PDA

View Full Version : வரைகோட்டு ஓவியங்கள்

இனியவள்
27-06-2007, 06:12 AM
முந்தைய நாட்களின்
ஏதோ ஓர் இரவில்
முகமறைத்துக் கொண்டதென்
எதிர்காலம்

காலைக் கதிரவனின்
கதகதப்பில்
உயிர் பெறலாம் என்றால்
நான் பனித்துளியா?
புல்வெளியா?

விதை விதைத்தவர்
யாரோ?
வினை அறுப்பது
நானே!

பிறப்பளித்வள் - சேர்த்தே
இறப்பையும்
எழுதிவிட்டுச் சென்றுவிட்டாள்
சிசுக் கொலையிலிருந்து
சிறை விடுத்தவள்
உயிர் கொல்லி நோயை
உடன் அளித்தாளே!

கள்ளிப்பால் கொடுக்க
தவறியவள்
கொல்லி போட்டு சென்றாளே
நான் என்ன
சாபத்தின் ஒட்டுமொத்த
சாயல் வாங்கி
வந்தேனா?
இல்லை பாவத்தின்
முகவரியை பகிர்வு
கொள்ள வந்தேனா ?

நான் கண்ட
சோகங்கள் - இங்கே
சொல்வதற்கில்லை!
அனுபவித்துதான்
ஆக வேண்டும்
மறுப்பதிற்கில்லை!

என் போன்றோரின்
வாழ்க்கை வெறும்
வரைகோட்டு ஓவியங்கள்!
நீங்களே
வண்ணம் தீட்ட வேண்டிய
மிகச்சிறந்த ஓவியர்கள்!

அன்புரசிகன்
27-06-2007, 06:18 AM
அனல் பறக்குது.
யார் மேல் இத்தனை கோபமோ?
வரிகள் அழகாயிருப்பதிலும் உணர்வுபூர்வமாக இருக்கிறது.

அமரன்
27-06-2007, 03:41 PM
அந்த உயிர்கொல்லி நோய் எதுங்க. காதலா? பாராட்டுகள் இனியவள். உணர்ச்சியின் விளிம்பில் இருந்து வருகின்றமாதிரி இருக்குக் கவிதை.

ஓவியா
28-06-2007, 05:40 PM
அது என்னா நோய் என்று சொன்னால் கவிதை இன்னும் நன்கு விளங்கும், காதலா இல்லை எய்ட்ஸா??

வார்த்தைகளின் கோர்வை நன்று.

இனியவள்
28-06-2007, 07:04 PM
அது என்னா நோய் என்று சொன்னால் கவிதை இன்னும் நன்கு விளங்கும், காதலா இல்லை எய்ட்ஸா??

வார்த்தைகளின் கோர்வை நன்று.

எய்ட்ஸ்

நன்றி ஒவியா

இனியவள்
28-06-2007, 07:07 PM
அந்த உயிர்கொல்லி நோய் எதுங்க. காதலா? பாராட்டுகள் இனியவள். உணர்ச்சியின் விளிம்பில் இருந்து வருகின்றமாதிரி இருக்குக் கவிதை.

நன்றி அமரன்

அமரன்
28-06-2007, 07:09 PM
எய்ட்ஸ்

நன்றி ஒவியா

ஹி...ஹி....எயிட்சும் காதலும் கிட்டத்தட்ட ஒன்றுதான் இல்லையா...

இனியவள்
28-06-2007, 07:13 PM
ஹி...ஹி....எயிட்சும் காதலும் கிட்டத்தட்ட ஒன்றுதான் இல்லையா...

ஆஹா இருக்கலாம் அமரன் ஆனால் எயிட்ஸைவிட கொடியது சில காதல்கள் :D

அமரன்
28-06-2007, 07:15 PM
ஆஹா இருக்கலாம் அமரன் ஆனால் எயிட்ஸைவிட கொடியது சில காதல்கள் :D

ஆமாம் எட்டாக் காதல் சில எய்ட்சை விட பொல்லாதவை. சில தன்னை அழிக்கும். சில பிறரை அழிக்கும். ஆனால் காதலை அழிப்பதில்லை.

அக்னி
28-06-2007, 07:41 PM
கள்ளிப்பால் கொடுக்க
தவறியவள்
கொல்லி போட்டு சென்றாளே
நான் என்ன
சாபத்தின் ஒட்டுமொத்த
சாயல் வாங்கி
வந்தேனா?
இல்லை பாவத்தின்
முகவரியை பகிர்வு
கொள்ள வந்தேனா ?

ரசிக்க வைக்கின்ற எழுத்தாளுமை...
விழிக்க வைக்கின்ற கருத்தாளுமை...
நன்று... கவிதை...
தொடர்க... இனியவள்...
பாராட்டுக்கள்...

ஓவியா
28-06-2007, 10:19 PM
ஹி...ஹி....
எயிட்சும்
காதலும்
கிட்டத்தட்ட
ஒன்றுதான்
இல்லையா..

தூள் கவிதை அமரன்

ஆஹா இருக்கலாம் அமரன் ஆனால் எயிட்ஸைவிட கொடியது சில காதல்கள் :D

இதோடா :traurig001: :traurig001: :traurig001:

ஆமாம் எட்டாக் காதல் சில எய்ட்சை விட பொல்லாதவை. சில தன்னை அழிக்கும். சில பிறரை அழிக்கும். ஆனால் காதலை அழிப்பதில்லை.

த*த்துவ*மேதை அம*ர*ன் வா(ல்)ழ்க*.

அமரன்
29-06-2007, 07:23 AM
தூள் கவிதை அமரன்
இதோடா :traurig001: :traurig001: :traurig001:
த*த்துவ*மேதை அம*ர*ன் வா(ல்)ழ்க*.

நன்றிங்க ஃஐயன் லேடி. காதல் என்னைக் காதலிக்காததால் இப்படி ஏராளமான தத்துவம். (இன்னொரு விடயம் தெரியுமா? இதுவரை நான் ஒரே ஒரு காதல் கவிதைதான் எழுதியதாக ஞாபகம்.)

ஓவியா
29-06-2007, 11:28 AM
அமர், சில வேளையில் காதல் இல்லை என்றால் கவிதை வராதாம். இருந்தால் அருவிபோல் கொட்டுமாம்.

அமரன்
29-06-2007, 11:29 AM
அமர், சில வேளையில் காதல் இல்லை என்றால் கவிதை வராதாம். இருந்தால் அருவிபோல் கொட்டுமாம்.

உண்மைதாங்க....