PDA

View Full Version : தீவிர(த)மாய்



அமரன்
27-06-2007, 06:42 PM
கனவுகள் பூக்கும்
காலை வேளையில்
புயலென வந்தாள்
புதினப்பெண்ணாள்

கல்லூரி சாலையில்
குண்டு வெடிப்பு
கல்யாண சாலையில்
தீ விபத்து..

விளையும் கனவுகளை-நடு
நிலையிலே கலைத்து
தீவிரவாதமாய்..
குலைய வைக்கிறாள்


கலையான அரசியலை
வலைபின்னி அரிக்கிறாள்
தீவிர(த)மாய்
கையூட்டு அரசியவள்

அன்புரசிகன்
27-06-2007, 06:51 PM
உணர்வின் மீறல்
உரிமை மறுப்பு
தீவிரம் ஆனால்
தீவிரம் ஆதல்
தவிர்க்க ஆகாதது

கனவுகளுக்கு தேவை
நனவாக்கும் தீவிரம்
அரசியல் சேவைக்கு
கனவாகவே போகிறது
அரசியல் உண்டு
தீவிரவாதத்துடன்
அரசின் மமதை
மக்களை வாட்டி
மக்கள் தீவிரம்
இவற்றில் தீவிரம்
நாட்டின் தீவிரம்
வயிற்றில் தீ விரதம்.

அமரன்
27-06-2007, 06:57 PM
நன்றி அன்பு. அழகான பின்னூட்டம். கவிதை வடிவிலேயே அமைந்து சிறப்பாக்குகின்றது. தீவிரமாக விளையாடியுள்ளீர்கள் தமிழில்.

அமரன்
27-06-2007, 07:37 PM
கனவுகளுக்கு தேவை
நனவாக்கும் தீவிரம்
.

தனமதனை துணைகொண்டு−துர்
தானைதனை முன்னிறுத்தி
வினைகள் பல புரிந்து
காண விடுவதில்லை−என்
கனவு தேசமதை
தீவிரமாய் நான் இருக்க
தீ வரத்தில் அணைக்கிறனர்

அன்புரசிகன்
28-06-2007, 09:18 AM
தீவிரத்தை தணிக்க
தீயை அணைக்க
கரும் வேங்கைகள்
தீயை தாங்க
விடியலின் மேகங்கள்
நம்மில் மூட
பார்ப்போம் சுதந்திரம்
வரும் அது
தீவிரைமாய்.

அமரன்
28-06-2007, 11:22 AM
பார்ப்போம் சுதந்திரம்
வரும் அது
தீவிரைமாய்.

போராடிப் பெற்ற
சுதந்திரக் காற்றில்
வேரோடி உள்ளன
தந்திர நரிகளின்
நச்சு மூச்சுகள்...

விரதமிருந்து பெற்றது
விரையமாகிறது.....

அன்புரசிகன்
28-06-2007, 11:30 AM
அரிக்கு தேவை நரி
அதற்கு தேவை வரி
இதுவே அதற்குச்சரி

தீவிர மமதை அரசிடம்
தீவிர ஆயுதம் வேங்கையிடம்
வைப்போம் பூசை அதனிடம்
கேட்ப்போம் வரம் மன்னனிடம்
காத்திடுவான் நம்மை அரியிடம்

சூரியன்
28-06-2007, 02:41 PM
அருமையான வரிகள் அமரன்

அமரன்
28-06-2007, 02:56 PM
நன்றி சூரியன்.

அமரன்
28-06-2007, 07:13 PM
அரிக்கு தேவை நரி
அதற்கு தேவை வரி
இதுவே அதற்குச்சரி


அரசியல் நரிகள் சில
விவாசய வரிகள் இட்டு
அட்டையாய் உரிஞ்சுகின்றன்
உழவன் உழைப்பை..

அக்னி
28-06-2007, 07:44 PM
அமரனின் கவிதையும்...
அன்புரசிகனின் இணைக்கவிதையும்...
அழகோ... அழகு...
பாராட்டுக்கள்...

அமரன்
28-06-2007, 07:46 PM
அமரனின் கவிதையும்...
அன்புரசிகனின் இணைக்கவிதையும்...
அழகோ... அழகு...
பாராட்டுக்கள்...

