PDA

View Full Version : ஒலி வடிவில் - போர்க்களமா வாழ்க்கை!



ஷீ-நிசி
27-06-2007, 03:07 PM
நண்பர்களே! போர்க்களமா வாழ்க்கை என்ற என் கவிதையை ஒலி வடிவில் மாற்றி தந்துள்ளேன்.. உங்கள் கருத்துக்களை கூறுங்கள்...

அன்புடன்

ஷீ−நிசி

போர்க்களமா வாழ்க்கை! (http://boomp3.com/m/8bd960efb270)



போர்க்களமா வாழ்க்கை?

போர்க்களமா வாழ்க்கை?
பார்க்கலாமே ஒரு கை!

சோந்து விடாதே!
இதுதானா வாழ்க்கை என்று
கோழைகளின் பட்டியலில்
சேர்ந்து விடாதே!

இல்லையென்பார்,
இருப்பதைக் கொடுப்பாய்;
இன்னமும் என்பார்
இதுதான் முடியும் என்பாய்!

மறுகணமே
கஞ்சப் பிரபு என
புறம் கூற புரண்டு நிற்கும்
பஞ்சப் பிரபுவின் நாக்கு!

கொடுத்ததை
திரும்பக் கேட்டால்
கோமாளி என்பான்;
இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ
ஏமாளி என்பான்!

நாம் இழைக்கும்
தவறுகளிலே
கதைப் பேசி
பிழைக்கும் கூட்டங்கள்

இந்த
நயவஞ்சக நாக்கினைக் கண்டு;
கதற வேண்டாம் -உன்மனம்
பதற வேண்டாம்!

வீணாய்
ஒலித்துக்கொண்டிருக்கும்
ஓநாய்களின்
ஒப்பாரி சத்தமிது..

தானாய்
குறைந்து விடும்;
ஒரு நாள் காணாமலே
கறைந்து விடும்!

கருணையற்ற கூட்டம்
காணும்படி,
கண்ணீரை மட்டும்
சிந்தி விடாதே!

இவர்கள் -உன்
விழி நீரிலே விளையாடும்
விந்தை மனிதர்கள் -உன்
கண்ணீரிலே கவிபாடும்
கந்தை மனிதர்கள்!

வில்லில் பூட்டின
அம்புக்கும்,
அவர்கள் நாவிலே
பிறக்கும் வார்த்தைகளுக்கும்,
அதிக வித்தியாசமில்லை!

இரண்டுமே
காயப்படுத்திவிட தயாராய்;

அம்பின் கூர்மையும்
மழுங்கி விடலாம்;
வம்பளக்கும் அவர்களின்
நாவுகளோ ஒருநாளும்
மழுங்கி விடாது!

புறம் கூறிடும்
வஞ்சக கூட்டத்தின்;
நிறம் மாறிடும் நாட்கள்
வெகு தொலைவில்
அல்ல தோழா!

நன்றி கெட்ட
மனிதனின் நாக்கு;
அப்படி இப்படி
புரளத்தான் செய்யும்!

அவனுக்கும்
ஒரு கூட்டம்;
எப்படி எப்படியோ
திரளத்தான் செய்யும்!

போகட்டும்
அவர்களிடம் இல்லாத,
ஆனால் உன்னிடம் இருக்கும்
ஒரே ஆயுதம் மன்னிப்பு!

இவர்களைப் பற்றி
இனி மனதிலே
சிந்திக்கவும் வேண்டாம்!

மறந்தும் கூட
நிந்திக்கவும் வேண்டாம்!

காலம் கண் போன்றது!
கவனித்துக்கொண்டே இருக்கிறது!!

ஷீ-நிசி

அமரன்
27-06-2007, 03:13 PM
கேட்டேன் நிஷி. அருமையாக இருக்கின்றது. உங்கள் குரலா. நல்ல குரல். கவிதையின் கருவுக்கேற்றாற்போல் குரலில் உணர்ச்சி காட்டியுள்ளீர்கள். பாராட்டுகளும் நன்றிகளும்.

அறிஞர்
27-06-2007, 03:17 PM
நல்ல தளம் ஷி−நிசி... இது பற்றி மற்றவர்களுக்கும் கூறலாமே..
−−−−−−−−−−−−−
கவிதையும்.. தங்கள் குரலும் அருமை...

குரலில் கொஞ்சம் மென்மை தெரிகிறது....

கணீரென்று கவிதை சொல்லுங்கள்.. இன்னும் சிறப்பாக இருக்கும்.

