PDA

View Full Version : தமிழ்!!.



ஓவியன்
26-06-2007, 09:51 AM
மாம் எனக்குத்
டமிள் சொல்லித்
தாறீங்களா?

கேட்டவள் கத்தினாள்
விபத்தொன்றில்
ஐயோ அம்மா,
காப்பாத்துங்கோ என்று!.

அமரன்
26-06-2007, 09:52 AM
கவிச்சமரில் ஆடிய வேகத்துடன் இங்கே வந்துவிட்டீரா..நல்ல முரணான கவிதை. ஆபத்தில் உதவுவதால் தமிழும் நண்பனே....காத்திரும் வருகின்றேன்.

ஓவியன்
26-06-2007, 10:00 AM
வாங்க, வாங்க - காத்திருக்கிறேன்.!

ஓவியன்
26-06-2007, 10:04 AM
தமிழை!
நான் காதலித்தபோது
உன்னை நான்
காதலிக்கவில்லை
உன்னை நான்
காதலிக்கும் போது
தமிழை என்னால்
காதலிக்க முடியாது
உனக்குத் தான்
தமிழ் தெரியாதே!.
ஆதலினால் என்னை
மன்னித்து விடு!,
நான் தமிழைத் தான்
தொடர்ந்து காதலிக்கிறேன்!.

அமரன்
26-06-2007, 10:16 AM
அவளைக் காதலித்தீர்
தமிழை மறந்தீர்
அவளை மறைத்தீர்
தமிழை காதலித்தீர்
கவி மழை பொழிகிறீர்
கூட வருகிறது...
இப்போதாவது...
இதயவாசல் திறந்துவிடும்

அன்புரசிகன்
26-06-2007, 10:24 AM
காதல் என்றுவந்தால் மொழியேது
மொழிக்கு காதல் ஏது?

ஓவியன்
26-06-2007, 10:28 AM
கன்னியுடன்
உயிர் வாழ நினைத்தேன்
அவள் தரம் பார்த்து
கரம் பற்ற
மறுத்தாள்

தமிழ் அன்னையுடன்
உயிர் வாழ முனைந்தேன்
அவள் கரம் தந்து
எனை ஏற்றி வைத்தாள்!.

அமரன்
26-06-2007, 10:29 AM
காதல் என்றுவந்தால் மொழியேது
மொழிக்கு காதல் ஏது?

தொண்டையில் கருவடைந்து
வாயில் உருவடைந்து
வெளியே வரும் சொல்
மொழிக்கு ஆதாரம்
கண்ணில் கருக்கட்டி
இதயத்தில் உருவெடுத்து
சுவாசத்தில் வாழும்காதல்
வாழ்கையின் ஆதாரம்
காதலே புது மொழி
நட்புக்கு இது தோழி

ஓவியன்
26-06-2007, 10:32 AM
காதல் என்றுவந்தால் மொழியேது
மொழிக்கு காதல் ஏது?

உண்மைதான், அதாவது யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும், ஆனால் நான் தமிழை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை.

அவ்வளவுதான் கரு!.

அமரன்
26-06-2007, 10:35 AM
[COLOR="DarkRed"]கன்னியுடன்
உயிர் வாழ நினைத்தேன்
அவள் தரம் பார்த்து
கரம் பற்ற
மறுத்தாள்
COLOR]

வாசல் திறந்தீர்
வந்ததும் பூட்டிவிட்டீர்
இதயவாசலுடன் வாயையும்...

நட்பிடம் மறைத்தீர்
பறந்து விட்டாளென
புலம்பித்தீர்க்கிறீர்..

இப்போதாவது
வாயை திறந்திடும்..
நட்புடன் நாமிருப்போம்..
கற்பினைக்காத்திடுவோம்
கன்னியை மீட்டிடுவோம்

அன்புரசிகன்
26-06-2007, 10:35 AM
விட்டுக்கொடுப்பில் காதல்
வாய் சொல்லும் காதல்
தவிர காதல் அல்ல.

அமரன்
26-06-2007, 10:38 AM
விட்டுக்கொடுப்பில் காதல்
வாய் சொல்லும் காதல்
தவிர காதல் அல்ல.

காதலிடம் மட்டுமல்ல
நட்பிடமும் சொல்லிவிடு
காதல் நிலைத்துவிடும்
கண்ணியம் காத்துவிடு

ஓவியன்
26-06-2007, 10:42 AM
வாசல் திறந்தீர்
வந்ததும் பூட்டிவிட்டீர்
இதயவாசலுடன் வாயையும்...

நட்பிடம் மறைத்தீர்
பறந்து விட்டாளென
புலம்பித்தீர்க்கிறீர்..

