PDA

View Full Version : உஷ்ண நீர்க்கடுப்பு,நீர் எரிச்சல் உடன் தீī



வட்டா
26-06-2007, 07:36 PM
உஷ்ண நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உடன் தீர*


1. நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் வெங்காரம் என்னும் மருந்தை சட்டியில் இட்டு பொரித்து, பொடித்துக் கொண்டு, அரைத் தேக்கரண்டி வீதம் இளநீரில் கலந்து பருகி வர உடன் தீரும்.

2. யானை நெருஞ்சில் (பெரும் நெருஞ்சில்) என்னும் செடியின் இலையைப் பறித்து அதை பாத்திரத்திலிட்டு அது மூழ்குமளவு நீர்விட்டு, 15 நிமிடங்கள் கழித்து வடிகட்ட நீர் ஜெல்லி போலாகும். இதை இரண்டு டம்ளர் வீதம் பருகி வர உடன் குணமாகும்.

3. மண்பாண்ட நீரில் இரண்டு டம்ளரில், தேன் ஒரு தேக்கரண்டி, ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு, அரைத் தேக்கரண்டி உப்பு ஆகியன கலந்து பருக உடன் தீரும். :food-smiley-008:

ஓவியா
26-06-2007, 08:01 PM
நல்ல தகவல். பயனுல்ல பதிவும்.

நன்றி ஃபாரிட்.