PDA

View Full Version : கீழ்வானம் சிவக்கிறது

அமரன்
26-06-2007, 04:52 PM
வெண்மேகக் கோலமிட்ட
வெண்மணிகள் மின்னுகின்ற
வெளிர் நீல பட்டுடுத்தி
வெள்ளி நிலா பொட்டிட்டு
ஊர்கோலம் போனாள் வானமகள்

கொள்ளை கொள்ளும் அவளழகில்
கள்ளுண்ட வண்டாய் நான் இருக்க..
அவளை உரசியது வல்லூரு ஒன்று..
வெறி கொண்ட உரசலில்
தறிகெட்டு வீழ்ந்தது தீக்கோளம்

மொட்டுகள் கருக..
மலர்கள் உதிர..
சில வேருடன் சாய..
கீழ்வானம் சிவக்கிறது..

அக்னி
26-06-2007, 05:23 PM
சூரியரை, சந்திரரை, நட்சத்திரங்களை முன்னிலைப்படுத்தி,
கவிதைகள் வந்துள்ளன...
ஆனால்,
வானத்தை கதாநாயகியாக்கி வந்த கவிதை,
வித்தியாசமானதாக ரசிக்க வைக்கிறது.
ஆனால், ஒரு குறை,
இன்னமும் நீளமாய் விவரித்திருந்தால், எமது ஒன்றிப்பும் கொஞ்சம் நீளமாய்,
வானமகள் பவனியில் இணைந்திருந்திருக்கும்...
நன்று... நன்றி..!

அமரன்
26-06-2007, 08:27 PM
நன்றி அக்னி. நீட்டி இருக்கலாம்தான் ஆனால் நான் வானமகள் பவனியை பிரதானமாக சொல்லவில்லை. அதனால் பவனி இடையில் முடிந்தது..

அக்னி
26-06-2007, 08:29 PM
நன்றி அக்னி. நீட்டி இருக்கலாம்தான் ஆனால் நான் வானமகள் பவனியை பிரதானமாக சொல்லவில்லை. அதனால் பவனி இடையில் முடிந்தது..

சூரிய அஸ்தமனத்தைச் உவமித்தீர்கள் அல்லவா...
அல்லது,
உட்கருத்தாய் ஏதும் உள்ளதா?

அமரன்
26-06-2007, 08:35 PM
அது அஸ்தமனம் இல்லை அக்னி. உதயம். நம் தேசத்துடன் சம்பந்தப்பட்ட உட்கருத்து இருக்கிறது

அக்னி
26-06-2007, 08:38 PM
அது அஸ்தமனம் இல்லை அக்னி. உதயம். நம் தேசத்துடன் சம்பந்தப்பட்ட உட்கருத்து இருக்கிறது

இப்பொழுது புரிகிறது அமரன்...
ஒரு உதயத்தினுள் ஒளிந்திருக்கும் அஸ்தமனம்...

உங்கள் கவிதைகளின் ஆழம் அதிகரித்துப் போகின்றது...
மேலும் வளர்ந்திட வேண்டும்...

அமரன்
26-06-2007, 08:41 PM
இப்பொழுது புரிகிறது அமரன்...
ஒரு உதயத்தினுள் ஒளிந்திருக்கும் அஸ்தமனம்...

உங்கள் கவிதைகளின் ஆழம் அதிகரித்துப் போகின்றது...
மேலும் வளர்ந்திட வேண்டும்...

நன்றிகள் தோழரே! உங்களுடனும் ஓவியனுடனும் கவியில் சமராடும்போது இன்னும் ஆழமாக போகலாம்...

இணைய நண்பன்
26-06-2007, 09:00 PM
வாழ்த்துக்கள் நண்பரே

அமரன்
27-06-2007, 07:10 AM
நன்றி இக்ராம்.

ஆதவா
30-06-2007, 08:10 AM
நல்ல பொய்மை வளம்... அழகிய கற்பனை.... சிறந்த கவிதை. வாழ்த்துக்கள்... இந்த மாதிரி கவிதைகள் இன்னும் நீளமாக இருந்தால் நன்றாக இருக்கும்.... வாழ்த்துக்கள்.

சூரியன்
30-06-2007, 09:24 AM
நல்ல அருமையான் வரிகள் அமரன்

இளசு
03-07-2007, 08:46 PM
வெண்மேக பின்புலத்தில் மின்னல்கள் வாராது..
இயல்பான உதயத்தில் மொட்டுகள் கருகாது..

'இயற்கை'யைச் சிதைத்த வன்முறையே உட்கருத்து..
தற்குறிப்பேற்றிச் சொன்ன அமரனுக்கு பாராட்டுகள்!

அமரன்
04-07-2007, 09:08 AM
இளசு அண்ணா நான் சொல்ல வந்ததை புரிந்துகொண்டீர்கள்.
நீங்கள் சொல்வதையும் புரிந்துகொண்டேன். நன்றி

அமரன்
04-07-2007, 09:09 AM
நல்ல பொய்மை வளம்... அழகிய கற்பனை.... சிறந்த கவிதை. வாழ்த்துக்கள்... இந்த மாதிரி கவிதைகள் இன்னும் நீளமாக இருந்தால் நன்றாக இருக்கும்.... வாழ்த்துக்கள்.

முயற்சி செய்கின்றேன் ஆதவா. நன்றி.