PDA

View Full Version : பயணம்



இனியவள்
26-06-2007, 07:25 AM
பின்னோக்கி நகரும்
மரங்கள்
முன்னோக்கிச் செல்லும் என்
சாலைப் பயணத்தை
சமிக்ஞை செய்கின்றன...

கடந்ததையும்
கடக்கப் போவதையும்
நினைக்கின்ற பொழுது
நடந்து கொண்டிருப்பவை
தூரத்திலிருந்து நோக்கும்
ஒரு புள்ளியாய்...

மௌனங்கள் கண்டிராத
ஆர்ப்பாட்ட இரவுகள்
ஆழ் மனதில்
இப்போதும் நிழலாடுகின்றன
விலைபோகும் எனில்
அந்த கனவுகள்
விற்பனைக்கு

உழைக்க மறுப்பவனின்
உடலை
ஆறடி நிலம்கூட
அங்கீகரிப்பதில்லை
என்கிற உண்மை
இன்றும் கூட
உதாசீனப்டுத்தப்படுகிறது

நாடகங்களக்கிப்போன
நடைமுறை வாழ்க்கையில்
ஊடகங்கள் ஒருநாளும்
ஒழுக்கத்தை
வெளிக்கொணர்வதில்லை

ஏட்டுக் கல்வி மூலமும்
கேட்டறியவும் மட்டுமே
முடிகிறது
கூட்டுக் குடும்பங்களின்
மகத்துவத்தை

தனித்தோ
துணையுடனோ
அர்த்தமற்றதாய் இருந்தாலும்
அனிச்சையாய்
தொடரவே செய்கின்றன...
வாழ்க்கைப் பயணங்கள்

பயணங்கள் என்னவோ
பசுமையாகத்தான் இருக்கின்றன
எதையும் ஏற்றுக்கொள்கின்ற
பக்குவம் இருப்பதால்
பாதைகள்தான்
வெறிச்சோடிக்கிடக்கின்றன
பாலைவனங்களாய்...

lolluvathiyar
26-06-2007, 11:15 AM
ஒரு சில வார்த்தைகளில் பல அர்த்தம் தந்துள்ளீர்கள்
பாதைகள் என்றுமே வெரிச்சோடி கிடக்கும் நம் வாழ்விலே
சரியான உன்மை

அன்புரசிகன்
26-06-2007, 11:31 AM
வாழ்க்கையில் பயணங்கள் எத்தனை.
நம்மால் அத்தனையையும் பயணிக்கமுடிவதில்லை.
உண்மைகளை உகந்த இனியவளுக்கு வாழ்த்துக்கள்

இனியவள்
27-06-2007, 07:12 AM
வாழ்க்கையில் பயணங்கள் எத்தனை.
நம்மால் அத்தனையையும் பயணிக்கமுடிவதில்லை.
உண்மைகளை உகந்த இனியவளுக்கு வாழ்த்துக்கள்

நன்றி அன்புரசிகன்

அமரன்
27-06-2007, 03:27 PM
அழகு கவிதை இனியவள். இற*ந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து நிகழ்காலத்தை பறக்கின்ற கருத்துபற்றி நிச்சயம் கூறவேண்டும். இறந்தகாலத்தை பாடமாகவும் எதிர்காலத்தை இலக்காகவும் கொண்டு நிகழ்காலத்தை உறுதியானதாக்கவேண்டும்.
கூட்டுக்குடும்பம் பற்றிச்சொல்லியுள்ளீர்கள். நிச்சயம் கவலைப்படவேண்டிய விடயம். இப்போது உள்ள சில சிறார்களுக்கு உறவுகளின் உன்னதம் புரிவதில்லை. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை இல்லாததும் ஒரு காரணம்.


பயணங்கள் என்னவோ
பசுமையாகத்தான் இருக்கின்றன
எதையும் ஏற்றுக்கொள்கின்ற
பக்குவம் இருப்பதால்

பாதைகள்தான்
வெறிச்சோடிக்கிடக்கின்றன
பாலைவனங்களாய்...

இந்த வரிகளை இப்படி அமைத்தீர்களானால் பொருள் விளக்கம் அதிகமாக இருக்கும் என நினைக்கின்றேன்.