நன்றிங்க அக்னி. ஆனாலும் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது கவிதையின் கருவை உங்கள் பாணியில்.

இணைய நண்பன்
28-06-2007, 09:33 PM
அமரன் வழங்கிய கவிவரிகளும் அதற்கு பின்னூட்டம் வழங்கிய அன்புரசிகனின் கவிவரிகளும் நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்

அக்னி
28-06-2007, 11:15 PM
எழுத்துக்கள் துணைவனாய்...
செய்திகள் கரு...
உண்மைகள் மகவு...
பெருமையாய் அன்று...
பல கைகள் அலங்கரித்தன...

அரசியல் வன்புணர்வில்
செய்திகள் சிதைவு...
உண்மைகள் கனவு...
சிறுமையாய் இன்று...
பல கைகள் கத்தரித்தன...

பத்திரிகைகள்..!

அமரன்
29-06-2007, 07:19 AM
அமரன் வழங்கிய கவிவரிகளும் அதற்கு பின்னூட்டம் வழங்கிய அன்புரசிகனின் கவிவரிகளும் நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்

நன்றிகள் பல இக்ராம். தொடர்ந்து கவிதைகளைப்படித்து பின்னூட்டமிட்டு வருகின்றிர்கள். நன்றி

அமரன்
29-06-2007, 08:55 AM
எழுத்துக்கள் துணைவனாய்...
செய்திகள் கரு...
உண்மைகள் மகவு...
பெருமையாய் அன்று...
பல கைகள் அலங்கரித்தன...

அரசியல் வன்புணர்வில்
செய்திகள் சிதைவு...
உண்மைகள் கனவு...
சிறுமையாய் இன்று...
பல கைகள் கத்தரித்தன...

பத் திரி கைகள்..!


புதினங்கள் தாங்கிய
புதினத்தாள்கள்
அழகுதமிழ் மொழியில்
செப்பிட மறந்ததால்
பத்தாக திரித்து
அக்னிக்கைகளால்
சுடுகின்றனவோ..!?

அன்புரசிகன்
29-06-2007, 09:04 AM
பத்திரிக்கைகள்
பத்தையும் திரிக்க
சத்தியங்களை திரிக்க
யாரருண்டு வையகத்தில்

விகடன்
29-06-2007, 09:26 AM
அரசியல் நரிகள் சில
விவாசய வரிகள் இட்டு
அட்டையாய் உரிஞ்சுகின்றன்
உழவன் உழைப்பை..

மூட்டைப் பூச்சுகளும்
மலை நாட்டு அட்டைகளும்
இஞைபாக்கம் அடைந்தது
இந்தவழி பிழைப்பிற்குத்தானே

அமரன்
29-06-2007, 09:28 AM
மூட்டைப் பூச்சுகளும்
மலை நாட்டு அட்டைகளும்
இஞைபாக்கம் அடைந்தது
இந்தவழி பிழைப்பிற்குத்தானே

விராடன் கவிதை அருமை. அதுவும் மலை நாட்டு அட்டைகள் எனும் பதத்தில் இரு கருத்துகள் அடங்கியுள்ளது. மலைநாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும்பலர் ஈழத்தில் உள்ளனரே! பாராட்டுகள்
நட்புடன்

அமரன்
29-06-2007, 09:30 AM
பத்திரிக்கைகள்
பத்தையும் திரிக்க
சத்தியங்களை திரிக்க
யாரருண்டு வையகத்தில்

உண்மை அழிவதில்லை அன்பு. கவிதையில் அதை சிறப்பாக சொன்ன உங்களுக்கு பாராட்டுகள்.
நட்புடன்,

ஆதவா
30-06-2007, 07:36 AM
இப்பொழுதெல்லாம் பின்னூட்டங்கள் கவிதையாலே நிரப்பப்படுவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது... நல்ல கவிதை அமரன். அன்பு ரசிகரின் பதில் கவிதை ரசிக்க வைக்கிறது அன்பாக..... கலக்குங்க மக்களே!!

அமரன்
30-06-2007, 07:38 AM
இப்பொழுதெல்லாம் பின்னூட்டங்கள் கவிதையாலே நிரப்பப்படுவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது... நல்ல கவிதை அமரன். அன்பு ரசிகரின் பதில் கவிதை ரசிக்க வைக்கிறது அன்பாக..... கலக்குங்க மக்களே!!