இப்போதாவது
வாயை திறந்திடும்..
நட்புடன் நாமிருப்போம்..
கற்பினைக்காத்திடுவோம்
கன்னியை மீட்டிடுவோம்

இதயங்களின்
பரிபாசையில் வாய்
மூடுவது ஒன்றும்
பெரும் பாதகமில்லை!.

என் மெளனத்திலேயே
அவள் புரிந்திருக்க வேண்டும்
உண்மையில் அவள்
என்னைக் காதலித்திருந்தால்.

அமரன்
26-06-2007, 10:45 AM
இதயங்களின்
பரிபாசையில் வாய்
மூடுவது ஒன்றும்
பெரும் பாதகமில்லை!.

என் மெளனத்திலேயே
அவள் புரிந்திருக்க வேண்டும்
உண்மையில் அவள்
என்னைக் காதலித்திருந்தால்.


உள்ளவாசல் திறந்து
சொல்மழை பொழிந்து
சொர்க்கவாசலடைவதே
காதலின் வெற்றி....

காதல் என்பது
பால் சார்ந்ததல்ல
ஒருவர் பால் ஒருவர்
நட்பு கொள்ளலே...

ஓவியன்
26-06-2007, 10:45 AM
காதலிடம் மட்டுமல்ல
நட்பிடமும் சொல்லிவிடு
காதல் நிலைத்துவிடும்
கண்ணியம் காத்துவிடு

நட்புக்கும்
காதலிற்குமிடை
ஒரு பொல்லாத
நூல்!
அறுப்பதும் பின்பு
தொடுப்பதும்
மிகக் கடினம்.

அமரன்
26-06-2007, 10:47 AM
நட்புக்கும்
காதலிற்குமிடை
ஒரு பொல்லாத
நூல்!
அறுப்பதும் பின்பு
தொடுப்பதும்
மிகக் கடினம்.

நூலில் தொங்குவது
கல்யாணக்காதல்
நூழிழையில் தொங்குவது
பருவக்காதல்
தாங்கி நிற்பதே
நட்புக்காதல்...

அன்புரசிகன்
26-06-2007, 10:47 AM
வாழ்க்கைக்கு கண்ணியம்
காதலில் அது அவசியம்.

ஓவியன்
26-06-2007, 10:51 AM
நூலில் தொங்குவது
கல்யாணக்காதல்
நூழிழையில் தொங்குவது
பருவக்காதல்
தாங்கி நிற்பதே
நட்புக்காதல்...

நூலறுந்தால்
நட்புக் காதல்
அது அதிஸ்டம்

நூலறுந்தால்
நட்பும் கெடும்
அது துரதிஸ்டம்.

எனக்கு
ஒரு போதும்
அதிஸ்டம் கண்
சிமிட்டுவதில்லை.

அமரன்
26-06-2007, 10:53 AM
எனக்கு
ஒரு போதும்
அதிஸ்டம் கண்
சிமிட்டுவதில்லை.

கண்களை மூடினாலும்
இதயத்தை திறந்துவிடு
உயிர் நட்பிடம்..
துர் அதிஸ்டம் தூரமாகிவிட
தூர அதிஸ்டம் கதவைத் தட்டும்
அவன் உதவியுடன்...

lolluvathiyar
26-06-2007, 11:43 AM
என்னவோ எனக்கு ஒன்னும் புரியல*
ஆனா மொழிய விட எனக்கு காதல் தான் பெரிசு

சோ நான் என் மொழி தெரிந்தவளை மட்டும் காலிப்பேன்.

ஓவியன்
26-06-2007, 11:46 AM
என்னவோ எனக்கு ஒன்னும் புரியல*
ஆனா மொழிய விட எனக்கு காதல் தான் பெரிசு

சோ நான் என் மொழி தெரிந்தவளை மட்டும் காலிப்பேன்.

நன்றி நண்பரே!

அது உங்கள் கருத்து, ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தைச் சொல்லவும் பின்பற்றவும் முடிகின்றமையால் பிரச்சினை ஒன்றும் இல்லை.

அக்னி
26-06-2007, 11:56 AM
அபாரமான வரிகளில் புகுந்து விளையாடும் அன்புரசிகன், அமரன், ஓவியன் மூவரது தமிழிலும் எனக்குக் காதல் வருகின்றது...
மனதாரப் பாராட்டுகின்றேன்.

அக்னி
26-06-2007, 11:56 AM
காதல் தந்த ரணங்களை
ஆற்றிக்கொள்ள
தமிழ் தந்தது களம்...
கவிதைகளைத் தொடுத்தேன்...
ரணகளமாகவில்லை...
கவிக்களமானது
காதல்...

