PDA

View Full Version : ஆசைகள்



theepa
26-06-2007, 01:30 AM
ஆசைகள்

உலகை சுற்றிவர ஆசை ஆனல் அது முடியாது...
மயிலப் போல் தோகைவிரிக்க ஆசை
அதுவிம் முடியவே முடியாது....
காற்றை தொட்டு விளையாட ஆசை அது
நடக்கபோகிற காரியம்மல்ல...
மின்னலைப் பிடித்து நிப்பாட்டிவிட ஆசை
சந்தேகம் வேண்டாம் அதுவிம் மிடியாது....
காதலிக்க ஆசை அதுவும் என்னால் முடியாது....
அப்படி என்னல் முடிந்தாலும் ஒரு நல்ல
காதலன் கிடைக்க மாட்டான்....
ஒரு வேலை இது அனைத்தும் என் வாழ்க்கையில்
நடந்தால் இந்த ஜென்மம் ஒன்ரே போதும் ....!!!!!!


அன்புடன்,
நட்புக்கு சொந்தக்காறி
லதுஜா

அக்னி
26-06-2007, 01:35 AM
உங்களால் காதலிக்க முடிந்தாலும்
நல்ல காதலன் கிடைக்க மாட்டான் என்ற ஏக்கம்
கவிதையில் தொனிக்க, ஆசைகள் நிரம்பிய கவிதை அழகு...
ஆனால்,
நல்ல காதலன் கிடைப்பதைவிட,
உண்மையான வாழ்க்கைத்துணை
கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுங்கள்.
இதனில் காதலனும் அடங்குகின்றான்.
ஆனால்,
உங்களால் முடியும் எனும்போது,
யாருமே உங்களால் நல்லவராக்கப்படுவர் என்ற நம்பிக்கை
எனக்குத் தெரிகிறது..

வாழ்த்துக்கள்...

ஷீ-நிசி
26-06-2007, 03:42 AM
நல்ல காதலன் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அக்னி சொன்னதுபோல நல்ல கணவன் கிடைக்க வாழ்த்துகிறேன்.. இன்னும் கவிதையில் முன்னேற்றம் வேண்டும் சகோதரி! முயற்சியுங்கள்!

வசீகரன்
26-06-2007, 04:59 AM
ஆசைகல்

உலகை சுற்றிவர ஆசை ஆனல் அது முடியாது...
மயிலப் போல் தோகைவிரிக்க ஆசை
அதுவிம் முடியவே முடியாது....
காற்றை தொட்டு விளையாட ஆசை அது
நடக்கபோகிற காரியம்மல்ல...
மின்னலைப் பிடித்து நிப்பாட்டிவிட ஆசை
சந்தேகம் வேண்டாம் அதுவிம் மிடியாது....
காதலிக்க ஆசை அதுவும் என்னால் முடியாது....
அப்படி என்னல் முடிந்தாலும் ஒரு நல்ல
காதலன் கிடைக்க மாட்டான்....
ஒரு வேலை இது அனைத்தும் என் வாழ்க்கையில்
நடந்தால் இந்த ஜென்மம் ஒன்ரே போதும் ....!!!!!!


அன்புடன்,
நட்புக்கு சொந்தக்காறி
லதுஜா
கவிதை அருமை நண்பரே,,,, எதற்க்கு இத்தனை சோகம்,,,,
................வசிகரன்......

அன்புரசிகன்
26-06-2007, 05:06 AM
நன்றாகவே உள்ளது. உங்கள் எழுத்துப்பிழைகளை சற்றே கவனியுங்கள். அது உங்கள் பதிவின் தரத்தைக்குறைத்துவிடும்.

மற்றும் தலைப்பை தமிழிற்கு மாற்றிவிடுங்களேன்.

எழுத்துரு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5410) செல்லுங்கள்.

அமரன்
26-06-2007, 08:52 AM
கவிதை அழகு. முடியாத பல விடயங்கள் கவிதையில் முடியும்.

ஜெயிக்க முடியாத காதல்
அடைய முடியாத வெற்றி
காணமுடியாத காட்சி
செய்ய முடியாத உலகம்
இன்னும் பல.........

லதுஜாவின் அழகு கவிதை
அக்னிப்பார்வையில் பிரகாசமாகிறது

வாழ்த்துகள் இருவருக்கும்.

இனியவள்
26-06-2007, 08:55 AM
உங்கள் கவி அருமை வாழ்த்துக்கள் தோழியே ! இன்னும் பல ஆக்கங்கள் தாருங்கள் :)

theepa
02-07-2007, 02:16 PM
நிச்சயமாக என்னால் முடிந்த வரை எலுத்து பிலைகல் இல்லாமல் உங்கள் கண்கலுக்கு அழகாக கவிதைகல் தருவேன் உங்கள் பாறாட்டுக்கு எனது நன்றிகல்