அமரன்
27-06-2007, 03:19 PM
நல்ல தளம் ஷி−நிசி... இது பற்றி மற்றவர்களுக்கும் கூறலாமே..
−−−−−−−−−−−−−
கவிதையும்.. தங்கள் குரலும் அருமை...

குரலில் கொஞ்சம் மென்மை தெரிகிறது....

கணீரென்று கவிதை சொல்லுங்கள்.. இன்னும் சிறப்பாக இருக்கும்.

உன்மைதான் அறிஞரே. சொல்ல நினைத்தேன். ஏதோ தயக்கம் விட்டுவிட்டேன்..

ஷீ-நிசி
27-06-2007, 03:24 PM
நன்றி அமரரே!

நன்றி அறிஞரே! முதல் தடவையா இதுபோல் ஒலி வடிவில் பதிந்தேன்.. இனி மாற்றிக்கொள்கிறேன் அறிஞரே!

http://boomp3.com

mp3 வடிவிலான ஃபைல்களை இந்த தளத்தில் சேமித்து நண்பர்களுக்கு லிங்க் கொடுக்கலாம் நண்பர்களே!

பாரதி
27-06-2007, 03:27 PM
மன்னிக்கவும் ஷீ_நிசி. இப்போது இருக்கும் இணையத்தொடர்பால் என்னால் உங்கள் கவிதைகளை கேட்க இயலவில்லை. அடுத்த மாதம் கேட்க முயற்சி செய்கிறேன். உங்கள் முயற்சி முழு வெற்றியடைய வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
27-06-2007, 03:28 PM
மன்னிக்கவும் ஷீ−நிசி. இப்போது இருக்கும் இணையத்தொடர்பால் என்னால் உங்கள் கவிதைகளை கேட்க இயலவில்லை. அடுத்த மாதம் கேட்க முயற்சி செய்கிறேன். உங்க*ள் முய*ற்சி வெற்றிய*டைய* வாழ்த்துக்க*ள்.


பரவாயில்லை பாரதி நண்பரே! பொறுமையாக இணைய இணைப்பு சரியானபின் கேளுங்கள். அவசியம் விமர்சனமிடுங்கள்....

பாரதி
27-06-2007, 03:33 PM
ஆஹா....இங்கே எனது இணைய இணைப்பு வேகம் வெறும் 12 Kbps மட்டுமே...! இங்கே சரியாவது சாத்தியமில்லாத விசயம். தமிழகம் வந்தபின்னர் கேட்டு சொல்கிறேன்.

ஷீ-நிசி
27-06-2007, 03:48 PM
ஆஹா....இங்கே எனது இணைய இணைப்பு வேகம் வெறும் 12 Kbps மட்டுமே...! இங்கே சரியாவது சாத்தியமில்லாத விசயம். தமிழகம் வந்தபின்னர் கேட்டு சொல்கிறேன்.


ஆனாலும் நீங்க ரொம்ப பொறுமையா ப்ரெளஸ் பன்றீங்கன்னு நினைக்கிறேன்...:animal-smiley-026: தமிழகம் வந்த பின்னரே வாசியுங்கள் நண்பரே!:nature-smiley-008:

அறிஞர்
27-06-2007, 04:02 PM
மேலும் ஒரு அன்பு வேண்டுகோள்...

ஒலி ஒளி வடிவில் கொடுக்கும்பொழுது எழுத்திலும் இங்கு கொடுங்கள்...

கேட்கும்பொழுது (பார்க்க...) நன்றாக இருக்கும்

ஷீ-நிசி
27-06-2007, 04:06 PM
மேலும் ஒரு அன்பு வேண்டுகோள்...

ஒலி ஒளி வடிவில் கொடுக்கும்பொழுது எழுத்திலும் இங்கு கொடுங்கள்...

கேட்கும்பொழுது (பார்க்க...) நன்றாக இருக்கும்

அட! இது தோணாமப் போச்சே! நன்றி அறிஞரே! கொடுத்துவிடுகிறேன்!

ஆதவா
30-06-2007, 08:08 AM
இந்த நேரம் பார்த்து நம்மகிட்ட ஹெட் போன் இல்லையே!!! சரி.... ஷீ−நிசி அவர்களே! ஒரு போன் போடுங்க... லைவ் வா கேட்டுக்கறேன்...

நல்ல முயற்சி.... நிச்சயம் வெற்றி பெறும்..

