PDA

View Full Version : தலைமுழுக்கு



பட்டாம்பூச்சி
26-06-2007, 05:29 PM
தலைமுழுக்கு!

குமரேசனுக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.

ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான் குமரேசன். ஆச்சர்யம்! அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!

கடுப்பான குமரேசன், அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்... வீட்டில் நாய்!

மூன்றாம் நாள்... காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான். ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய், வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டான்.

இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்? என்றாள் அவள்.

அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!

- சர்வஜித்

நன்றி : ஆனந்தவிகடன் (ஜூன் 27, 2007 இதழ்)

அக்னி
26-06-2007, 05:31 PM
அடடா வந்தவுடன் நகைக்க வைத்துவிட்டீர்கள்...
வரவேற்புப் போட்டு முடித்து வருவதற்கிடையில், அழகாய் ஒரு துணுக்கு,
தகுந்த இடத்தில்...
தொடர்ந்தும் இணைந்து சிறப்பியுங்கள்...

ஓவியா
26-06-2007, 05:32 PM
நல்வரவுகள் நண்பரே. பதிவு அசத்தல்.

நன்றி : பட்டாம்பூச்சி
நன்றி : ஆனந்தவிகடன் (ஜூன் 27, 2007 இதழ்)

அமரன்
26-06-2007, 05:34 PM
பட்டாம்பூச்சி. பெயருக்கேற்றாற்போல் பறக்க அரம்பித்து விட்டீர்களே. சுறுசுறுப்பாக ஒரு ந்கைச்சுவை தேன் தந்து விட்டீர்கள். தொடருங்கள் நண்பரே....

பட்டாம்பூச்சி
26-06-2007, 05:44 PM
அக்னி, ஓவியா மற்றும் அமரன் அனைவருக்கும் என் நன்றி. உங்களைப் போன்ற உற்சாகமூட்டும் நல் இதயங்கள்தான் என்னைப் போன்ற புதியவர்களுக்கு தேன் உள்ள மலர்கள்.

aren
26-06-2007, 05:47 PM
கலக்கலான ஜோக். தொடருங்கள்.

விகடன்
31-07-2007, 05:39 AM
ஓபீஸிலேயே சிரிக்கை வைத்துவிட்டீர்கள். அக்கம் பக்கத்தில இருந்தவங்களெல்லாம் ஒரு மாதிரி பார்த்துவிட்டாங்கள்.

சிரிப்பிற்கு மிக்க நன்றி.

ஓவியன்
22-09-2007, 06:55 AM
ஹீ,ஹீ!!!

நம்ம தாமரை எண்ணா இந்த நாயைப் பார்த்தாரோ என்னவோ...?

இந்த நாயோட
வாயோடவா..?
இல்லை
வாய் என்ற
பெயர் வைத்த
வாய் நாயோடவா
நம்ம குமரேசன் (மயூரேசன் என்றால் இன்னும் நல்லா இருக்குமிலே....!! :D )
பேசி இருப்பார்...?

பூமகள்
22-09-2007, 08:46 AM
நல்ல தொகுப்பு பட்டாம்பூச்சி. ரசித்தேன். சிரித்தேன்.
வாழ்த்துக்கள்.
தொடருங்கள் உங்களின் ஆக்கத்தை இனிதே..!