்கோ அலசிய கலைஞரின் கவிதையில் வரிகள் எல்லாம்
எதுகையும் சீரும் அளவாய் பொருளோடு அமைந்த விதம்.. அழகு..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6627

அப்படி ஓர் எதுகை அழகும் ஆழ்ந்த பொருளும்
(நன்றி ஓவியன்) இந்த அக்னித் தெறிப்பில் கண்டேன்..

பாராட்டுகள் அக்னி!

அண்ணா!

இதில் என்னையும் இணைத்து விட்டீர்களே?

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள்!.

அக்னி
02-07-2007, 08:40 PM
பாராட்டுகள் அக்னி!

நன்றி அண்ணா...

இளசு
02-07-2007, 08:45 PM
பெருக்கத்தில் வேண்டுமாம் அடக்கம்!

வள்ளுவர் சொன்னதை
அடக்கி வாசிக்கும் ஓவியனிடமும்
(சுவைத்தவன் உரித்துத் தந்த கரங்களைப் பாராட்டினேன் ஓவியன்)
புகழ்ந்த வரிகளை நீக்கி மேற்கோளிட்ட அக்னியிடமும் காண்கிறேன்..

இந்த அடக்கம் இன்னும் உங்களை உயர்த்தும் !
அண்ணனின் வாழ்த்துகள்!!

அக்னி
04-07-2007, 03:56 PM

புகழ்ந்த வரிகள் என்னை பெருமை கொள்ள வைத்தது உண்மைதான்...
ஆனால், அந்த புகழ்ச்சிக்கு நான் தகுதியானவனா என்ற வெட்கமே,
வரிகளை நீக்கிவிட காரணம் ஆனது...
சிறு மாற்றங்களையும் அவதானிக்கும் உங்கள் கூர்மையில் வியக்கின்றேன்...

பென்ஸ்
04-07-2007, 05:58 PM
ஒரு கல்லை எடுத்து அதில் சிற்பம் வடிக்க கண்டிருக்கிறேன்
மண்ணை குழைத்து அதில் தன் வடிவுக்கேற்ப கொண்டு வரகண்டிருக்கிறேன்.
ஒரே வடிவிலான சிறு கற்க்களை இனைத்து ஒரு சிலை வடிக்க திறமை வேண்டும், அதி விட சொற்க்களை இனைக்கும் திறனும்....

பலமாக வந்திருக்கிரது...

கவிதை வாசித்து எனக்காக ஒரு அர்த்தம் ஏற்படுத்தி கொண்டேன்...
பின்னூட்டங்கள் வாசித்து லயித்தேன்...
ஓவியன் என்னை ஆச்ச*ரியத்தில் மூழ்கடித்துவிட்டார்... கவிதையை உள்வாக்குவதுமில்லாமல் கவிஞன் மனஅலைவரிசையில் நின்று கவிதையை ரசிக்க தனி திறமை வேண்டும்... ஓவியன் அது உங்களிடம் உள்ளது. இது இந்த கவிதையில் மட்டுமல்ல, பல கவிதைகளில் நான் கவனித்து வரும் ஒரு நிலை....

கவிதை எழுதியவருக்கும்
அதை திறம்பட விளக்கியவருக்கும் ...

என் அன்பும் வாழ்த்துகளும்....

அக்னி
04-07-2007, 07:15 PM
மிக்க நன்றி பென்ஸ் அவர்களே...