PDA

View Full Version : அன்புடன் தமிழ்நிலா...............



தமிழ்நிலா
27-06-2007, 12:02 AM
தமிழ் கூறும் நல்உலகுக்கு,

என் அருமை தமிழ் மன்றத்து தோழர்களுக்கு, தமிழ்நிலாவின் பணிவான முதல் வணக்கங்கள். இம்மன்றத்தினை பார்வையிட்ட மறுகணமே மனதை பறிகொடுத்து விட்டேன் என்பதே உண்மை.மன்றத்தின் செயல்படுகள், நண்பர்களின் படைப்புகள், பங்களிப்புகள் அனனத்தும் அருமையிலும் அருமை.
என்னை பற்றிய சிறு அறிமுகம் பெயர்: நித்துஜா ,
வசிப்பது: அமெரிக்கவில். எனக்கு பிடித்த விஷயங்களிள் முதன்மையானது : தமிழ் மொழியை கேட்ப்பது,படிப்பது,நன்கு உள்வாங்கி ரசிப்பது,என் தாகத்தை தீர்க்க வந்த தமிழ் கடலாக நம் மன்றத்தை காண்கின்றேன். இந்த மாபெரும் தமிழ் ஜோதியிலே ஜக்கியமாக வந்து உள்ளேன்.உங்களது அன்பும் ஆதரவும் என்றும் இருக்கும் என்று உள்ளமாற நம்புகின்றேன்.

தமிழ்ழின் மேன்னமயை மேலும் வளர்க்க தங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்.

அன்புடன்,
தமிழ்நிலா.

அக்னி
27-06-2007, 12:12 AM
வாருங்கள் தமிழ்நிலா...
தமிழ் மன்றம் என்ற மாபெரும் வானில் ஒளிவீச இணைந்திடுங்கள்...
உங்கள் தாகம் தணிக்கும் தடாகங்கள் பல மன்றத்திலுண்டு.
ஆனந்தமாய் அள்ளிப்பருகிடுங்கள்.
உங்கள் படைப்புக்களையும் அள்ளித்தாருங்கள்.

என்றும் இணைந்திருக்க வேண்டி, அன்புடன் வரவேற்கின்றோம்...

பட்டாம்பூச்சி
27-06-2007, 02:36 AM
என் தாகத்தை தீர்க்க வந்த தமிழ் கடலாக நம் மன்றத்தை காண்கின்றேன்...

வாருங்கள் தமிழ்நிலா. நானும் ஒரு புதியவன் நம் மன்றத்திற்கு. இணைந்து சில மணித்துளிகளே ஆனது. நல்ல வாசம் வீசும் மலர்கள் இங்கே நிறைய இருக்கிறது. உங்கள் வருகை நல்வரவாகுக.

கடல் நீர் தாகம் தீர்க்குமா என்கிற விஞ்ஞான ஆராய்ச்சி தேவையில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவிற்கு தமிழின்மேல் தாகத்துடன் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தவே அந்த உதாரணம் என்பது புரிகிறது.

வாருங்கள் அனைவரும் தமிழ் பருகுவோம். :medium-smiley-053:

ஓவியன்
27-06-2007, 03:31 AM
வாங்க தமிழ் நிலா என்ற நித்துஜா!

நீங்கள் எதிர் பார்த்ததைப் போன்றே எங்கள் அன்பும் ஆதரவும் என்றும் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் தமிழ் தாகத்தைத் தீர்த்து இங்குள்ளோரின் தாகத்தையும் தீர்க்க உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அன்புரசிகன்
27-06-2007, 06:11 AM
வாங்க தமிழ் நிலா..
வருக வருக...
நித்துஜா அழகான பெயர்...
தமிழ் நிலா அதிலும் அழகு.
உங்கள் ஒளியை இங்கே படரவிடுங்கள்.

