PDA

View Full Version : மஞ்சளும் குங்குமமும் பூத்துக் குலுங்குமlenram80
27-06-2007, 12:45 AM
பாலைவனங்களில் கூட பனி பொழிகிறது!
எரிமலைகளில் கூட ஈரம் கசிகிறது!
என் வாழ்க்கையில் மட்டும் இப்படி ஒரு வறட்சியா?
எனக்கு மட்டும் திருமணம் என்பதே புரட்சியா?

இன்னும் எத்தனை காலம் தான் இந்த வாழ்க்கை,
பாதையே தெரியாமல் பயணம் செய்யும்?

நான் பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் எப்படி
சோக ஊருக்கு சொல்லாமலேயே செல்கின்றன?

எனக்கு கட்டிய மாலையில் மட்டும் ஏன்
முல்லை வைக்காமல் முள்ளை வைத்தான் அந்த முப்பெரும் தேவன்?

மேளச்சத்தமும் மெட்டி ஒலியும்
என்னை தீண்டத்தகாதவள் என்று நினைத்ததா?

பந்தி வைத்து பரிமாறக் காத்திருந்தும்
என் வீட்டிற்கு திருமண விருந்தாளி வராமலேயே போவதேன்?
புத்தாடை கட்டி பட்டாசு வெடித்தும்
என் வீட்டிற்கு திருமண தீபாவளி திரும்பாமலேயே போவதேன்?

திருமணம் காணாமலேயே இந்த ஒருமணம்
துருமணம் ஆகிவிடுமோ?

வீட்டிற்கு வரும் அழைப்பிதழ்களில் எல்லாம்
எத்தனை நாள் தான் என் பெயரை எழுதிப் பார்ப்பது?
எப்போது தான் என் பெயரையும் மணப் பெண்ணாய் அச்சிட்டுப் பார்ப்பது?

கல்யாண ஆசை கழுத்து வரை நிற்க
காதல் ஆசை கழுத்தைப் பிடித்து நெறிக்க
என் வாழ்க்கையே விழிகளில் பிதுங்கி வழிகிறதே!

என் விதை வந்து விளையாட வேண்டிய மடியில்
இப்படி விதி வந்து விளையாடுகிறதே!

கல்யாணக் கடவுளே!
என்னையும் கொஞ்சம் கட்டிப் பிடி!
என் வீட்டுத் தோட்டத்திலும்
மஞ்சளும் குங்குமமும் பூத்துக் குலுங்கட்டும்!
என் கழுத்தில் தாலியும் என் இடுப்பில் குழந்தையும்
காய்த்துத் தொங்கட்டும்!!!

அமரன்
28-06-2007, 08:54 PM
லெனின். கல்யாணமாகாது வயதுகளுடன் வசந்தமும் கடந்து செல்லும் ஒரு நங்கையின் உள்ளச் சிதறலை அழகாக கவிதையில் வடித்துள்ளீர்கள். வரிகளில் உணர்வுகள் பூத்துக்குலுங்குகின்றது. பாரட்டுகள்

இணைய நண்பன்
28-06-2007, 09:24 PM
ஆழமான கருத்துக்கள்.நல்ல கவிதை.வாழ்த்துக்கள்

அக்னி
28-06-2007, 09:33 PM
கல்யாணப் பருவம் தாண்டியவர்களின் ஏக்கம் நிறைவாகவே தொனிக்கிறது கவியில்...
கவலைப்படாத பெற்றோர், சீதனப் பிரச்சினை, கடமைகள், சமுதாயத்தின் தவறான பாதை, ஜோதிட நம்பிக்கை, காதற்தோல்வி
இவ்வாறாக பலதும் ஆண், பெண் இரு பாலாரதும் வாழ்வில்,
திருமண நிகழ்வைத் தொலைக்க வைத்துவிடுகின்றது.
இந்த நிலை மாறவேண்டும்.

பாராட்டுக்கள்...

சூரியன்
30-06-2007, 09:49 AM
நல்ல கருத்துக்கள் உள்ள கவிதை.

இனியவள்
30-06-2007, 09:56 AM
பாலைவனங்களில் கூட பனி பொழிகிறது!
எரிமலைகளில் கூட ஈரம் கசிகிறது!
என் வாழ்க்கையில் மட்டும் இப்படி ஒரு வறட்சியா?
எனக்கு மட்டும் திருமணம் என்பதே புரட்சியா?

இன்னும் எத்தனை காலம் தான் இந்த வாழ்க்கை,
பாதையே தெரியாமல் பயணம் செய்யும்?

