PDA

View Full Version : அவள் ஒரு தொடர்கதை



masan
26-06-2007, 07:22 AM
அவள் ஒரு தொடர்கதை−ஆமாம்
யாருமே துணிந்திராத பொளுதில்
யாருமே எதிர்பார்க்காத வேளையில்
யாரையும் எதிர்பார்க்காமல்− தீயெனப்புறப்பட்ட*
அவள் ஒரு தொடர்கதை.


அண்று யாவர்க்கும் விடியும்பொளுது சாதாரனமாக..
அவள் பார்வையிலோ அடுத்தநாள் கேள்விக்குறியாக..
அவர்கள் எப்போதும் வரலாம் ஆயுதங்கள் சகிதமாக..
ஆகவே தயாராகிறாள் கைக்குழந்தையையும் கவனியாமல்−ஆமாம்
அவள் ஒரு தொடர்கதை.

காத்திருக்கிறாள்.....
காலம் கனியும் என்பதற்காகவா− இல்லை இல்லவேயில்லை
தன் பிள்ளையாவது கனிந்தகாலத்தில் வாளவேண்டும் என்பதற்காக*
தன் உடல்சிதறுவதுபற்றி அவள் சிறிதும் சினக்கவில்லை−ஆமாம்
அவள் ஒரு தொடர்கதை.

தூரத்தில் ஏதோ சத்தம்.என்ன அது!− இராணுவ வாகனமா
ஆமாம் இராணுவவாகனமேதான். எத்தனைபேர் இருப்பார்கள்
சிந்தனை அவ்வாகனத்தைப்பற்றியே தவிர தன்னைப்பற்றி அல்ல*
இன்னும் சிறிது தூரம்தான் இராணுவவாகனம் இவளை அண்மித்துவிட*
3....2....1...0..பிரளயம்தான் ஏற்பட்டதுபோல...ஒரு சத்தம்

ஆமாம் அது ஒரு பிரளயம்தான் சிங்கள இராணுவத்திற்கு!
64 கொமான்டோ படையினர் பலி எண்றால் சுமமாவா?
அடுத்த கரும்புலிகள் தினத்தில் இவள்படம் வைக்கப்படுகிறது
மலர்மாலை அணிவிக்கப்படுகிறது,
லெப்.கேணல் தரத்துடன்..இவள்பெயர் எழுதப்படுகிறது −ஆனால்
இவை எதுவும் தெரியாமல்
உடலின் எந்தப்பகுதியும் கண்டெடுக்கப்படாத கரும்புலியாய் அவள்!
ஆமாம்
அவள் ஒரு தொடர்கதை......

அமரன்
26-06-2007, 09:15 AM
அடுப்படியே கதியென கிடந்த பெண்னினம்
அடிக்கு அடியென புயலாகப் புறப்பட்ட
காவியத்தைத்தை கவிதையாக வடித்த
மாசனுக்கு எனது பாராட்டுகள்.
சில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம்.

ஓவியன்
26-06-2007, 09:19 AM
இது ஒரு தொடர் கதையல்ல!

தொடரும் நிஜம் மாசன்!

தொடரட்டும் உங்கள் பணி!

வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உங்கள் கவிக்கு.

lolluvathiyar
26-06-2007, 11:10 AM
அருமை மாசன், வரிகளில் கவர்ந்து, தொடர்கதை என்று தலைப்பு வைத்து அசத்தி விட்டீர்கள். கருத்து எனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதை கவிதையாக வடித்த உனர்ச்சிக்கு 25 இபண்ம் தந்து வாழ்த்துகிறேன்

சூரியன்
26-06-2007, 11:14 AM
அருமையான் வரிகள் மாசன் தொடரட்டும் உங்கள் தொடர்பணி

ஆதவா
28-06-2007, 08:19 AM
நல்ல் கவிதை மாசன்... இம்மாதிரி கவிதைகள் எழுதும்போது கூடுதல் கவனத்தொடு எழுதுங்கள்.... உங்கள் உணர்வு எம்மை நெகிழவைக்கிறது... வாழ்த்துக்கள்...