இனியவள்
27-06-2007, 06:21 AM
வாருங்கள் தமிழ் நிலா....உங்கள் வரவு நல்வரவாகட்டும் :)

lolluvathiyar
27-06-2007, 07:08 AM
தமிழ் நிலா அழகான பெயர், அதே போல ஒரு அழகான அவதாரையும்
தேர்வு செய்து விடுங்கள் நித்துஜா
பங்களிக்க வரவேற்கிறேன்

அமரன்
27-06-2007, 07:20 AM
வாருங்கள் நிந்துஜா என்கின்ற தமிழ்நிலா. தமிழ்நிலா என்று பெயர் சூட்டியதிலிருந்தே உங்கள் தமிழ்பற்றுத் தெரிகின்றது. தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள். பரந்து இருக்கும் ஆகாயம் போன்ற நமது மன்றத்தில் உலா வாருங்கள். உங்கள் தமிழ்நிலா ஒளியை வீசுங்கள். சின்னதாக ஒரு விண்ணப்பம். ஆங்கிலத்தில் இருக்கும் உங்கள் பெயரை நீங்கள் விரும்பினால் தமிழில் மாற்றிக்கொள்ளலாமே. நன்றி.
தோழமையுடன்,

ஆதவா
27-06-2007, 07:26 AM
வாருங்கள் தமிழ் நிலா. தங்களுக்கு ஆதவனின் வரவேற்புகள்.. இன்று முதல் உங்கள் பதிவுகளைக் காண நாங்கள் ஆவலாக இருக்கிறோம். உங்கள் வருகை எங்களுக்கு மகிழ்ச்சி..... நிலவின் வருகையில் குளிராத பூநிலம் உண்டோ/???

மனோஜ்
27-06-2007, 03:14 PM
வாருங்கள் தமிழ் நிலா
வருக வருக
தொடர்ந்து வந்து மன்றத்தில் மகிழ்திருங்கள்

paarthiban
27-06-2007, 03:23 PM
நல்வரவு தமிழ்நிலா அவர்களே. நம் மன்றம் உங்கள் எண்ணத்தை நிச்ச்யம் ஈடு செய்யும். நன்றி. வணக்கம்.

சூரியன்
27-06-2007, 03:24 PM
வாருங்கள் தமிழ்நிலா உங்கள் வரவு நல்வரவு.நம் மன்றத்தில் அமரன்,ஆதவன்,அறிஞர்,பென்ஸ்,ஷீ−நிசி,ஓவியா,வாத்தியார்,(இவ்வளவுதான் தோன்றியது மற்றவர்கள் மன்னிக்கவும்) போன்ற மூத்தோர்கள் உள்ளனர்,அவர்களின் கீழ் நீங்களும் வழி தொடரலாம்.
உங்களின் படைப்புகளை கான ஆவலாய் உள்ளோம் ........

பாரதி
27-06-2007, 03:37 PM
முன்பு மன்றத்தில் நிலா என்ற பெயரில் ஒரு உறவு இருந்தார். அவரை நினைவுறுத்தும் வகையில் அழகிய பெயரில் வந்துள்ள உங்களை தமிழ்மன்றத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்.

சிவா.ஜி
27-06-2007, 03:44 PM
புது வரவான தமிழ்நிலவுக்கு அன்பான வாழ்த்துக்கள். தமிழ்கடலில் சங்கமமாகி நல்முத்துக்கள் நிறைய படைத்திட வாழ்த்துகிறேன். உங்கள் தமிழ் அருமை, அதனினும் அருமை தமிழ்மன்றத்தைக்குறித்த உங்கள் கருத்து. வாழ்க வளர்க.

அமரன்
27-06-2007, 03:45 PM
புது வரவான தமிழ்நிலவுக்கு அன்பான வாழ்த்துக்கள். தமிழ்கடலில் சங்கமமாகி நல்முத்துக்கள் நிறைய படைத்திட வாழ்த்துகிறேன். உங்கள் தமிழ் அருமை, அதனினும் அருமை தமிழ்மன்றத்தைக்குறித்த உங்கள் கருத்து. வாழ்க வளர்க.

ஏங்க சிவா உங்களை இப்போ மன்றத்தில் காண்பது அரிதாகிவிட்டதே...

aren
27-06-2007, 03:47 PM
வாங்க தமிழ்நிலா. அழகான தூய தமிழில் அறிமுகமே அமர்க்களமாக இருக்கிறது. உங்களிடமிருந்து நிறைய எதிர்ப்பார்க்கலாம் போலிருக்கிறது. உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

அறிஞர்
27-06-2007, 04:03 PM
வாருங்கள் அன்பரே.. தங்கள் வரவு.. அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தட்டும்.

