PDA

View Full Version : ஆயுள் ரேகை



இனியவள்
26-06-2007, 07:22 AM
நீ என்னைப்
பிரிந்து போகையில்
உறைந்து போனது
என் இரத்தம்
ஆனாலும் - உறையாத
உன் நினைவுகளால்
இன்னும்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என் இதயம்

அமரன்
26-06-2007, 09:09 AM
உள்ளத்தில் எழுதுவது காதல்
உடலால் பிரிந்தாலும்
உள்ளத்தில் நிலைத்து
உயிர்வாழ்கிறது
காதல் மட்டுமல்ல
நானும்கூடவே...
என்று சொல்லும்
இனியவளின் இனிய கவிதைக்கு
பாராட்டுகள்.

ஓவியன்
26-06-2007, 09:16 AM
நீ என்னைப்
பிரிந்து போகையில்
உறைந்து போனது
என் இரத்தம்
ஆனாலும் - உறையாத
உன் நினைவுகளால்
இன்னும்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என் இதயம்

காதலில் உறைந்தவனுக்கு
காதல் நினைவுகள்
தானே!
உடலின் இரத்தம்
அது வாழவைக்கும்
அவனை நித்தம்!.

அருமையான கவி படைத்த இனியவளுக்கு பாராட்டுக்கள்.

அன்புரசிகன்
26-06-2007, 09:25 AM
ஊடல் கூடல்
இல்லாவிட்டால்
ஏது காதல்
ல்கள் தான்
காதல்
வாழ்த்துக்கள் இனியவளுக்கு

lolluvathiyar
26-06-2007, 11:12 AM
இனியவளே காதல் கவிதைகளில் அசத்துகிறீர்
ஈந்த* அனுபவமா, அல்லது தந்த அனுபவமா

இனியவள்
27-06-2007, 07:16 AM
அனைவருக்கும் நன்றிகள்

சாராகுமார்
14-09-2007, 03:02 PM
நீ என்னைப்
பிரிந்து போகையில்
உறைந்து போனது
என் இரத்தம்
ஆனாலும் - உறையாத
உன் நினைவுகளால்
இன்னும்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என் இதயம்

நீ என்னைப்
பிரிந்து போகையில்
நின்று போனது
என் இதயம்...
உன் நினைவு
தந்த சூட்டால்
இதயத்துக்குள்
வேலை செய்கிறது
என் இரத்தம்.

இனியவள் இனிமையான கவிதை.வாழ்த்துக்கள்.

aren
14-09-2007, 04:44 PM
அழகான கவிதை இனியவள். அதற்கு வந்த பின்னூட்டங்களும் அருமை. சாராகுமாரின் கண்ணாடிக்கவிதையும் அழகாக உள்ளது. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சாராகுமார்
14-09-2007, 05:17 PM
அழகான கவிதை இனியவள். அதற்கு வந்த பின்னூட்டங்களும் அருமை. சாராகுமாரின் கண்ணாடிக்கவிதையும் அழகாக உள்ளது. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென்.

அக்னி
15-09-2007, 12:44 PM
காதல்...
இரத்தத்தில் கலந்ததால்,
இதயத்தை அடைகின்றதோ...?
இதயத்தில் அடைப்பதால்,
இரத்தத்தில் கலக்கின்றதோ...?

பாராட்டுக்கள் இனியவள்...
பின்னூட்டக் கவிகள் அருமை. பாராட்டுக்கள்...