PDA

View Full Version : இளசுவின் புண்ணாகவராளியும்.. கருவேல முட்கī



rambal
21-05-2003, 03:57 PM
இளசுவின் புண்ணகவராளியும்.. கருவேல முட்களும்...


இளசு அவர்கள் எழுதியது கவிதை அல்ல..
அத்தனையும் சிறுகதைகள்..
எளிமையாய் நெஞ்சில் குத்தி..
ஆழமாய் இறங்கி.. நிரந்தரமாய் தங்கிவிடும் ஆணிகள்..
கடைசி வரியில் ஒரு பூகம்பம் இருக்கும்...
இளசு.. தனி நிறம்.. தனி வடிவம்...
இளசு.. தனி கற்பனா சக்தி.. எதார்த்த உண்மைகளை வாழைப்பழத்தில் ஊசியாய்...
இதுதான் இளசா? என அறுதியிட்டுக் கூறமுடியா..
அதுதான் இளசு...

முதலில் நான் ரசித்த வரிகள்...

இன்னும் கொஞ்சம் உற்றுப்பார்க்க
என்ன இது கொடுமை!
தென்றல் வீசும் பூங்காவில்
ஒன்றாக உலாவிவிட்டு
புயல் அடித்த பொழுதில் எல்லாம்
அயலாய் என்னை விட்டதென்ன?

பாதச் சுவடுகள்...
<span style='color:blue'>
"எப்படி சாதித்தாய் டெர்மாட்?"
" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
காலையில் கண்ணாடிக்கு சொல்வேன்:
Think What You Can Do-
Not What You Can't Do "

முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை
</span>
முடிவதை மட்டும் நினை..

பூம்புகார் கரையில்
கிளிஞ்சல்கள் நீ சேர்க்க
ஆயிரம் ஆண்டாவது
இமைக்காமல் ரசிக்க வேண்டும்
ஒரு அலைக்கும் மறு அலைக்கும்
ஒரு வருடம்
இடைவெளி என்றால்

வெட்கம் விலக்கி விடு..

முதலில் எனக்குப் பிடித்த காதல் கவிதை..

உன்னில் என்னைக் கண்டேன்.. ஆகையால் தன்னையேக் காதலிக்கும் ஒரு வித்யாசமான காதலனின் காதல்..
அவள் போன பின்னும் என் மேல் கொண்ட காதலை நேசித்தேன்.. இறுதியாக
அவள் இல்லை எனும் பொழுது அந்தக் காதலை நேசிக்கிறார் கவிஞர்.. அந்த கவிதை...

யாரைக் காதலித்தேன்..

காதலி போனபின்னும்
காதலை நேசித்தேன்... என் மேல் கொண்ட
காதலை நேசித்தேன்...

மீண்டும் எனைப் புடம்போட
உலை தரும்
காதலை நேசித்தேன்...
புண்ணாக்கி பொன்னாக்கும்
அந்தப் பொல்லாக்
காதலை நேசித்தேன்....



அளவிற்கு அதிகமாய் வெட்கப்படுபவளைக் கண்டு புலம்பும் வித்யாசமான காதலன்..
அதுவும் எப்படி?
<span style='color:blue'>
பிரளயம் பிரிக்கும் வரை - உன்
இருதயம் என் பள்ளியறை

அத்தனை காலம் வேண்டும்
உன்னை ஆராதிக்க - என்
அன்பை நிரூபிக்க

'ஒரு நாள் குறையேண்டா.'
இறைவனே கேட்டாலும்
மாட்டேன் சம்மதிக்க

"என்னவளைப் பழகிப்பார்
இன்னும் நாள் கொடுப்பாய்"
வாதிடுவேன் சாதிக்க
..............
.............
............
..............

காலம் உள்ளவரை
காலம் நமக்கிருந்தால்
உன்
வெட்கம் குற்றமில்லை
</span>
வெட்கம் விலக்கிவிடு..

என்றபடியாக முடிகிறது இந்தக் க(வி)தை..
இப்படி வெட்கப்படுபவளுக்காக கவிஞர் வரிந்து கட்டி எழுதியிருப்பது சொற்பம்தான்..
இல்லையெனில் காலம் உள்ளவரை காலம் நமக்கிருந்தால் எழுதியிருப்பார் இதன் தொடர்ச்சியை..