தமிழ்நிலா
27-06-2007, 06:15 PM
அன்புடன் வரவேற்ற அனனைத்து உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த
நன்றிகள்.

அன்புடன்,
தமிழ்நிலா.

தமிழ்நிலா
27-06-2007, 06:55 PM
அக்னி அவர்களுக்கு,

தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும், வரவேற்ப்பிற்க்கும்,நன்றிகள் பல பல.தாங்கள் கூறியது போல நம் மன்றத்தில் தாடகங்கள் பல உண்டு,அவற்றில்
எதை முதலில் படிப்பது என்று குழம்பி போவது அன்றாடம் வாடிக்கை ஆகிவிட்டது.
இருந்தபோதிலும்,சிறுதுளி படித்தாலும்,பெருந்த்துளி படித்தாலும் திகட்டாத தேனாய் இருக்கிறது என்பதே நிஜம்.நன்றி.

வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்.

அன்புடன்,
தமிழ்நிலா.

தமிழ்நிலா
27-06-2007, 07:19 PM
பட்டாம்பூச்சிக்கு வணக்கம்,


வானில் சிறகடித்து பறந்து கொண்டே வந்து வரவேற்றதற்க்கு ரொம்ப நன்றி..உண்மைதான் நண்பரே,தமிழ் காற்றுக்காக மிகவும் ஏக்கம் கொண்டுஇருந்தேன்,நம் மன்றம் வந்த பின்னே என் சுவாசம் திரும்ப பெற்றேன்.சந்தேகம் வேண்டாம் நண்பரே,தமிழ்கடல் கண்டிப்பாய் நம் அனனவரின் தாகத்தை நிச்சயம் தீர்க்கும்.நன்றி.



வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்.

அன்புடன்,
தமிழ்நிலா.

தமிழ்நிலா
27-06-2007, 08:34 PM
ஒவியன் அவர்களுக்கு வணக்கம்,

அன்புடன் வரவேற்றதற்க்கு நன்றி.. நிச்சயமாக என் கருத்துக்களையும்,படைப்புகளையும் பதிவு செய்வேன் நண்பரே. உள்ளதை உள்ளபடி கூற வேண்டுமெனில் தட்டுதடுமாறி தமிழில் அடிக்க பழகி வருகின்றேன்.இன்னும் சிறிது காலம் சென்றதும் பாருங்கள் என் வேகத்தை. தற்ப்போது வரும் எனது சொற்பிழைகளை,பொருட்பிழைகளை அனனைவரும் மன்னிப்பிர்களாக.

வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்.

அன்புடன்,
தமிழ்நிலா

தமிழ்நிலா
27-06-2007, 08:40 PM
அன்புரசிகன் அவர்களே வணக்கம்,

தங்கள் உற்ச்சாகமூட்டும் வரவேற்ப்பிற்க்கு மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்.

அன்புடன்,
தமிழ்நிலா.

அறிஞர்
27-06-2007, 08:41 PM
உள்ளதை உள்ளபடி கூற வேண்டுமெனில் தட்டுதடுமாறி தமிழில் அடிக்க பழகி வருகின்றேன்.இன்னும் சிறிது காலம் சென்றதும் பாருங்கள் என் வேகத்தை. தற்ப்போது வரும் எனது சொற்பிழைகளை,பொருட்பிழைகளை அனனைவரும் மன்னிப்பிர்களாக.


சிறுபிள்ளை நடக்க பழகும்பொழுது... யாரும் நகைப்பத்தில்லை... மாறாக நன்றாக நடக்க உதவுவார்கள்..

அது போல தான் இங்கு.. அனைவரும்.. சிறிது சிறிதாக எழுத பழகியவர்கள்...

எங்களை போல நீங்கள் இணைந்து மன்றத்தில் கலக்குவீர்கள் என நம்புகிறோம்.