அன்புரசிகன்
26-06-2007, 11:56 AM
காதலுக்கு மொழிதேவையில்லை.
ஆனால் வாழ்க்கைக்கு அவசியமே

அக்னி
26-06-2007, 11:57 AM
காதலில் வலிகள்
தமிழில் சுழிகள்
இரண்டுமே
புடம்போடுகின்றது...
நம்மை...

ஓவியன்
26-06-2007, 12:00 PM
அபாரமான வரிகளில் புகுந்து விளையாடும் அன்புரசிகன், அமரன், ஓவியன் மூவரது தமிழிலும் எனக்குக் காதல் வருகின்றது...
மனதாரப் பாராட்டுகின்றேன்.

நன்றிகள் அக்னி!
உம்மைப் போல்
கவிச்சித்தர்களால் தானே
எனக்கும் தமிழ்
மேல் காதல்
வந்தது!.

அன்புரசிகன்
26-06-2007, 12:00 PM
காதல் தந்த ரணங்களை
ஆற்றிக்கொள்ள
தமிழ் தந்தது களம்...
கவிதைகளைத் தொடுத்தேன்...
ரணகளமாகவில்லை...
கவிக்களமானது
காதல்...

ஏற்கிறேன் உங்களை
ரணகளம் ஆக்குங்கள். - ச்சீ
கவிக்களம் ஆக்குங்கள்
விளையாடுவோமா தமிழுடன்?

ஓவியன்
26-06-2007, 12:01 PM
காதலில் வலிகள்
தமிழில் சுழிகள்
இரண்டுமே
புடம்போடுகின்றது...
நம்மை...

காதலில் வலிகள்!
தமிழில் சுழிகள்!

அருமை அக்னி!

அன்புரசிகன்
26-06-2007, 12:02 PM
காதலில் வலிகள்
தமிழில் சுழிகள்
இரண்டுமே
புடம்போடுகின்றது...
நம்மை...

காதலில் வலிகள்
வாழ்க்கையின் பாடங்கள்
தமிழில் சுழிகள்
வாழ்க்கையின் அர்த்தங்கள்

ஓவியன்
26-06-2007, 12:04 PM
காதல் தந்த ரணங்களை
ஆற்றிக்கொள்ள
தமிழ் தந்தது களம்...
கவிதைகளைத் தொடுத்தேன்...
ரணகளமாகவில்லை...
கவிக்களமானது
காதல்...

ரணத்தில் உதிப்பது
வலிகள்!
அந்த வலிகள்
உதிர்ப்பது இந்த வரிகள்
தமிழ் வரிகள்!.

அக்னி
26-06-2007, 12:17 PM
முரண்பாடாய்..,

தமிழில் வடித்தேன் வரிகளை,
செதுக்கினேன் கவிதையை,
தமிழில் பற்றுக் கொண்டவள்
என் மீது பற்றுக் கொண்டாள்...

ஓவியன்
26-06-2007, 12:22 PM
முரண்பாடாய்..,
தமிழில் வடித்தேன் வரிகளை,
செதுக்கினேன் கவிதையை,
தமிழில் பற்றுக் கொண்டவள்
என் மீது பற்றுக் கொண்டாள்...

இலக்கண முரண்,
இலக்கியமாவது போல்
மொழியால் முரண்டாலும்
மனத்தால் இணைவது
காதலின் வரம்!.

அமரன்
26-06-2007, 01:38 PM
முரண்பாடாய்..,

தமிழில் வடித்தேன் வரிகளை,
செதுக்கினேன் கவிதையை,
தமிழில் பற்றுக் கொண்டவள்
என் மீது பற்றுக் கொண்டாள்...

முதலே முரணாக
முடிவு எப்படியோ
ரணங்களின் கருவே
முரண்களோ...!?

அன்புரசிகன்
26-06-2007, 01:40 PM
இயல்பிற்கு சுவையேது
முரணுக்கு மறுப்பேது

கண்ணா நான் சொல்லுறது புரியுதா?

அமரன்
26-06-2007, 02:07 PM
இயல்பிற்கு சுவையேது
முரணுக்கு மறுப்பேது

கண்ணா நான் சொல்லுறது புரியுதா?

புரிகிறமாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. வரவர எல்லோரும் பொடிவைத்து பேசுறாங்க. ஒன்றுமே புரியவில்லைப்பா....

ஓவியன்
26-06-2007, 05:41 PM
முதலே முரணாக
முடிவு எப்படியோ
ரணங்களின் கருவே
முரண்களோ...!?

முதல் முரணானாலும்
முடிவில் வேண்டாமே முரண்!
தமிழைக் காதலிப்போம்!
தமிழால் காதலிப்போம்!