இவரின் புறநானூற்றுக் கவிதைகள் அலாதியானது..
பூர்வாங்கமும் கெடாமல்.. எளிமையும் சிதையாமல்..
பாமரர்க்கும் புரியும் வகையில் அட்சரசுத்தமாய்.. (இதை இன்னும் தொடரலாம்)
<span style='color:blue'>
கருப்புக் கொடி
மூலம்: புலவர் கல்லாடனார்

கருப்புக்கொடி கண்டா போர் நிறுத்தினாய்
ஓ...கணவனை இழந்தவளின்
கலைந்த கூந்தல்

மகன் எங்கே
மூலம் : புலவர் காவற்பெண்டு


"புலி போர்க்களத்தில் - அது
குடிருந்த மலைக்குகை மட்டுமே வீட்டில்".
உண்மையான புரட்சித்தாய்.


வறுமையில் செம்மை

மூலம் : புலவர் மதுரைக்குமரனார்

வரகுச்சோற்றோடு வயிற்றை நிரப்பும்
கீரை இன்று குறைகிறதே.....
"மான் மேய்ந்து ஓய்ந்த மீதி"

வறுமை சொல்ல நாணம்

மூலம்: புலவர் ஆவுர் மூங்கில்கிழார்

வறுமையா யார் சொன்னது
செம்பட்டு மறைக்குமே என் மனைவி மேனி
நாணமே ஆடை

படைத்தவன் கணக்கு

மூலம்: புலவர் நன்கணியார்

ஒரு வீட்டில் சாவு மேளம்
மறு வீட்டில் மண மேளம்
இடம் மாறும் கூந்தல் பூ
</span>
இப்படியாக சங்கத்தமிழை மன்றத்தில் வளர்க்க இவர் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களுக்காகவே சிலை வைக்கலாம்..

தப்பாய் இருக்கும் தன் முகம் பற்றி கவலை கவிஞருக்கு.. அதிலே அழகாய் ஓடும் வார்த்தை ஆறு..

முகம்


எப்படி வரைவது என் முகத்தை....

கண்ணாடி பார்த்தபடி....?
இடவலம் மாற்றம்...

நண்பர்கள் உணர்ந்தபடி....?
ஆனை - குருடர் கதை போல்....

அம்மா நினைத்தபடி.......?
இன்னுமா கூட்டுப்புழு.....

அவளின் கனவுப்படி.....?
சிறகின் கீழ் பாறை......

எப்படி வரைந்தாலும்
தப்பு மட்டும்
தப்பாது........

தன்னைப் பற்றிய சுயம் தேடுகிறார் கவிஞர்..

ஆதியில் ஆரம்பித்த வேட்டை..

ஆதியில் காட்டில் வேட்டை
அடுத்து கழனியில் உழவு
இன்று சூப்பர்மார்க்கெட்டில்
தள்ளுவண்டியில்.....
...............
...............
...........
வாரிசு வளர்ந்தபின்னும்
சாகாமல் இருப்பவை
மனிதனும்
திமிங்கிலமும் தான்
.............
.............
.............
...........
காட்டின் பேர் : இணையம்
களத்தின் பேர் : மன்றம்
0
எதிர்பார்ப்பு இல்லாத நண்பர் மன்றம்
இவனும் நம்மில் ஒருவன் என்னும் உள்ளம்
0
உணவு தேடி வந்தவன் உண்டபின்
உணவாகிப் போனான்
பசியோடு வந்தவன் பரிமாறுவதிலேயே
பசியாறிப் போனான்
0
களம் மாறுமா
காலம் கூறும்.


மனித வாழ்வில் தந்தை மகன் எனும் பதங்களின் கூட்டுச்சிக்கலை.. புரிதலை.. புரியாமல் போய் விட்ட பல தந்தை மகன்களுக்காக இந்தக் கவிதை.. ஓடமும் வண்டியில் ஏறும்..வண்டியும் ஓடத்தில் ஓர் நாள் ஏறும்...

ஆரமும் வட்டமும்

...........
..........
இருபத்தாறு வயதில்

அப்பா , அவள் சொல்றதுதான் சரி
அந்தக்கால ஆசாமி நீங்க
வாயை மூடிட்டு இருங்க...
.......
...........
.........
நாற்பத்தாறு வயதில்...

பெரியவன் போக்கே சரியில்ல
சின்னவன் என் பேச்சை கேக்குறதே இல்ல
பொண்ணுக்கு வந்த வரன் குழப்பமா இருக்கு
அப்பா மட்டும் இப்ப இருந்தா...
அவருக்கு தெரியாத விஷயமே இல்ல,
தெரியுமா உங்களுக்கு!

