PDA

View Full Version : காதல் நேரங்கள்....!



வசீகரன்
27-06-2007, 07:04 AM
தென்றலது தவழ்ந்து வரும்.. அதிகாலை பொழுது....!
மலர்கள் மலர நேரம் பார்த்து காத்திருந்த வைகறைப்பொழுது...!

நிலவு காதலன் இரவு காதலியை விட்டு
விலகி செல்லும் விடியல் பொழுது... !

நதியின் கரையில் நிலவின் மடியில்..
சோலையின் தாலாட்டில் அவள் முகம்
நான் பார்த்திருக்க...!

புன்னகையை தாங்கி இருந்த அவள் முகம்
நிலம் பார்த்திருக்க...!

காதல் என்ற
இளமையின்,, வரம் எங்களை சூழ்ந்திருக்க.. !

உலகின் மிக விளிம்பில் நாங்கள் இருப்பதை
உணர்ததொரு சுகந்த அனுபவத்தில்
நாங்கள் திளைத்திருந்த நேரம்...!

அந்த நேரங்கள்... அந்த நிமிடங்கள்....!
என்கனவுகளில் என்றும் வருகிறது.....!

அமரன்
27-06-2007, 04:47 PM
நல்ல நேர கவிதை வசீகரன். பாராட்டுகள்

இனியவள்
27-06-2007, 05:52 PM
இனிய கவிதைக்கு இனிமையான பாராட்டுக்கள் வசிகரன்