PDA

View Full Version : மனித நேயம் எங்கே



பட்டாம்பூச்சி
26-06-2007, 06:57 PM
முன்னொரு காலத்தில், சீனாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்று.

புதிய மன்னர் பதவியேற்கப் போவதையொட்டி, அரண்மனையில் அலங்கார வேலைப்பாடுகள் அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருந்தது. நீண்ட நாட்களாகவே ஓர் ஓவியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இருந்த மரப்பல்லி ஒன்று இனி எங்கே போவது என்று தெரி யாமல், அங்குமிங்கும் ஓடி கட்டிலின் அடியில் போய் ஒட்டிக்கொண்டது.

கட்டிலில் வஸ்திர அலங்காரம் செய்ய வந்தவன், கவனக்குறைவால் பல்லியோடு சேர்த்து ஒரு ஆணியை அடித்துவிட்டான். பல்லி வலி தாங்க முடியாமல் கத்தியபோதும், அது தன் இருப்பிடத்தை விட்டு நகரவே முடியவில்லை.

பல நாட்களாக அந்தப் பல்லி கத்திக்கொண்டு இருந்தது. யாரும் அதைக் கவனிக்கவேயில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, அரசர் கட்டிலின் திரைச்சீலையை மாற்றச் சொன்னபோது, ராணி தற்செயலாக கட்டிலின் அடியில் ஆணியில் அடிபட்டு ஒரு பல்லி மெலிந்துபோய் ஒட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டு மன்னரிடம் காட்டினாள்.

மன்னர், ஐயோ பாவம்! என்றபடியே, எப்படி இந்தப் பல்லி இத்தனை நாட்களாக உயிரோடு இருந்தது என்று புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது உத்திரத்திலிருந்து இன்னொரு பல்லி இறங்கி வந்து, தன் வாயில் கவ்விக்கொண்டு வந்திருந்த இரையை, ஆணியில் மாட்டிக்கொண்டு இருந்த பல்லியின் வாயில் புகட்டிவிட்டுப் போவதைக் கண்டார்.

அவரால் நம்பவே முடியவில்லை! உயிருக்குப் போராடிய பல்லியை இன்னொரு பல்லி உணவளித்துக் காப்பாற்றி இருக்கிறது. இயற்கையில் ஒரு உயிரைக் காப்பாற்ற, பல்லிகூட தன்னால் ஆனதைச் செய்கிறது. மனிதராகிய நாமோ, அடுத்தவர் உணவைப் பறித்தும், அதிகாரம் செய்தும் வருகிறோமே என்று மனமாற்றம் கொண்டார் அந்த மன்னர் என்று சீன சரித்திர குறிப்பேடு சொல்கிறது.

நடந்தது உண்மைச் சம்பவமோ, கற்பனையோ... எதுவாக இருப்பினும், உயிர்ப் போராட்டத்தில் ஒன்றையொன்று சார்ந்தும் உதவியும் பகிர்ந்தும் வாழ்வதுதான் இயற்கையின் அற்புதம். அந்த அக்கறையும் நேசமும்தான் மனிதனின் அடிப்படை உணர்வுகள்! இன்று நாம் மறுப்பது சாப்பாட்டை மட்டுமல்ல; சக மனிதன் மீதான நமது அக்கறையையும்தான்!

நன்றி : ஆனந்தவிகடன் (எஸ்.ராமகிருஷ்ணனின் கேள்விக்குறி தொடரிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதை)

அமரன்
26-06-2007, 07:02 PM
அருமையான நீதிக்கதை. நன்றி பட்டாம்பூச்சி. இப்போது உலகில் காண்பது அரிதான ஒன்று மனித நேயம். இதுபோல பலகதைகளைத் தந்து எம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துங்கள். இது நீதிக் கதைகள், சுவையான சம்பவங்கள் பகுதியில் இருப்பது சிறப்பாக இருக்கும் என நினைக்கின்றேன்.

பட்டாம்பூச்சி
26-06-2007, 07:07 PM
இது நீதிக் கதைகள், சுவையான சம்பவங்கள் பகுதியில் இருப்பது சிறப்பாக இருக்கும் என நினைக்கின்றேன்.