நான் பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் எப்படி
சோக ஊருக்கு சொல்லாமலேயே செல்கின்றன?

எனக்கு கட்டிய மாலையில் மட்டும் ஏன்
முல்லை வைக்காமல் முள்ளை வைத்தான் அந்த முப்பெரும் தேவன்?

மேளச்சத்தமும் மெட்டி ஒலியும்
என்னை தீண்டத்தகாதவள் என்று நினைத்ததா?

பந்தி வைத்து பரிமாறக் காத்திருந்தும்
என் வீட்டிற்கு திருமண விருந்தாளி வராமலேயே போவதேன்?
புத்தாடை கட்டி பட்டாசு வெடித்தும்
என் வீட்டிற்கு திருமண தீபாவளி திரும்பாமலேயே போவதேன்?

திருமணம் காணாமலேயே இந்த ஒருமணம்
துருமணம் ஆகிவிடுமோ?

வீட்டிற்கு வரும் அழைப்பிதழ்களில் எல்லாம்
எத்தனை நாள் தான் என் பெயரை எழுதிப் பார்ப்பது?
எப்போது தான் என் பெயரையும் மணப் பெண்ணாய் அச்சிட்டுப் பார்ப்பது?

கல்யாண ஆசை கழுத்து வரை நிற்க
காதல் ஆசை கழுத்தைப் பிடித்து நெறிக்க
என் வாழ்க்கையே விழிகளில் பிதுங்கி வழிகிறதே!

என் விதை வந்து விளையாட வேண்டிய மடியில்
இப்படி விதி வந்து விளையாடுகிறதே!

கல்யாணக் கடவுளே!
என்னையும் கொஞ்சம் கட்டிப் பிடி!
என் வீட்டுத் தோட்டத்திலும்
மஞ்சளும் குங்குமமும் பூத்துக் குலுங்கட்டும்!
என் கழுத்தில் தாலியும் என் இடுப்பில் குழந்தையும்
காய்த்துத் தொங்கட்டும்!!!

சோக ஊருக்கு பயணிக்கும் போருந்து
ஒரு நாள் சொர்க்க வாசலை சென்றடையும்

முள் மாலை கூட
ரோஜா மாலையாக மாறும்

மேளங்கள் முழங்க
அம்மி மிதித்து
அருந்தது பார்த்து
மெட்டி அணியும் நாள் வரும்

காலம் தாழ்த்துவது
நன்மைக்கென்றே நினைத்துகொள்

உன்னை அன்பில் தாலட்டி
அரவணைத்து துயில வைக்க
உன்னவன் வந்து கொண்டிருப்பான்
உன் கனவுகள் நனவாக வாழ்த்துகள்

கவி அருமை வாழ்த்துக்கள் லெனின்

அமரன்
30-06-2007, 10:26 AM
ஏங்க இனியவள் கவிதைகளில் பின்னுகின்றீர்கள். அடுத்த கவிதைப்போட்டியில் கலக்கிடுங்க. பாராட்டுகள் கவிதைக்கு.

இனியவள்
30-06-2007, 10:30 AM
ஏங்க இனியவள் கவிதைகளில் பின்னுகின்றீர்கள். அடுத்த கவிதைப்போட்டியில் கலக்கிடுங்க. பாராட்டுகள் கவிதைக்கு.

நன்றி அமரன்
கவிதைப் போட்டியில் கலந்து கொள்கின்ற அளவுக்கு திறமை இன்னும் எனக்கு வரவில்லை என்று நினைக்கின்றேன் அந்த தகுதி வந்ததும் நிச்சயம் கலந்து கல்க்குவேன் :)

அமரன்
30-06-2007, 10:31 AM
நன்றி அமரன்
கவிதைப் போட்டியில் கலந்து கொள்கின்ற அளவுக்கு திறமை இன்னும் எனக்கு வரவில்லை என்று நினைக்கின்றேன் அந்த தகுது வந்ததும் நிச்சயம் கலந்து கல்க்குவேன் :)

இதுதான் தன்னட்டக்கம் என்பதோ...

ஓவியன்
30-06-2007, 10:46 AM
லெனின் உங்களைக் நீண்ட நாட்களாகக் காணவில்லையே என்று நினைத்தேன், மீளவும் வந்துவிட்டீர்கள் உங்கள் அழகு வரிகளுடன்!

உண்மைகளை உரைத்து
நெஞ்சத்தைக் கனமாக்கிய*
உங்கள் வரிகளுக்கு என் வாழ்த்துக்கள்!