PDA

View Full Version : மீண்டும் போவோமாஅமரன்
26-06-2007, 07:34 PM
மீண்டும் போவோமா
பாட்டன் பாட்டி
வெத்தலை போட்டு
துப்பிச் சிவந்த
நம்மண்ணுக்கு

மீண்டும் போவோமா
ஆப்பன் ஆத்தா
அகரம் எழுதி
சிகரம் ஏறிய
நம்மண்ணுக்கு...

மீண்டும் போவோமா
முப்பாட்டன் பாட்டி
கூத்து ஆடி
கலை வளர்த்த
நம்மண்ணுக்கு

மீண்டும் போவோமா
ஏரு பூட்டி
பாட்டுப்பாடி
உழவு செய்து
செழித்த மண்ணுக்கு

மீண்டும் போவோமா
வாவி மகள் பாட்டுப்பாட
மீன்கள் துள்ளி விளையாட
சோழக்காற்று கூத்தாட
நிலாச்சோறு சாப்பிட்ட
நம் மண்ணுக்கு

விடை தெரியா வினாவை
மனதில் சுமந்த படி−அலுவலக
கோப்பை நெஞ்சில் சுமந்தபடி
யூரோ தேடி ஓடிக்கொண்டு நான்

அன்புரசிகன்
26-06-2007, 07:37 PM
போவோமா என்பது சந்தேகம்
போவோம் என்பது உறுதி
நம் மண் மணக்கிறது அமரா

வாழ்த்தக்கள்.

ஓவியன்
26-06-2007, 07:38 PM
அப்பப்பா ஊருக்கே போன திருப்தி உங்கள் வரிகளில் அமரன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

ஓவியன்
26-06-2007, 07:41 PM
காற்றும் திசை மாறும்
கடலும் கதை பேசும்
விட்ட குறை
தொட்ட குறை
முடித்து வைக்கவென்று
ஒரு காலம் வரும்!
அப்பொது
நான்,நீர்,அக்னி,
இந்த வம்பு
செய்யும் அன்பு!,
எல்லோரும் ஒரு படகிலேறி
வெற்றித் திருமகளின்
வீட்டுக் கதவைத்
தட்டத் தான் போகிறோம்
எதிர் பார்த்திருங்கள்!.

அக்னி
26-06-2007, 07:44 PM
வார்த்தை வளம் கருத்தை தொட்டு உலுப்புகிறது உணர்வை...
மண்ணின் வாசம் மணக்கும் மழை பொழியும்போது...
இன்று குருதியால், குளிக்கும் நம் மண்ணும் மணக்கிறது...
பிரசவிக்க முன் குழந்தை நனைக்கப்படுவது குருதியால்,
நம் தேசமும் பிரசவத்திற்குத் தயாராக குளிக்கிறது குருதியால்...

அமரன்
26-06-2007, 07:45 PM
நன்றிகள் நண்பர்களே....

ஷீ-நிசி
27-06-2007, 03:43 AM
தாய் தேசம் பார்க்க விரும்பும் உங்கள் ஏக்கம், பாசம் உங்கள் வரிகளிலே தெரிகிறது. எல்லாம் கைகூடும் ஓர் நந்நாளில்... பறந்திடுங்கள் உங்கள் தேசங்களை நோக்கி அந்நாளில்...........

அமரன்
27-06-2007, 07:08 AM
நன்றி நிஷி...உங்கள் வாக்கு நிஜமாகவேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

ஆதவா
30-06-2007, 08:12 AM
ரொம்ப அருமை, எளிமை... கவிதை படிக்க எடுத்துக் கொண்ட நேரமே வினாடிகளில் தான்... உங்கள் ஏக்கங்கள் எல்லாம் ஒரு நாள் தீரும் அமரன். பிறந்த மண்ணுக்கு என்றுமே மனம் ஏங்கும்...... வெளிநாடுவாழ் மனிதர்கள் அனைவருக்கும் பொருந்து இந்த கவிதை.... நெஞ்சை நனைக்கிறது.... வாழ்த்துக்கள்.

