PDA

View Full Version : காதல் அகம்.....!



வசீகரன்
26-06-2007, 05:22 AM
நிலவு அழகு தான்
வானில் இருக்கும் வரை....!

மலர் அழகு தான்
செடியில் இருக்கும் வரை...!

கவிதை அழகு தான்
பொய் இருக்கும் வரை....!

கடல் அழகு தான்
அலைகள் இருக்கும் வரை...!

நானும் அழகு தான்
என்னில் நீ இருக்கும் வரை...!

அன்புரசிகன்
26-06-2007, 05:28 AM
உங்கள் கவியளகு
வார்த்தையில் வசீகரம் இருப்பதால்
வாழ்த்துக்கள் வசீகரனுக்கு

அமரன்
26-06-2007, 08:44 AM
அழகான கவிதை. வழக்கமான காதல் என்றாலும் சிந்தனை சிறப்பு. உதாரணங்கள் சிறப்பு. புரிதல் இலகுவான வரிகள். வாசீகரிக்கின்றன வசீகரன் உங்கள் கவிதையும் அன்புரசிகனின் பின்னூட்டமும். பாராட்டுகள் பல.

இனியவள்
26-06-2007, 08:50 AM
வசிகரன் உங்கள் பெயரைப் போலவே உங்கள் கவிதையும் வசிகரிக்கின்றன பாரட்டுக்கள் :)