இப்படியாக ஆரம்பித்த இடத்தில் முடிக்கிறார் கவிஞர்..
அப்பாக்களுக்காக கவிஞர் எழுதிய இந்தக் கவிதை ஒரு வகையான மறைமுக துதிதான்..
மற்றொரு கவிதையில் நேரிடையாக அப்பா புகழ் பாடுகிறார்..

அப்பாயணம்..
<span style='color:blue'>
நீ எனக்கு வாங்கித் தந்த
இனிப்புகளை விட
புத்தகங்களே அதிகம்

"உன் குழந்தையை அடிக்கும்போது
ஒரு புகைப்படம் எடுக்கச்சொல்லிப் பார்"
ரஸ்ஸல் படித்து நீ எழுதியது பழைய டைரியில்
அப்படி ஒரு படமே இல்லை உன் வாழ்க்கை டைரியில்
.............
..............
..............
.............
என்னைப் பெற்றது பெருமை என்பாய்
இல்லை அப்பா
உனக்குப் பிறந்தது
நான் வாங்கி வந்த வரம்

முடிக்க முடியவில்லை........
</span>

இப்படியாக மகன் தந்தைக்கு ஆற்றும்.. என்ன எழுதி விளக்குவேன்.. இது மாதிரி சில சமயங்களில் என்னை
சில துளிகள் சிந்தவைப்பதுண்டு..

அடுத்து வேடிக்கையாய் முகத்தில் உண்மையை அடிக்கும் கவிதை..

நடராசன் நடக்கிறான்..

இரண்டு வயதில்:
-----------------------

நடராசன் நடக்கிறான்
கால் சட்டை பனியனுடன்
தாத்தா வாங்கித் தந்த
நடை வண்டி பிடித்தபடி
நடராசன் நடக்கிறான்

............
...............
..............
ஐம்பது வயதில்:
--------------------
ஏறிவிட்ட சர்க்கரையாம், பி.பியாம்.
எக்கச்சக்க கொலஸ்ட் -ராலாம்
பத்தியமாம் மாத்திரையாம்
பட்டினி கூட வைத்தியமாம்

கதைவைத் திறந்துவிட்டு காரோட்டி காத்திருக்க
கடற்கரைக் காலைக் காற்றில்
கால் சட்டை பனியனுடன்
நடராசன் நடக்கிறான்.

இது போன்ற பல கவிதைகள் இவரிடம் உண்டு..

அண்ணனின் வ(வி)சனக்கவிதை, சுட்டு விரல், துப்பார்க்கு தூவும் மழை..

ஏன் தோழி? எனும் ஒரு பெண்ணின் அவலக் கதையை நிறைய எதார்த்த சம்பவங்களோடும் கொஞ்சம் அதிர்ச்சி முடிவோடும் பதித்திருக்கிறார்..
பாதச்சுவடுகள், முடிவதை மட்டும் நினை.. தொடரும் இவரது பட்டியல்...

இளசு அவர்கள் இசைத்தது புண்களைத்தாங்கி புண்ணாகவராளி பாடும் புல்லாங்குழலின் சங்கீதம்..
அவர்கள் எழுதியது கருவேல முட்களாய் குத்திக் கிழிக்கும் கூர்மையான கவிதைகள்..

Nanban
21-05-2003, 04:11 PM
கவிதைப் பக்கங்களை அலச, நண்பனை அழைக்கிறேன் என்று இளசு அழைத்திருந்தார்.... சரி, இனியொரு பத்து நாளைக்கு எல்லாவற்றையும் மறந்து விட்டு, திரும்ப ஒருமுறை படிக்க ஆரம்பிக்க வேண்டியது தான் என்று நினைத்திருந்தேன். எனக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம் என்றெண்ணியே ராம்பால் அவர்கள் மிக கம்பீ¢ரமாக அலசலை ஆரம்பித்து விட்டார்.

நன்றி - நிம்மதியுடன்.

ஒவ்வொரு அலசலையும் print எடுத்து வைத்துக் கொள்வது நலம்.....

போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.....

rambal
21-05-2003, 04:34 PM
நீங்கள் எழுதுங்கள் நண்பன் அவர்களே...
எனக்கு உங்கள் கவிதைகளை தினம் தினம் படிக்க வேண்டும்..
ரசிக்க வேண்டும்..
ஆகையால்,
அந்தப் பணியை நான் எடுத்துச் செய்கிறேன்..
ஏதும் வருத்தமில்லையே..

prabha_friend
21-05-2003, 04:39 PM
இளசுவை பற்றிய ஒரு சிறு குறிப்புதான் இது . அவரது பெருமையை சொல்லி முடிக்க முடியாது என்பதே உண்மை .