தமிழ்நிலா
27-06-2007, 08:46 PM
இனியவள் அவர்களுக்கு,

இந்த இளயவளுக்கு,இனியவள் தந்த இனிமையான* வரவேற்ப்பிற்க்கு நன்றி...நன்றி....நன்றி.

வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்.

அன்புடன்,
தமிழ்நிலா.

தமிழ்நிலா
27-06-2007, 08:55 PM
வாத்தியார் ஐயாவுக்கு,

வணக்கம்.வரவேற்றமைக்கு நன்றிகள் பல. எப்படி அவதார் தேர்வு செய்வது என்று கூற இயலுமா?நன்றி.

வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்.

அன்புடன்,
தமிழ்நிலா.

அறிஞர்
27-06-2007, 09:00 PM
வாத்தியார் ஐயாவுக்கு,

வணக்கம்.வரவேற்றமைக்கு நன்றிகள் பல. எப்படி அவதார் தேர்வு செய்வது என்று கூற இயலுமா?நன்றி.

வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்.

அன்புடன்,
தமிழ்நிலா.

அது என்ன*ங்க* வாத்தியார்..... உங்க*ளுடைய* user cp போய் அவதார் தேர்ந்தெடுக்கலாம்.. இல்லையென்றால் புதிய அவதார் சேர்க்கலாம்.. முயலுங்கள்.

தமிழ்நிலா
27-06-2007, 09:09 PM
அறிஞர் அவர்களுக்கு வணக்கம்,

தங்கள் அன்பான வரவேற்ப்பும்,அக்கறையான வழிகட்டுதலும் என்னை பரவசபடுத்துகின்றது.ஊக்கபடுத்துகின்றது.நன்றிகள் பல.எனக்கு மன்ற்ம் கூறித்து
நன்றாக அறிந்து கொள்ள வழி கூற இயலுமா?என்னால் சில பகுதிகளில் நுழைய அனுமதி இல்லையே ஏன்? நன்றி.

வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்.

அன்புடன்,
தமிழ்நிலா.

தமிழ்நிலா
27-06-2007, 09:15 PM
அது என்ன*ங்க* வாத்தியார்..... உங்க*ளுடைய* user cp போய் அவதார் தேர்ந்தெடுக்கலாம்.. இல்லையென்றால் புதிய அவதார் சேர்க்கலாம்.. முயலுங்கள்.



எல்லாம் நம்ம லொள்ளுவத்தியாரை தான் அவ்வாறு அன்பாக அழைத்தேன். அவதார் தேர்ந்து சேர்க்க* முய*ற்ச்சிக்கின்றேன்.ந*ன்றி.

வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்.

அன்புடன்,
தமிழ்நிலா.

இணைய நண்பன்
27-06-2007, 09:32 PM
தமிழ்மேல் கொண்டுள்ள பற்றினால் தமிழ்நிலா என்ற அழகிய பெயரில் மன்றத்தின் மூலம் எங்களுடன் சங்கமித்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.உங்கள் படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம்.நன்றி

தமிழ்நிலா
27-06-2007, 09:38 PM
இக்ராம் அவர்களுக்கு,

அழகு தமிழில் வரவேற்ற நண்பருக்கு நன்றிகள் பல.

தமிழ்நிலா

ஓவியா
28-06-2007, 04:10 PM
தமிழ்நிலாவை ஓவிய*ப்பாவை இருகரங்கூப்பி வரவேற்க்கிறேன்.

நன்கு உலவி படித்து மகிழுங்கள். உங்கள் படைபுகளையும் கொடுங்கள்

நம் மன்றத்தின் விதிமுறைகளை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

நன்றி.

ஷீ-நிசி
28-06-2007, 04:16 PM
வாவ்! அருமையான அறிமுகம்... உங்கள் தமிழ் தாகத்தை நிச்சயம் இம்மன்றம் தீர்க்கும்.. வாழ்த்துக்களும்! வரவேற்புக்களும்!

தமிழ்நிலா
28-06-2007, 10:20 PM
ஓவியா அக்கா,

என்னை அன்புடன் வரவேற்றதற்க்கு மிக்க நன்றி.
மன்றத்து பகுதிகள் அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன, மன்ற விதிகளை படித்து கொண்டிருக்கிறேன்
நன்றி.

