PDA

View Full Version : இதுதான் தலைவிதியா..?



அக்னி
26-06-2007, 06:05 PM
விழி திறந்து பார்க்கும் போதெல்லாம்,
இருள் சூழ்ந்த திசைகளா தமிழனுக்கு..?
நாசி தேடும் காற்றின் மிதப்புகளில்,
கந்தகத்தின் துகள்களா சுவாசத்திற்கு..?
செவி நாடும் சத்தங்கள் எல்லாம்,
வெடிகள்தான் இசை ஆகுமோ..?
வாய் திறந்து வரும் வார்த்தைகளில்,
ஓலங்கள்தான் வர வேண்டுமோ..?

இதுதான் தமிழர்
எங்கள் தலைவிதியா..?

***

விதியைப் பார்த்து
வீம்புடன் சிரித்தது,
தமிழின் வீரம்...

காற்றிற்குக் கடிவாளம் பூட்டியது...
கடலுக்குள் நெருப்பாய் எரிந்தது...
நிலமெங்கும் புளுதியாய் மூடியது...

தலைவிதி மாறத் தொடங்கியது,
தலைவிதியைத் திணித்தவர்கள்..,
தம்விதியை எதிர்கொள்ளத்
திராணியற்றுப் போனார்கள்...

எத்தனை ஆயிரம்,
கனவளவுக் குருதியில்
குளித்தது.., எம்மண்..?
அதன்,
ஊற்றுக்குப் பதில் சொல்,
எதிரியே...

எத்தனை பதிவிரதைகள்,
விரதம் சிதைக்கப்பட்ட
சிதைகள்,
எத்தனை பச்சிளம் பாலகரின்
வயிற்றுக்குள் எரிந்த பசி..,
எத்தனை பிணியாளரின்,
உடலில் எரிவான வேதனை...

இவைதான்
இன்று உன்னைத்
தீண்டும் தீநாக்குகள் எதிரியே...
இவற்றின்
தீண்டல்தான்,
பற்றி எரியப்போகும்
உன் நாட்டிற்கு
தமிழர் நாம் தரும்
சிதை நெருப்பு...

வெப்பம்
தாங்க முடியாதென்றால்
அகன்றுவிடு... எம்மைவிட்டு...
அல்லாவிட்டால்,
தலைகள் வீழும்,
தலைவிதிகள் இடம்மாறும்...

அமரன்
26-06-2007, 08:29 PM
ஆழமாகப் படித்து பின்னூட்டமிடவேண்டிய கவிதை. விரைவில் வருகின்றேன்...விமர்சனத்துடன்...

அக்னி
26-06-2007, 08:30 PM
ஆழமாகப் படித்து பின்னூட்டமிடவேண்டிய கவிதை. விரைவில் வருகின்றேன்...விமர்சனத்துடன்...

எதிர்பார்த்திருக்கின்றேன்...

அமரன்
27-06-2007, 03:59 PM
அதிகம் சொல்வதை விட ஒற்றை வரியில் சொல்கின்றேன். உணர்ச்சிப்பிளம்பாய் அக்னி. பாராட்டுகள் தோழா

ஷீ-நிசி
27-06-2007, 04:37 PM
உணர்வுகள் அற்புதமாய் வார்த்தைகளில் வெளிப்பட்டிருக்கிறது அக்னி....


தலைவிதி மாறத் தொடங்கியது,
தலைவிதியைத் திணித்தவர்கள்..,
தம்விதியை எதிகொள்ளத்
திராணியற்றுப் போனார்கள்...



ரசிக்க வைத்த வார்த்தைகள்!

அக்னி
28-06-2007, 09:21 AM
அதிகம் சொல்வதை விட ஒற்றை வரியில் சொல்கின்றேன். உணர்ச்சிப்பிளம்பாய் அக்னி. பாராட்டுகள் தோழா
நன்றி அமரன்!

உணர்வுகள் அற்புதமாய் வார்த்தைகளில் வெளிப்பட்டிருக்கிறது அக்னி....
ரசிக்க வைத்த வார்த்தைகள்!
நன்றி ஷீ-நிசி!