Nanban
21-05-2003, 06:55 PM
நீங்கள் எழுதுங்கள் நண்பன் அவர்களே...
எனக்கு உங்கள் கவிதைகளை தினம் தினம் படிக்க வேண்டும்..
ரசிக்க வேண்டும்..
ஆகையால்,
அந்தப் பணியை நான் எடுத்துச் செய்கிறேன்..
ஏதும் வருத்தமில்லையே..

Not at all.
நீங்கள் உபயோகப்படுத்தும் சில வார்த்தைகளை இன்னும் கொஞ்சம் விளக்கம்லாம் என்றிருக்கிறேன். உ-ம். எக்ஸ்டென்ஷியலிஸ்ம், நேச்சுரலிஸ்ம் இதுபோல................

எவ்வளவு முடியும் என்று தெரியாது..... இதியெல்லாம் கற்றுக் கொண்டு கவிதை எழுத வரவில்லை...........

ஆனாலும் ஒரு சிறிய அறிமுகம் கொடுக்க முடியும் என்றே நினைக்கிறேன்...........

poo
22-05-2003, 03:38 PM
என் அன்பு அண்ணனைப்பற்றி பிரபா நண்பர் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை...

ராம்... உன் முயற்சிக்கு பாராட்டுக்கள்...

gankrish
23-05-2003, 06:53 AM
ராம்.. இளசுவை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். மிக பொருத்தம் நீங்கள் இளசுவை பற்றி எழுதியிருப்பது.

karikaalan
23-05-2003, 05:09 PM
அருமையான கட்டுரை; ஓரிடத்தில் அனைத்தையும் படிக்கமுடிந்தது மகிழ்ச்சியே. ராம்பால்ஜி சொன்னதற்கு மேல் அடியேன் என்ன சொல்ல இருக்கிறது? வாழ்த்துக்கள், பாடியவருக்கும், பாடப்பட்டவருக்கும்!!

===கரிகாலன்

முத்து
23-05-2003, 08:26 PM
அத்தனையையும் கோர்த்து ரத்ன மாலையாக வழங்கிய ராம் நண்பருக்கு நன்றி !

இளசு அண்ணாவுக்கு ??...வழக்கம்போல ... வணக்கங்களுடன்.. பாராட்டுக்கள்...

நிலா
23-05-2003, 10:16 PM
இளசு அவர்களுக்கு ஓஓஓஓஓஓஓ போடுங்க1
ராம் அவர்களுக்கு ஜே!
வாழ்த்துக்கள் நண்பரே!

rambal
07-04-2004, 04:18 PM
கவிதைகள் பக்கம் கருணை வைத்து
எழுதிக் கொண்டிருக்கும் இளசு அண்னன் அவர்களை
மீண்டும் திறனாய ஆசை..
நேரம் க் இளசு அண்ணனின் ஒப்புதல்..
இரண்டும் தேவை..
அவர் உம் என்றால் மீண்டும் ஒரு திறனாய்வு எழுதத் தயார்..

அண்ணனின் கட்டளைக்காக காத்திருக்கும்..


"நேரம் க் இளசு அண்ணனின் ஒப்புதல்.. " தெளிவாக இல்லை.
திருத்தம் அல்லது விளக்கம் தேவை. கொடுக்கப்படும் பொழுது
இந்தக் குறிப்பு நீக்கப்படும். -இக்பால்.

kavitha
15-04-2004, 05:52 AM
நம் இளசு அண்ணா மாட்டேன் என்றா சொல்லி விட போகிறார்!
பெயரைப்போலவே இளகிய மனசுக்காரர்!

ராம்பால், ஒரு கவிஞராக மட்டுமல்ல, நல்ல ரசிகரும் நீங்கள் என்பதினை இதுபோன்ற பதிவுகளில் முத்திரை பதித்திருக்கிறார்!

சில படிக்காமல் விட்டுப்போன இளசு அண்ணாவின் முழு கவிதைகளையும் தேடிக்கொண்டிருக்கிறேன்.....

kavitha
15-04-2004, 05:52 AM
நம் இளசு அண்ணா மாட்டேன் என்றா சொல்லி விட போகிறார்!
பெயரைப்போலவே இளகிய மனசுக்காரர்!

ராம்பால், ஒரு கவிஞராக மட்டுமல்ல, நல்ல ரசிகரும் என்பதினை இதுபோன்ற பதிவுகளில் முத்திரை பதித்திருக்கிறார்!

