PDA

View Full Version : பொட்டுகளும் கிளிப்புகளும்

ஆதவா
27-06-2007, 09:09 AM
வணக்கம் நண்பர்களே!!

சிறு வேலை விஷயமாக வீட்டிற்குச் சென்றபோதுதான் மூலைமுடுக்குகளில் நான் எழுதி வைத்திருந்த காகிதங்கள் கைக்குக் கிடைத்தன,. அதிலொன்று தலைப்பிடாமல் ஒரு பெருங்கவிதையாக எழுதிவைத்த சில கண்ணுக்குக் கிட்டியது., எல்லாமே காதல் கவிதைகள் அந்தந்த சமயங்களில் எழுதியிருப்பேன். எனது 4999 வது பதிவாக இதைப் பதிகிறேன்.... க*ருத்து சொல்லுங்க*ள்...

எங்கிருந்துதான் வாங்கிவந்தாயோ?
முடிகோதும் கிளிப்புகளும்
நெற்றியில் வளைந்தாடும்
பாம்பு வடிவபொட்டுகளும்

என் உருவம் இல்லாமல்
இரவில் முத்தம் பெறுகிறாயா?
பொட்டுகளின் வேலைகள்

என் குரலின்றி
சப்தம் கேட்கிறாயா?
கிளிப்புகளின் நடனம்

பொட்டுக்களை எங்கும்
ஒட்டி வைக்காதே
கிளிப்புகளைக் கழற்றி
வீசியெறியாதே!

திறந்திருந்த சன்னலின் ஓட்டைமேல்
கதிர் விழ, நீ எழும்போது
பத்திரப்படுத்தி வை
கிளிப்புகளையும் பொட்டுக்களையும்
உடன் களித்த கனவுகளையும்..

அக்னி
27-06-2007, 09:26 AM
ஒரு காதலன் காதலியுடன் நெருக்கமாய் உறவாடும்,
அலங்காரப்பொருட்களை மனதில் நெருடும் பொறாமையுடன் பார்க்கின்றான்.
ஆனாலும்,
அவள் மேனி தொட்ட சிறுபொருளை காற்றும் தொடுவதை விரும்பவில்லை.
அதுதானோ பத்திரப்ப்படுத்தச் சொல்கின்றான்.., அவள் பசுமைக் கனவுகளைப்போன்றே...

மனதைக் கவர்கிறது... கருத்து...

அன்புரசிகன்
27-06-2007, 09:38 AM
நன்றாகவே உள்ளது ஆதவா.

அமரன்
27-06-2007, 03:02 PM
ஆதவா கவிதைகள் கூட சில வினாடிகலில் எழுதிவிடலாம். ஆனால் சிலர் எழுதும் கவிதைகளை படிக்கவே பல நாட்கள் வேண்டும். ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தம் பொதித்து எழுதியிருப்பார்கள். அப்படியான சிலருள் நீங்களும் ஒருவர். படித்தால் காதல் கவிதைபோலவே இருக்கின்றது. ஆனாலும் பாம்பு வடிவ பொட்டு,கவ்விப்பிடிக்கும் கிளிப், ஓட்டை யன்னல் இவற்றில் ஏதாவது உள்ளர்த்தம் வைத்து எழுதியிருப்பீரோ என்ற சந்தேகம். அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

சூரியன்
27-06-2007, 03:08 PM
ஆதவா கவிதை நன்றாக இருக்கிறது,தலைப்பு எங்கே ?

ஷீ-நிசி
27-06-2007, 03:57 PM
அப்பவே இப்படி எல்லாம் எழுதியிருக்கியா ஆதவா...

இந்த கவிதை எளிமையாக இருக்கிறது.. ஆனால் எனக்கு அங்கங்கே சந்தேகங்கள் இருக்கிறது... தெளிவடைந்து விமர்சனம் இடுகிறேன்...

அமரன்
27-06-2007, 04:02 PM
அப்பவே இப்படி எல்லாம் எழுதியிருக்கியா ஆதவா...

இந்த கவிதை எளிமையாக இருக்கிறது.. ஆனால் எனக்கு அங்கங்கே சந்தேகங்கள் இருக்கிறது... தெளிவடைந்து விமர்சனம் இடுகிறேன்...

உங்களுக்குமா?

ஷீ-நிசி
27-06-2007, 04:32 PM
உங்களுக்குமா?

ஆமாம் அமரன்...:natur008:

ஆதவா
28-06-2007, 07:52 AM
ஒரு காதலன் காதலியுடன் நெருக்கமாய் உறவாடும்,
அலங்காரப்பொருட்களை மனதில் நெருடும் பொறாமையுடன் பார்க்கின்றான்.
ஆனாலும்,
அவள் மேனி தொட்ட சிறுபொருளை காற்றும் தொடுவதை விரும்பவில்லை.
அதுதானோ பத்திரப்ப்படுத்தச் சொல்கின்றான்.., அவள் பசுமைக் கனவுகளைப்போன்றே...

