PDA

View Full Version : தமிழ் மன்றத்தில்



சூரியன்
28-06-2007, 02:15 PM
:music-smiley-012: தமிழ் மன்றத்தில் இது என் 400வது பதிப்பு :music-smiley-012:


மழையில் பார்த்தேன்
அவளை!

மழையழுவதை பார்த்து
என்னை நினைக்காத
அவளை

மழை நினைக்க வத்தது..........

மனோஜ்
28-06-2007, 02:18 PM
காதலி நினைவு மழையில் அருமை நண்பரே

அமரன்
28-06-2007, 02:21 PM
பாராட்டுகள் சூரியன். நானூறாவது பதிவு ஒரு கவிதையாக அமைந்துள்ளது. கவிதை சிறப்பாக இருந்தாலும் இன்னும் மெருகேற்றலாம். இதே கவிதையை வேறு எப்படி மாற்றலாம் என்று சிந்தியுங்கள். புதிய வடிவில் இக்கவிதை கிடைக்கும்.
அன்புடன்

சூரியன்
28-06-2007, 02:27 PM
சரி நண்பரே

ஷீ-நிசி
28-06-2007, 03:24 PM
சூரியனின் கவிதை முயற்சிக்கு என் வரவேற்புகள்.. விரைவில் நீங்களும் இம்மன்றத்தின் கவியாக வலம் வருவீர்கள்...

மழையில் பார்த்தேன்
அவளை!

மழையழுவதை பார்த்து
என்னை நினைக்காத
அவளை

மழை நினைக்க வத்தது..........

முதலில் நான் உங்களை பாரட்டுகிறேன்.. முதல் கவிதையிலேயே எதுகை மோனை (அவளை) அமைக்க நீங்கள் முயற்சித்ததற்கு. கவிதையில் நீங்கள் கூறவந்த கருத்து எனக்கு புரியாதலால் நான் கொஞ்சம் மாற்றியுள்ளேன்... இப்படி...


மழையில் பார்த்தேன்
அவளை!

மனதில் தோன்றியது
கவலை!

நான் மழையாகிட கூடாதா?!


வார்த்தைகளை மட்டும் கொஞ்சம் யோசித்தால் போதும்.. கொஞ்சம் கற்பனை.... கவிதை ரெடி.. வாழ்த்துக்கள்!

சூரியன்
28-06-2007, 03:28 PM
நன்றி நிசி

ஓவியா
28-06-2007, 03:37 PM
சூரியன், 400 பதிவுக்கு வாழ்த்துக்கள்.

மழை இணைக்காத காதலர்கள் கிடையாது, (ஹி ஹி ஹி)
அது போல் மழை கண்டு காதலையும், காதலியையும், காதலனையும் நினைக்காத காதலர்களும் கிடையாது.............கவிதை நன்று.

ஆதவா
30-06-2007, 07:24 AM
ஷீநிசி சொன்னமாதிரி வார்த்தைகளை மாற்றி இட்டால் இன்னும் அழகு பெறும்.... உங்கள் கவிதை முயற்சி மிகவும் மிகவும் அருமை.. மேன்மேலும் எழுதுங்கள்.