சில படிக்காமல் விட்டுப்போன இளசு அண்ணாவின் முழு கவிதைகளையும் தேடிக்கொண்டிருக்கிறேன்.....

இளசு
15-04-2004, 11:57 PM
முதலில் வெகுதாமதமாய் என் நன்றியைப் பதிவு செய்கிறேன்...


தகுதி மீறிய அங்கீகரிப்புகள் (இப்பதிவு, கவிதையில் ஒரு ஸ்டிக்கி) வரும்போது
நன்றி சொல்வதைக்கூட செய்ய மனம் கூசுகிறது....
இப்புகழ்ச்சிகளை ஒப்புக்கொண்டதாய்விடுமென்று.
(இதற்கு பதிலாய் இன்னும் புகழ்ச்சி எதிர்பார்த்து சொல்வதல்ல இது..)

ராமுக்கும் , கவிதாவுக்கும்...

எண்ணம் மனதில், டைரியில் இருந்தால்
என் அந்தரங்கத்துக்கு...

இணையத்தில் இருந்தால்...

எல்லாரும் படித்து,
அது காட்டும் சுவையில் லயித்து அல்லது சுருதி பிசகி
ஒட்டியும் , வெட்டியும்..கருத்து தெரிவிக்கத்தான்..


"படிப்பதும் படிக்காததும்
விமர்சிப்பதும் விமர்சிக்காததும்
உங்கள் இஷ்டம்..
என் இஷ்டத்துக்கு எழுதுவேன்"

என்பதல்ல என் எண்ணவோட்டம்.
எல்லாரும் படிக்கவேண்டும், கருத்துசொல்லவேண்டும் என்ற
உந்து இல்லை என்றால்......
அதை ஏன் எழுதி பொதுப்பார்வைக்கு வைக்கப்போகிறேன்?

எனவே.....
நான் எழுதி பதிப்பது
பலர் படிக்கவே

எல்லாரும் படியுங்கள்.
மனதில் தோன்றுவதை சொல்லுங்கள்.

புகழ்ச்சி - ஓரளவில் இருந்தால் ஊக்கம்.
அளவு மீறினால் - அறிவு மயக்கம்.

ஆனால் ஆக்கபூர்வ (critical) விமர்சனங்கள்
கசப்பாய் இருந்தாலும், பிணிநீக்கிகள்..

http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=2063


நான் ஆதியில் கவிஞனல்ல..
பாதியிலும் கவிஞனல்ல

பலர் முறையாய் கவி படைக்க
மயில் கண்ட அந்த பறவையாய்
இல்லாத் தோகை விரித்தாடும்
தமிழ்த்தாகன் மட்டுமே...

அன்பால் வழுத்திப் பேசும்போது
நெகிழ்ந்ததுண்டு
ஆனால் எந்நாளும்
தன்னிலை மறந்ததில்லை.

நான் இங்கே கவிதை என்று எழுதிய எல்லாமே
இணைய வாய்ப்பளித்த தலைவருக்கும்
எழுத ஊக்கம் தந்த நம் மன்றத்தினருக்குமே சமர்ப்பணம்...


கவிதை போல் எழுதியதை
கவிதைதான் என நம்பவைப்பது
மன்ற நண்பர்களின் விமர்சனம்..

சேரன்கயல்
16-04-2004, 06:27 AM
சற்றேறக்குறைய 11 மாதங்களுக்கு முன்பு இனிய இளசுவை வெகு அழகாய் அவரது கவிதைகளை வைத்து இந்த ஆய்வினை செய்துள்ளார் நண்பர் ராம்...இன்றுதான் படிக்க முடிந்திருக்கிறது என்னால்...
இளசுவின் எல்லா எழுத்துக்களிலுமே ஏதாவது ஒன்றில் படிக்கிற மனதை ஒட்டிக்கொள்ளச் செய்யும் அம்சம் இருந்துவந்துள்ளது என் சொந்த அனுபவம்...திறமைகளுக்கு அப்பாற்பட்டு மனிதநேய பாங்கிலும் இளசுவின் பங்களிப்பும் வியக்கத் தக்கது...அடக்காம ஒதுங்கி நின்று களம் தந்த மன்றத்திற்கே எல்லாம் சொந்தம் என்பது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது...
கவிஞனை இங்கே ரசிகனாய் இருந்து பாராட்டிய கவிஞன் ராம்...பாராட்டுக்குரியவர்...