தமிழ்நிலா

தமிழ்நிலா
28-06-2007, 10:26 PM
ஷி-நிசி அவர்களுக்கு,

நன்றிகள் பல.உங்கள் கவிதைகள் அனைத்தும் மிக அருமையாய் உள்ளது நண்பரே..மேலும் தொடர வழ்த்துக்கள்.நன்றி.

தமிழ்நிலா
28-06-2007, 10:28 PM
பார்த்திபன் அவர்களே,
நன்றி,நன்றி.தங்கள் அன்புக்கு நன்றி.

தமிழ்நிலா
28-06-2007, 10:39 PM
முன்பு மன்றத்தில் நிலா என்ற பெயரில் ஒரு உறவு இருந்தார். அவரை நினைவுறுத்தும் வகையில் அழகிய பெயரில் வந்துள்ள உங்களை தமிழ்மன்றத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்.

பாரதி அவர்களுக்கு,

நம் மன்றத்து உறவு ஒருவரை நான் நினைவுபடுத்துவதாக கூறியுள்ளிற்கள்.மிக்க மகிழ்ச்சி.. தங்கள் வரவேற்ப்பிற்க்கு நன்றி.

ஓவியா
28-06-2007, 10:52 PM
ஓவியா அக்கா,

என்னை அன்புடன் வரவேற்றதற்க்கு மிக்க நன்றி.
மன்றத்து பகுதிகள் அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன, மன்ற விதிகளை படித்து கொண்டிருக்கிறேன்
நன்றி.

தமிழ்நிலா

நல்லது, மன்றம் ஒரு அழகிய குடும்பம். எங்களுடன் இணைந்துக் கொள்ளுங்கள். என்னை ஓவியா என்றே அழைக்கலாம். :grin: :grin:

தமிழ்நிலா
28-06-2007, 11:09 PM
நல்லது, மன்றம் ஒரு அழகிய குடும்பம். எங்களுடன் இணைந்துக் கொள்ளுங்கள். என்னை ஓவியா என்றே அழைக்கலாம். :grin: :grin:


சரி தோழி.இன்று முதல் ஒவியா என்றே அழைக்கிறேன்.என் உடனடி மாற்றத்தை மேலே காணவும்(ஒவியா என்றே அழைத்து உள்ளேன்):smartass:

ஓவியா
29-06-2007, 12:09 AM
சரி தோழி.இன்று முதல் ஒவியா என்றே அழைக்கிறேன்.என் உடனடி மாற்றத்தை மேலே காணவும்(ஒவியா என்றே அழைத்து உள்ளேன்):smartass:

அடடே, ஆமாம். நன்றி. :4_1_8:

அமரன்
29-06-2007, 07:11 AM
தமிழில் பெயர்மாற்றிக்கொண்ட தோழிக்கு நன்றிகள் பல...
அன்புடன்,

அன்புரசிகன்
29-06-2007, 08:48 AM
தமிழ் நிலா ஓவியா அக்காவின் அடுத்த உருவமாக வாழ்த்துக்கள்.

அமரன்
29-06-2007, 08:49 AM
தமிழ் நிலா ஓவியா அக்காவின் அடுத்த உருவமாக வாழ்த்துக்கள்.

பதிவுகளைப்பார்த்தால் அப்படித்தான் தெரிகின்றது.
அன்புடன்

அன்புரசிகன்
29-06-2007, 08:55 AM
அதைத்தான் நானும் கூறினேன் அமரா...

ஓவியா
29-06-2007, 11:38 AM
அன்பு, அமர்,
அவர் என்னையும் மிஞ்ச வேண்டும் என்பதே என் ஆசை. கை கொடுத்து தூக்கி விடுவோம்.

