PDA

View Full Version : கர்ப்பகாலத்தில் கர்ப்பினிகள் கவனிக்கவே&nparaneetharan
27-06-2007, 01:10 PM
கர்ப்பகாலத்தில் கர்ப்பினிகள் கவனிக்கவேண்டியவை
அவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் மற்றும் உணவுவகைகள். தெரிந்தவர்கள் ஆரம்பத்தில் இருந்து குழந்தை பிறக்கும்வரை விளக்கத்துடன் வழங்குவீர்களா ?

நட்புடன் பரணீதரன்

ஜோய்ஸ்
27-06-2007, 02:19 PM
கேட்டது நல்ல விஷ்யந்தான்.நாமளும் பின்பற்றலாம்தான்.யாராவது எழுதி நாம் அறிந்து கொள்வோம்.

namsec
27-06-2007, 02:30 PM
பால் சுரக்க

அனேக ஸ்திரீகளுக்குச் சுரப்பில்லாமலும். அதனால் குழந்தைக்குப் பால் கிடைக்காமற் போகிறது. அதனால் குழந்தையும் நலிவடைகிறது, பால் சுரப்பு இல்லாததற்க்குக் காரணம் தாயின் பலயீனமேயாம். பால்சுரக்கவேண்டுமானால் பால், மோர், தயிர் கொக்கோ, பழவகை, மாமிசம், முட்டை இன்னும் பலம் தரும்படியான பதார்த்தங்களை தாய் புசித்தல் வேண்டும் அப்படி புசிப்பதினால் தாய்க்கு இரத்த முண்டாகி அதனிடமாக பால் சுரக்கும்

ஓவியா
28-06-2007, 05:53 PM
பரணீ சார்,

கர்ப்பகாலத்தில் கர்ப்பினிகள் கவனிக்கவேண்டியவை என்ற அனைத்து விசயங்களும் அடங்கிய புத்தகம் கடையில் கிடைக்கும், வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அவசியம் தேவையான ஒன்று. குழந்தை பிறந்த பின் என்ன செய்யவேண்டும் என்றும் விளக்கங்கள் இருக்கும், உபயோகமானவை.

இது உங்கள் மனைவிக்கு என்றால், நீங்க அப்பாவாக போகிறீர்கள், எனது வாழ்துக்கள்.

மீனாகுமார்
29-06-2007, 12:49 PM
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. அதனால் இரண்டு மாதத்திலோ மூன்று மாதத்திலோ மருத்துவரைப் பார்க்கும் போது அவசியம் இந்த கேள்வியைக் கேட்டு அதன் படி நடக்க வேண்டும். பொதுவாக முதல் சில மாதங்களில் ஃபோலிக் ஆசிட் மிகுதியாக உள்ள உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும். பச்சைக்கீரைவக்கைகள் ஃபோலிக் ஆசிட் மிகுதியாக கொண்டுள்ளன. பப்பாளி போன்ற சில பழவகைகளைத் தவிர்த்தல் அவசியம். முக்கியமாக சர்க்கரை அளவு உடலில் ஏறும். அதைக் கொஞ்சம் கண்காணித்து மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நலம்.

nparaneetharan
29-06-2007, 01:08 PM
உண்மைதான் ஒவியா நான் அப்பா ஆகப்போகின்றேன். மிகமிக சந்தோசம். இந்த நேரத்தில் மனைவியை கவனிக்கவேண்டிய பொறுப்பு என்னுடையதல்லவா ? கர்ப்பம் சுமப்பவள் அவள். அதன் கஸ்டங்களைப்பார்க்கும்போது ஒன்றே போதும் என்று தோன்றுகின்றுது. வாந்தி எடுக்கும்போது மிகமிக கஸ்டமாக இருக்கின்றது. இப்போதுதான் என் அம்மாவின் கஸ்டமும் எனக்குத்தெரிகின்றது.
இந்த நாட்டு மொழி தற்சமயம்தான் படித்துக்கொண்டிருக்கி;ன்றேன்.அதனால் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் அதைப்பற்றி இணையத்தில் இருந்தால் அறிந்துகொள்ளலாம் என்றுதான் கேட்டேன். கருத்துச்சொன்ன உறவுகளிற்கு நன்றி

மனோஜ்
01-07-2007, 09:40 AM
பரணீ அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

zha
01-07-2007, 02:37 PM
ஒரு வரியில் சொல்லி மாளாது.

ஐந்தாறு மாதங்களுக்கு பிறகு மல்லாக்க படுக்க கூடாது என்பது மிக மிக முக்கியம்.


போலிக் ஆசிட் உள்ள உணவு பொருள்களையே சாப்பிடவேண்டும் என்பது மிக மிக முக்கியம்.முடிந்த மட்டும் சிறு சிறு வேலைகளை செய்தல், வாக்கிங் செல்லுதல், சரியாண் நேரத்துக்கு உணவு உட்கொள்ளுதல், கட்டாயம் மதிய உணவுக்கு பிறகு உறக்கம், எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்ளாதது போன்றது எனக்கு தெரிந்தது.


நன்றி.