மனதைக் கவர்கிறது... கருத்து...

மிகவும் நன்றி அக்னி. உங்கள் கருத்து மனதைக் கவர்கிறது..

ஆதவா
28-06-2007, 07:54 AM
நன்றாகவே உள்ளது ஆதவா.

மிகவும் நன்றி அன்பு....

ஆதவா
28-06-2007, 07:58 AM
ஆதவா கவிதைகள் கூட சில வினாடிகலில் எழுதிவிடலாம். ஆனால் சிலர் எழுதும் கவிதைகளை படிக்கவே பல நாட்கள் வேண்டும். ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தம் பொதித்து எழுதியிருப்பார்கள். அப்படியான சிலருள் நீங்களும் ஒருவர். படித்தால் காதல் கவிதைபோலவே இருக்கின்றது. ஆனாலும் பாம்பு வடிவ பொட்டு,கவ்விப்பிடிக்கும் கிளிப், ஓட்டை யன்னல் இவற்றில் ஏதாவது உள்ளர்த்தம் வைத்து எழுதியிருப்பீரோ என்ற சந்தேகம். அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

அமரரே! உங்கள் பாராட்டு எனது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது., இது என்றோ எழுதி வைக்கப்பட்டது,,. அப்போதெல்லாம் அர்த்தம் பொதிய எழுத மாட்டேன்... அதோடு காதல் கவிதைகள் சில காணக் கிடைத்தன... அதில் ஒன்று ஆப்பிள் கவிதைகள்... இங்குள்ளவர்களின் கவிதைகளைப் பார்வையிட்டுவிட்டு பிறகு ஆப்பிள் கவிதைகளை வெளியிடுகிறேன்.. எல்லாமே பழைய கவிதைகள்.... எளீமையாக இருக்கும் என்று நம்புகிறேன்...

ந*ன்றி த*ல*.

ஆதவா
28-06-2007, 08:03 AM
ஆதவா கவிதை நன்றாக இருக்கிறது,தலைப்பு எங்கே ?
ந*ன்றிங்க* சூரிய*ன், த*லைப்ப்பு இட்டுருக்கிறேனே பார்க்க*வில்லையா?

அப்பவே இப்படி எல்லாம் எழுதியிருக்கியா ஆதவா...

இந்த கவிதை எளிமையாக இருக்கிறது.. ஆனால் எனக்கு அங்கங்கே சந்தேகங்கள் இருக்கிறது... தெளிவடைந்து விமர்சனம் இடுகிறேன்...

இந்த கொடுமையைக் கேளுங்கள் ஷீ! இந்த கவிதை எப்போது எழுதியது என்றே தெரியவில்லை... பழைய குப்பைகளைக் கிளறும்போது கிடைத்தது. இதோடு இணைத்து எழுதி வைத்த நோட்டு புத்தகத்தைக் காணவில்லை. அதிலே ஏகப்பட்ட கவிதைகள் இருந்தன. எல்லாமே தொட*ர் க*விதைக*ள் தான்... அதில் ஒன்று போர்க்க*ள*த்தில் காத*ல்... ஒரு பிள்ளையின் பிற*ப்பு.. படி தாண்டும் பத்தினிகள், அப்பறம் இன்னும் இருக்கும்... ஒரு நோட்டு முழுக்க எழுதி யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தேன்.... போயே போயிந்தி.. . (மிள*காய்ப்ப*ழ*ச் சாமி என்று ஒரு க*விதை எழுதினேன்... அதுவும் காணாம*ல் போயிற்று,,, த*லைப்பு உப*யம் : சுப்பிர*ம*ணிய* பார*தி.)

உங்கள் சந்தேகம் என்னவோ??? விமர்சனம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..

அமரன்
28-06-2007, 08:23 AM
உங்கள் சந்தேகம் என்னவோ??? விமர்சனம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..

நானும் காத்திருக்கிறேன். நிசியின் விமர்சனத்தையும் கவிதையின் தாயின் விமர்சனத்தையும் எதிர்பார்த்து

ரிஷிசேது
04-07-2007, 04:28 PM
மிக நன்றாக இருக்கிறது வார்த்தை பிரயோகம்.

ஆதவா
07-07-2007, 11:53 AM
ரொம்பவும் நன்றி ரிஷி

james
19-12-2007, 03:06 PM
ஆதவா கவிதை நல்லாயிருக்கே!!!:D
வார்த்தை பிரயோகம் நன்றாகவே உள்ளது