(பின்னாடி சிரிப்புகள் பகுதியில் கலாய்க்க ஒரு ஆள் வேண்டுமே, ம்ம் ஆகட்டும் ஆகட்டும். பலே.)

namsec
29-06-2007, 01:15 PM
இம்மன்றத்தில் சூரியன், ஆதவன் என அனைவரும் இருக்க நிலவு மட்டும் இங்கில்லை. நிலவில்ல குறையை நீக்கவந்த தமிழ்நிலவை வரவேற்க்க பெருமைகொள்கிறேன்

தமிழ்நிலா
29-06-2007, 09:15 PM
வாழ்துக்களுக்கு நன்றி அன்புரசிகன், அமரன் அவர்களே.என்ன நீங்கள் மடுவை(என்னை)போய் மலையுடன்(ஒவியா) ஒப்பிடுகின்றிற்களே...ஒவியாவுக்கு நிகர் ஒவியாதான் சொல்லிவிட்டேன் ஆமா..(ஐஸ் எல்லாம் வைக்கலை ஹி...ஹி..)

தமிழ்நிலா
29-06-2007, 09:19 PM
நேம்செக் அவர்களே,

அன்புடன் வரவேற்றமைக்கு நன்றி.தமிழுக்காக நிலவு எப்பொதும் இங்கு இருக்கும்.நன்றி.

அன்புரசிகன்
29-06-2007, 09:33 PM
ஒப்பிடுகின்றிற்களே...ஒவியாவுக்கு நிகர் ஒவியாதான் சொல்லிவிட்டேன் ஆமா..(ஐஸ் எல்லாம் வைக்கலை ஹி...ஹி..)

ஆமா... ஐஸ் எல்லாம் வைக்காமல் கொஞ்சமா வைச்சிருக்கீங்க... ஏனுங்க இந்த கஞ்சத்தனம்.:sport-smiley-014: தாராளமா ஐஸ் வையுங்க... :D :D :D

தமிழ்நிலா
29-06-2007, 09:36 PM
ஆமா... ஐஸ் எல்லாம் வைக்காமல் கொஞ்சமா வைச்சிருக்கீங்க... ஏனுங்க இந்த கஞ்சத்தனம்.:sport-smiley-014: தாராளமா ஐஸ் வையுங்க... :D :D :D


வ*ழிக*ட்டுத*லுக்கு நன்றிங்கோ.....அன்புர*சிக*ன்

அன்புரசிகன்
29-06-2007, 09:40 PM
எதுக்கு நன்றியெல்லாம்.. இன்னும் எவ்வளவோ இருக்கு...

ஓவியா
29-06-2007, 11:54 PM
வாழ்துக்களுக்கு நன்றி அன்புரசிகன், அமரன் அவர்களே.என்ன நீங்கள் மடுவை(என்னை)போய் மலையுடன்(ஒவியா) ஒப்பிடுகின்றிற்களே...ஒவியாவுக்கு நிகர் ஒவியாதான் சொல்லிவிட்டேன் ஆமா..(ஐஸ் எல்லாம் வைக்கலை ஹி...ஹி..)

இதென்ன கொடுமை சரவணன்?

அன்பின் தமிழ்நிலா,
மெல்ல சுரண்ட மலையும் ஒருநாள் பொட்டளாகும். ஆனால் உலகத்தில் (மடு) நீர் மட்டும் வற்றாது. நான் சாதரணப் பெண்தான், சொல்லப்போனால் உங்கள் தமிழ் என் தமிழைவிட சிறப்பாக இருக்கின்றது. சிரிய (நீங்கள்) மடுதான் பின்னோரு நாளில் காட்டாறு வெள்ளமாக மாறுகிறது. உங்கள தமிழ் வளம் வளர மீண்டும் அடியேனின் வாழ்த்துக்கள். :ernaehrung004:

ஜோய்ஸ்
30-06-2007, 07:35 AM
வருக,வரவேற்ப்புக்கள்.

அமரன்
30-06-2007, 07:42 AM
இதென்ன கொடுமை சரவணன்?

அன்பின் தமிழ்நிலா,
மெல்ல சுரண்ட மலையும் ஒருநாள் பொட்டளாகும். ஆனால் உலகத்தில் (மடு) நீர் மட்டும் வற்றாது. நான் சாதரணப் பெண்தான், சொல்லப்போனால் உங்கள் தமிழ் என் தமிழைவிட சிறப்பாக இருக்கின்றது. சிரிய (நீங்கள்) மடுதான் பின்னோரு நாளில் காட்டாறு வெள்ளமாக மாறுகிறது. உங்கள தமிழ் வளம் வளர மீண்டும் அடியேனின் வாழ்த்துக்கள். :ernaehrung004:

வாழ்த்துங்க வாழ்த்துங்க. நன்றாக வளர்த்து விடுங்க. எப்ப வாரப்போறீங்களோ தெரியாது.