சூரியன்
30-06-2007, 09:25 AM
கண்டிப்பாக ஒரு நாள் போவீர்கள் அமரன்

இளசு
03-07-2007, 08:26 PM
நம்பிக்கை... ஏக்கம்.. எதிர்பார்ப்பு..

இவை இல்லையென்றால் வாழ்க்கை
ஏற்கனவே பார்த்த கார்ட்டூன் படம் போல்
வெளுப்பேறி விடும்!

வண்ணங்களை வாழ்க்கைக்கு ஏற்றும்
எண்ணங்களை எங்கள் எல்லோர் சார்பாகவும் வடித்த
அமரனின் நம்பிக்கைக்கு என் கை கொடுக்கிறேன்..
நெகிழ்ச்சியுடன்... மகிழ்ச்சியுடன்!

இலக்கியன்
25-08-2007, 08:32 AM
போவோமா என பழைய நினைவுகள் மீட்க வைத்தீர்கள் வாழ்த்துக்கள்

leomohan
25-08-2007, 08:45 AM
மீண்டும் போவோமா
பாட்டன் பாட்டி
வெத்தலை போட்டு
துப்பிச் சிவந்த
நம்மண்ணுக்கு

மீண்டும் போவோமா
ஆப்பன் ஆத்தா
அகரம் எழுதி
சிகரம் ஏறிய
நம்மண்ணுக்கு...

மீண்டும் போவோமா
முப்பாட்டன் பாட்டி
கூத்து ஆடி
கலை வளர்த்த
நம்மண்ணுக்கு

மீண்டும் போவோமா
ஏரு பூட்டி
பாட்டுப்பாடி
உழவு செய்து
செழித்த மண்ணுக்கு

மீண்டும் போவோமா
வாவி மகள் பாட்டுப்பாட
மீன்கள் துள்ளி விளையாட
சோழக்காற்று கூத்தாட
நிலாச்சோறு சாப்பிட்ட
நம் மண்ணுக்கு

விடை தெரியா வினாவை
மனதில் சுமந்த படி−அலுவலக
கோப்பை நெஞ்சில் சுமந்தபடி
யூரோ தேடி ஓடிக்கொண்டு நான்

நெஞ்சை தொட்டது அமரன். வாவி என்றால் என்ன?

இலக்கியன்
25-08-2007, 08:48 AM
நெஞ்சை தொட்டது அமரன். வாவி என்றால் என்ன?

குளம் தான் வாவியின் ஒத்தகருத்து சொல்
மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பு என விபுலானந்த அடிகள் உரையை நினைவில் மீட்ட அமரனுக்கு வழ்த்துக்கள்

இதயம்
25-08-2007, 09:05 AM
லெவி பேண்ட் போட்டு, கேட்டர் பில்லர் காலணி அணிந்து, ரேபான் கண்ணாடி அணிந்து, பிஸ்ஸா, பர்கர் தின்று தீர்த்து அந்நிய கலாச்சாரத்தோடு அடியோடு மூழ்கிப்போனாலும், தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்ட பந்தாக நம் மனதின் உள் நினைவுகள் அவ்வப்போது மேலெழுந்து வந்து நம் மன ஏக்கத்தை மறைக்காது சொல்லிவிடுகிறது.

நான் மேல் சொன்ன இவையெல்லாம் சமூகம் நம்மை மதிக்க நாம் போடும் வேஷம். ஆனால், நம்மை மகிழ்விக்க தேவைப்படுவது மிக சுலபமான விஷயம் மட்டும். ஆனால், அதை செய்ய முடிந்தவர்கள் செய்வதில்லை. செய்ய நினைப்பவர்களுக்கு அது மெய்ப்படுவதில்லை. வேஷத்திலும், கனவிலுமே நம் வாழ்க்கை நகர்கிறது.. வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்திற்கும், நிம்மதிக்குமான எதிர்த்திசையில்..!!

மனோஜ்
25-08-2007, 09:22 AM
பழமை என்றும் தங்கம் ( ஓல்ட் இஸ் கோல்ட்) என்பார்களே அதை கவிதையாக்கியமை அருமை