ஷீ-நிசி
01-07-2007, 02:32 PM
இந்த நேரம் பார்த்து நம்மகிட்ட ஹெட் போன் இல்லையே!!! சரி.... ஷீ−நிசி அவர்களே! ஒரு போன் போடுங்க... லைவ் வா கேட்டுக்கறேன்...

நல்ல முயற்சி.... நிச்சயம் வெற்றி பெறும்..


ஹி ஹி... போன்ல பேசுனாலாம் அவ்வளவா நல்லா இருக்காதே.... ஒரு ஹெட்போன் வாங்கி அனுப்பட்டுமா...:natur008:

அக்னி
02-07-2007, 03:35 PM
இந்த நேரம் பார்த்து நம்மகிட்ட ஹெட் போன் இல்லையே!!! சரி.... ஷீ−நிசி அவர்களே! ஒரு போன் போடுங்க... லைவ் வா கேட்டுக்கறேன்...

நல்ல முயற்சி.... நிச்சயம் வெற்றி பெறும்..

ஹெட்டும் போனும் இல்லாமல் ஷீ−நிசி எப்படி உங்களுடன் போன் செய்து கதைப்பது...
இரண்டும் இருந்தால், ஹெட்போன் இருக்கிறது தானே... :smartass:

அக்னி
02-07-2007, 03:38 PM
ஷீ−நிசியாரே...
கவிதை போட்ட அன்றே, கேட்டும் வாசித்தும் விட்டேன்...
அப்படியே வேறு திரிகளுக்குச் சென்றதால், பின்னூட்டத்திற்கு மறந்துவிட்டேன்.
நன்றாக இருந்தது... கேட்கும்போது, உங்கள் குரலின் பின்னணியில் மெல்லிய இசை எனது கணினியிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தது...
மிகவும் சொக்கவைத்துவிட்டது...
நானும் இதுபோல ஒரு முயற்சி செய்ய உத்தேசித்துள்ளேன்...

பாராட்டுக்களும், நன்றியும்...

ஷீ-நிசி
03-07-2007, 03:56 AM
நன்றிகள் அக்னி.... நீங்களும் முயற்சியுங்கள்.. வாழ்த்துக்கள்!

ஓவியன்
03-07-2007, 04:55 AM
ஷீ!

எழுத்தைமட்டும் தான் பார்த்தேன், அலுவலகத்தில் உங்கள் குரலைக் கேட்க முடியவில்லை. கேட்டவுடன் பின்னூட்டம் போடுகிறேனே!!!!

ஷீ-நிசி
03-07-2007, 05:11 AM
ஷீ!

எழுத்தைமட்டும் தான் பார்த்தேன், அலுவலகத்தில் உங்கள் குரலைக் கேட்க முடியவில்லை. கேட்டவுடன் பின்னூட்டம் போடுகிறேனே!!!!

பரவாயில்லை! கேட்டுவிட்டு போடுங்கள் ஓவியன்.... நன்றிபா..:sport009:

பாரதி
31-07-2007, 07:14 AM
இன்று கேட்டேன் ஷீ. சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது. குரலில் கூட கொஞ்சம் மாற்றம் இருப்பதைப் போலத் தோன்றுகிறது. மன்னிப்பு என்கிற ஆயுதம்...! நம்பிக்கை மோசடி செய்தவர்களைப் பற்றிய ஒரு கொந்தளிப்பு.

காணாமலே கறைந்துவிடும் − வம்பளக்கும் அவர்களின்
நாவுகளோ ஒருநாளும் மழுங்கி விடாது − நிறம் மாறிடும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை....

இவையெல்லாம் குறைகள் அல்ல... கொந்தளிக்கும் மனதின் வெளிப்பாடுகள் − ஒலிபெருக்கியில் ஓங்கி ஒலிக்கும் போது மனதில் நிற்கும் என்ற நம்பிக்கையில் சொல்லப்பட்டவை.

ஒரு வித்தியாசமான முயற்சி என்ற வகையிலும் எனது பாராட்டுக்கள் ஷீ.

ஷீ-நிசி
31-07-2007, 07:30 AM
நன்றி பாரதி(யாரே) ஒருவழியா கேட்டுட்டீங்க போல :)


ஆம் மனதின் கொந்தளிப்புகள்தான் அந்த வார்த்தைகள்.. ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையில் எழுதப்பட்ட வரிகள்.. இன்றளவும் நான் வியக்கின்ற கவிதை இது...

சில கவிதைகளை சில சூழ்நிலைகள் தான் தீர்மானிக்கின்றன... மீண்டும் என்னால் இதேபோல எழுதமுடியுமா என்பது எனக்கே சந்தேகம்தான்...