ஓவியன்
01-07-2007, 03:47 PM
இதென்ன கொடுமை சரவணன்?
:ernaehrung004:

அண்மையில் சந்திரமுக் பாத்தீங்களா அக்கா? :D

ஓவியா
01-07-2007, 03:52 PM
அண்மையில் சந்திரமுக் பாத்தீங்களா அக்கா? :D

அடடே சமத்துபுள்ளே, எப்படி அப்பூ கண்டு பிடிச்சீங்கள்?? பலே.



வாழ்த்துங்க வாழ்த்துங்க. நன்றாக வளர்த்து விடுங்க. எப்ப வாரப்போறீங்களோ தெரியாது.

அதான் கடவுளுக்கு வெளிச்ச்ம், ஆனால் வாரப்போர நேரத்தில் சரியா வாருவோம் :D :D

அமரன்
01-07-2007, 03:53 PM
அடடே சமத்துபுள்ளே, எப்படி அப்பூ கண்டு பிடிச்சீங்கள்?? பலே.




அதான் கடவுளுக்கு வெளிச்ச்ம், ஆனால் வாரப்போர நேரத்தில் சரியா வாருவோம் :D :D

பன்மையில் இருக்கே பதில். கூட்டணியில் யாருங்க.

ஓவியன்
01-07-2007, 03:59 PM
பன்மையில் இருக்கே பதில். கூட்டணியில் யாருங்க.

அது ஓவியனோட நிழல்!! :D

அமரன்
01-07-2007, 04:01 PM
அது ஓவியனோட நிழல்!! :D

உங்க நிழல் யாருங்க..

ஓவியன்
01-07-2007, 04:07 PM
உங்க நிழல் யாருங்க..

நான் பதில் சொல்லணும்னு ஏதாவது இருக்காஎன்ன?:icon_clap: :icon_clap: :icon_clap:

அமரன்
01-07-2007, 04:11 PM
நான் பதில் சொல்லணும்னு ஏதாவது இருக்காஎன்ன?:icon_clap: :icon_clap: :icon_clap:

ஏதாவது இருந்தாச் சொல்லுங்க...(எங்க இருந்தான்னு கேட்காதீங்க மக்கா)

இளசு
01-07-2007, 09:29 PM
ஆர்வமூட்டும் அழகிய அறிமுகம்..

வரவேற்கிறேன் தமிழ்நிலா அவர்களை..

மகிழ்ச்சியோடும், எதிர்பார்ப்போடும்..

உங்கள் பதிவுகளால் என்றும் மன்றமெங்கும் தண்ணொளியாய் திகழ வாழ்த்துகிறேன்..

Gobalan
05-07-2007, 04:05 PM
தமிழ் நிலா, வாருங்கள். உங்களை போல் தான் நானும் த்மிழ் காற்றுக்காக ஏங்கிகொண்டும், தமிழிதட்செழுத்தில் பதிக்க சிரம பட்டுகொண்டிருக்கிறேன். இந்த தமிழ் மன்றம் என்னை அன்புடன் ஏற்று கொண்டிருக்கிறது. உங்களுக்கும் என்னை போல் எதிர்பார்ப்புகள் இந்த மன்றத்தில் கைகூடும். நல்ல தோழ்ர்கள், தோழிகள் கிடைப்பார்கள். நல்ல பதிப்புகள், கவிதைகள், விமர்சனங்கள், கருத்துகள், கதைகள், செய்திகள், ஆன்மிக சர்ச்சைகள், இன்னும் பல விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு, எல்லாம் நல்ல தமிழ் ரசனையுடன் கிடைக்கும் இந்த மன்ற்த்தில். உங்கள் பதிப்புகளையும் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள் நம் மன்றத்தின் உறிப்பினர்கள். பங்கு கொள்ளுங்கள். வருக உங்கள் வரவு நல்வரவாகட்டும். நன்றி.