பதிவு செய்த பிறகே எனக்கும் இந்த பிசகு தெரிந்தது. நிர்வாகத்தினர் யாரேனும் தயவு செய்து இந்தத் திரியினை நீதிக் கதைகள், சுவையான சம்பவங்கள் பகுதிக்கு மாற்றித் தருமாறு வேண்டுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

அமரன்
26-06-2007, 07:08 PM
பதிவு செய்த பிறகே எனக்கும் இந்த பிசகு தெரிந்தது. நிர்வாகத்தினர் யாரேனும் தயவு செய்து இந்தத் திரியினை B]நீதிக் கதைகள், சுவையான சம்பவங்கள்[/B] பகுதிக்கு மாற்றித் தருமாறு வேண்டுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

விரைவில் மாற்றப்படும் நண்பரே...பரிந்துரைக்கப்பட்டுள்ளது

பட்டாம்பூச்சி
26-06-2007, 07:25 PM
ஆஹா! என்னமா வேலை நடக்குது... கண்ணிமைக்கும் நேரத்திலே உரிய இடத்தில் திரி.... ஸ்பைடர் மேன் இங்கேதான் இருக்கிறார் போலும்.

நன்றி!

அக்னி
26-06-2007, 07:27 PM
சுவையான, படிப்பினையான தகவற்பகிர்வுக்கு மிக்க நன்றி.

அன்புரசிகன்
26-06-2007, 07:29 PM
கதை நன்றாக உள்ளது. அது உண்மை பெய் என்ற விவாதத்திற்கு அப்பால் அதிலிருக்கும் உட்கருத்தை நாம் உணரவேண்டும்.

கதைக்கு நன்றி பட்டாம்பூச்சி.

அமரன்
26-06-2007, 07:44 PM
ஆஹா! என்னமா வேலை நடக்குது... கண்ணிமைக்கும் நேரத்திலே உரிய இடத்தில் திரி.... ஸ்பைடர் மேன் இங்கேதான் இருக்கிறார் போலும்.

நன்றி!

ஐயோ ரொம்பப் புகழ்றீங்க பட்டாம்பூச்சி. நன்றிகள் பல கோடி..ஆமா எல்லோரையும் சார்ட்டாக அழைப்பது நம்ம வழக்கம். உங்களை எப்படி அழைப்பது.

பட்டாம்பூச்சி
27-06-2007, 02:24 AM
ஆமா எல்லோரையும் சார்ட்டாக அழைப்பது நம்ம வழக்கம். உங்களை எப்படி அழைப்பது.

சார்ட்டாக ?? புரியவில்லை நண்பரே.

அமரன்
27-06-2007, 07:27 AM
அமரன் என்ற என்னை அமர் என்றும் அமரா என்றும் அழைக்கின்றனர். இதேபோன்று உங்களை எப்படி அழைப்பது தோழரே...

பட்டாம்பூச்சி
27-06-2007, 05:57 PM
அமரன் என்ற என்னை அமர் என்றும் அமரா என்றும் அழைக்கின்றனர். இதேபோன்று உங்களை எப்படி அழைப்பது தோழரே...

பூச்சி என்றால் நல்லா இருக்காது
பட்டு என்றால் பெண்பிள்ளை பெயர் போல இருக்குமோ? ஆனால் என் அம்மா குழந்தைகளை பாசமாக (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) பட்டு என்றுதான் அழைப்பார். என் மனம் மென்மையானது, பட்டைப் போன்று மென்மை என்றும் கொள்ளலாம்... எனவே பட்டு என்று அழைப்பதை விரும்புகிறேன்.

Gobalan
30-06-2007, 09:41 AM
உண்மையா பொய்யா என்பது அல்ல இந்த கதையின் தத்துவம். இதில் உள்ளடங்கிருக்கும் கருத்து மிக வரவேற்க்கதக்கது. இதன் அவசியம் இந்த கலிகாலத்தில் நித்தியம் உணர்கிறோம். பக்கத்தில் இருக்கும் மனிதனைபற்றி தெரிந்துகொள்ளும் நேரம் கூட இல்லாத நமக்கு இந்த கதையில் வரும் பல்லிகள் தரும் தத்வுஅம் ஒரு அத்தியாவசியமான* ஒன்று. இந்த நல்ல கதையை பதித்த பட்டாம்பூச்சிக்கு என் நன்றி. *

விகடன்
12-08-2007, 06:36 AM
பல்லிக்கும் உண்டு இரக்கம்....
என்று சொல்வதா? இல்லை
பல்லிக்கெல்லாம் இருக்கிறது இரக்கம் என்று ஏங்குவதா?

நல்லதொரு நீதிக்கதை. பாராட்டுக்கள்.