நன்றி ஆதவா. கவிதைக்கான பின்னூட்டங்களில் கவிதைகள் இருக்கவேண்டும் என்பது எனது கனவு. அது கொஞ்சம் கொஞ்சமாக நனவாகுவதை நினைக்க சந்தோசமாக உள்ளது.

ஓவியன்
30-06-2007, 10:00 AM
கனவுகள் பூக்கும்
காலை வேளையில்
புயலென வந்தாள்
புதினப்பெண்ணாள்

கல்லூரி சாலையில்
குண்டு வெடிப்பு
கல்யாண சாலையில்
தீ விபத்து..

விளையும் கனவுகளை-நடு
நிலையிலே கலைத்து
தீவிரவாதமாய்..
குலைய வைக்கிறாள்


கலையான அரசியலை
வலைபின்னி அரிக்கிறாள்
தீவிர(த)மாய்
கையூட்டு அரசியவள்

தீது,
இது தகா!
என்றெழுதின் நாளை
வரா!
அந்த புதினப் பெண்ணாள்!
இரவோடிரவு
தீக்கிரையாக்கி
செய்தித் தாளையே
செய்தியாகி விடுவார்!

என்ன?, ஏதென்றால்?
தீவிரமாய் ஆதரிக்கின்றனர்
தீவீரவாதத்தை!!!
பதில் தீயாய் வரும்!.
எது தீவிரவாதம்
என்ற கேள்வி
மனதில் எழ*
இரண்டு நாள்
யோசித்துவிட்டு
மூன்றாம் நாள்
அதையும்
மறந்து விடுவான்!
எந்த சாராசரி மனிதனும்.

சுகந்தப்ரீதன்
30-06-2007, 10:07 AM
எங்கே கிடைக்கிறதோ உங்களுக்கெல்லாம் நேரம்!
என்னால் முடியவில்லையே இப்படி எல்லாம் எழுத!

ஓவியன்
30-06-2007, 10:14 AM
சுகந்தா!

நிச்சயமாக உங்களால் முடியும்!, எழுதுவதற்கு நேரம் அதிகமாகத் தேவையில்லை, கருவைக் பிடித்துச் செப்பனிடத்தான் நேரம் தேவை அதனை மனதிலேயே செய்யலாம், பிறகென்ன நேரம் கிடைக்கும் போது எழுத்து வடிவம் கொடுத்தால் போதும்!

நீங்களும் அசத்தலாம்!

நீங்களும் அசத்த வாழ்த்துக்கள்!

அமரன்
30-06-2007, 10:22 AM
எங்கே கிடைக்கிறதோ உங்களுக்கெல்லாம் நேரம்!
என்னால் முடியவில்லையே இப்படி எல்லாம் எழுத!

சுகந்தா நம்ம தளத்தில் உள்ள கவிதைப்பட்டறை (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=85) என்னும் பகுதியைப் பாருங்கள். ஆழ்ந்து படியுங்கள். கிடைக்கும் ஒரு கணத்திலே பல கவிதைகள் வடிக்கும் திறன் உங்களிடம் குடி வந்து விடும். தொடர்ந்து மன்றத்தில் உள்ள கவிதைகளையும் படியுங்கள். எல்லோருக்குள்ளும் திறமை இருக்கு. அதை உரச தீக்குச்சிகள்தான் தேவை. இங்கே பல தீக்குச்சிகள் இருக்கின்றன. பயன்படுத்துங்கள். உங்களுடன் கவிச்சமராடும் காலத்தை எதிர்நோக்கிக்காத்திருக்கும் அன்பு நண்பண்,

ஷீ-நிசி
01-07-2007, 03:27 PM
தீவிர வாதமாய் வரிகள் அமரன்...

புரட்சி கவிதை போலுள்ளது... வாழ்த்துக்கள்!

அமரன்
01-07-2007, 03:36 PM
தீவிர வாதமாய் வரிகள் அமரன்...

புரட்சி கவிதை போலுள்ளது... வாழ்த்துக்கள்!

ஆமாம் நிசி. சிலேடையான பின்னூட்டத்தை ரசித்தேன். நன்றி..