ஒலி வடிவில் கவிதை ப(டி)டைக்கும்போது இன்னும் நான் மேம்படுத்திக்கொள்ளவேண்டும்... இது கன்னி முயற்சிதான்...

சிவா.ஜி
31-07-2007, 09:23 AM
நானும் இன்றுதான் கேட்டேன் ஷீ−நிசி.கவிதை படிப்பதில் உள்ள சுவை ஒரு ரகமென்றால்,அதை படைத்தவரின் குரலிலேயே கேட்பது இன்னொரு சுவை.
மிக நன்றாக இருக்கிறது.இந்த மென்மையான குரல் உங்கள் காதல் கவிதைகளுக்கு இன்னும் நன்றாக இருக்கும் ஷீ. இன்னும் நிறைய கொடுங்கள். வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
29-10-2007, 04:05 PM
நன்றி சிவா....

பூமகள்
29-10-2007, 05:01 PM
ஷீ..!!
ரொம்ப வித்தியாசமான முயற்சி..!!
நல்லதொரு ஐடியா..!!
அழகு கவி முன்னில் இருக்க அற்புத குரல் பின்னில் ஒலிக்க.....ஆஹா...ரொம்ப நல்லாயிருக்கு..!!
மற்ற கவிகளும் செய்யலாமே??
நானும் முயல்கிறேன்..!! (பாவம்... மன்றத்து மக்கள்..!! :D:D)

ஷீ-நிசி
29-10-2007, 05:16 PM
நன்றி பூமகள்!

iniya
29-10-2007, 05:40 PM
உங்கள் மனக்குமுறல்களைக் கவிதையாய் வடித்து
அதற்கு உயிர் கொடுத்துள்ளீர்கள்
உண்மையிலுமே அருமையாய் உள்ளது
பாராட்டுக்கள். மேலும் நல்ல கவிகள்
தந்து உங்கள் குரலில் ஒலிக்க வாழ்த்துக்கள்

நேசம்
29-10-2007, 06:35 PM
நல்லதோர் முயற்சி.குரல் நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள் ஷி-நிசி

மனோஜ்
29-10-2007, 07:00 PM
முதல்லே கேட்டு விட்டேன் அனால் பின்னுட்டம் இடமறந்து விட்டேன் மன்னிக்க ஷீ அருமையான கவிதை குறள் நன்றி

ஷீ-நிசி
30-10-2007, 04:35 AM
நன்றி நண்பர்களே! உங்களின் ஊக்கம் மேலும் பல படைப்புகள் உருவாக்கிட உதவிடும்.

நிரன்
08-02-2009, 10:03 AM
கவிதையை ஒலியுடன் என்னால் கேட்கமுடியவில்லை
ஆனால் கவிதையைப் படித்தேன் மிகவும் அருமையாகவுள்ளது

இதுதான் வாழ்க்கை எனச் சோர்ந்து போகும் நேரத்திலும்
நம் வேதனையில் விளையாடும் மனிதர்களை நினைத்து
ஆத்திரப் படும் பொழுதும் உங்கள் கவிதை கைகொடுக்கிறது

இக்கவிதையை 1அரை வருடங்கள் முன்பு அக்னி பார்வையிடச்
சொல்லியிருந்தார் நான் அதனைக் கவனிக்கவில்லை. இப்பொழுதுதான்
பழைய திரிகளைப் புரட்டும் பொழுது அக்னியின் சுட்டியை கவனித்தேன்


:mad: கவிதையை ஒலிவடிவில் கேட்கவில்லையே என்றுதான் சிறு மனக்கவலை.. வாழ்த்துக்கள் அண்ணா மிக அழகான வாரிகளுடன் கேர்த்த உங்கள் கவிக்கு..

ஷீ-நிசி
11-02-2009, 01:23 AM
:mad: கவிதையை ஒலிவடிவில் கேட்கவில்லையே என்றுதான் சிறு மனக்கவலை.. வாழ்த்துக்கள் அண்ணா மிக அழகான வாரிகளுடன் கேர்த்த உங்கள் கவிக்கு..

நன்றி நிரன்... ஒலிவடிவில் ஏன் கேட்கவில்லை என்று பார்க்கிறேன்!

நிரன்
11-02-2009, 10:19 AM
நன்றி நிரன்... ஒலிவடிவில் ஏன் கேட்கவில்லை என்று பார்க்கிறேன்!

ஒலிக்கோப்பு அழிந்து விட்டதாக வருகிறது அதனால்தான் கேட்ட முடியவில்லை