PDA

View Full Version : யார் நீ?...



இனியவள்
27-06-2007, 06:44 AM
அன்பே!...
தென்றலாய் வந்து
இதமாய் கடந்து சென்றாய்.
புயலின் தாக்கத்தை
விட்டுச்செல்கின்றாய்.

வெளிச்சப்புள்ளியாய் தோன்றி
மெழுகாய்
ஒளி தந்து கடந்தாய்.
ஒரு மின்னலின்
அதிர்வை பதிந்து செல்கின்றாய்.

ஒற்றை
மலராகவே வந்தாய்
அழகிய
பூந்தோட்டமாய்
நறுமணம் கமழ்கின்றாய்.

எப்படி
என்னுள் நுழைந்தாய்?!...
நானே அறியாத
ஒரு கணத்தில்...

பகல் வானம் போல்
வெருமையாய் இருந்த என்னில்
இரவு வான்
நட்சத்திரங்களாய்
உன் நினைவை
விதைத்து விட்டாய்.

உன்
ஞாபக அலைகள்
சிறு தூறலாக துளிர்த்து
அருவியாய்
ஆர்ப்பரிக்கின்றது.

யார் நீ?...
உன்னைச் சொல்லாமலேயே
என்னைக் கொல்கின்றாய் !...

அன்புரசிகன்
27-06-2007, 06:52 AM
சொல்லாமல் வருவதும்
தென்றலாய் வருவதும்
புயலாய் வருவதும்
ஒன்றே ஒன்றுதான்.

பாராட்டுக்கள் இனியவளே.

சூரியன்
27-06-2007, 07:01 AM
அருமையான வரிகள்

அமரன்
27-06-2007, 03:36 PM
நல்ல கவிதை இனியவள். காதலின் தாக்கத்தை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். தென்றலாய் கடந்து புயலாக நிலைத்து...இப்படி ரசிக்கக்கூடிய வரிகள். ஆனாலும்

வெளிச்சப்புள்ளியாய் தோன்றி
மெழுகாய்
ஒளி தந்து கடந்தாய்.
ஒரு மின்னலின்
அதிர்வை பதிந்து செல்கின்றாய்.

என்கிற வரிகளில் மெழுகாய் என்பது வருடுகின்றது. அந்த இடத்தில் விளக்காய் என எழுதியிருந்தால் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கின்றேன். மெழுகுதிரியை தியாகி மாதிரி கற்பனை செய்வதே அனைவரதும் வழக்கம். அப்படிப் பழகிவிட்டது. புதுமையாக எழுத நினைத்த உங்களுக்கு பாராட்டுகள்.