PDA

View Full Version : நட்பு



theepa
25-06-2007, 11:09 PM
நட்பு

உடலின் அழகைப் பார்த்து வராது நட்பு
சொந்தம் பந்தம் பார்த்து வராது நட்பு
எழை பணக்கரன் பார்த்து வராது நட்பு
ஜாதி மதம் பார்த்து வராது நட்பு
அந்தஸ்து படிப்பு பார்த்து வராது நட்பு
ஒரு ஆத்மாவின் இன்னிசை கீதம் நட்பு...
நட்பின் இலக்கணம் என்றும் ஒரு நட்பு தான்....!!

அன்புடன்,
லதுஜா.


ஒரு முயர்ச்சி செய்தால் அதில் தெலிவிருந்தால் அந்த வானம் நம் வசமாகும்.....

ஓவியா
26-06-2007, 12:59 AM
நட்பு என்ற கவிதை வடித்து என் அன்பை பெற்றுவிட்டீர்கள். நன்றி

கவிதை அருமை. அழகிய நட்பை ஆயிரமுறையும் போற்றி புகழ்ந்து பாடலாம், தப்பில்லை, நன்னா பாடுங்கோ. சபாஷ்.


ஆனால் நட்பு என்ற சொல்ல்லுக்கே அவமரியாதையாக இருக்கும் சிலைரையும் அதை அவமதிப்பவர்காளையும் சாவின் உச்சியிலும் முகமெடுத்து காணக்கூடாது. இனி, அப்பாடி ஒரு கசப்பான சம்பவம் யார் வாழ்விழும் வரக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன்.

அமரன்
26-06-2007, 08:57 AM
நட்பு கவிபடைத்து
நட்புடன் பதித்து
நண்பர்கள் எமக்கு
கவி விருந்தளித்த
நட்புக்கு நன்றி....
ஒருகை தட்டினால் காற்று
இரு கைதட்டினால்தான் ஓசை
பாராட்டுகள் லதுஜா...

ஓவியன்
26-06-2007, 09:01 AM
நட்பு

உடலின் அழகைப் பார்த்து வராது நட்பு
சொந்தம் பந்தம் பார்த்து வராது நட்பு
எழை பணக்கரன் பார்த்து வராது நட்பு
ஜாதி மதம் பார்த்து வராது நட்பு
அந்தஸ்து படிப்பு பார்த்து வராது நட்பு
ஒரு ஆத்மாவின் இன்னிசை கீதம் நட்பு...
நட்பின் இலக்கணம் என்றும் ஒரு நட்பு தான்....!!

நட்பு!
ஒரு சொற் காவியம்
நட்பு!
ஒரு சொல்லில் ஒரு ஓவியம்

புரிந்தவர்களுக்கு மட்டும்

இனியவள்
26-06-2007, 09:08 AM
துன்பத்திலும் தோழ் கொடுப்பது நட்பு

வாழ்த்துக்கள் லதுஜா

விகடன்
26-06-2007, 09:11 AM
தோழமையின் ஆழுமையை சொல்லி நிற்கும் தீபாவின் கவிதை அபாரம்.

பாராட்டுக்கள்

அமரன்
26-06-2007, 09:11 AM
தோழமையின் ஆழுமையை சொல்லி நிற்கும் தீபாவின் கவிதை அபாரம்.

பாராட்டுக்கள்


அபாரம் மட்டுமல்ல
கருத்தில் அது பாரம்....

ஓவியா
26-06-2007, 01:59 PM
துன்பத்திலும் தோழ் கொடுப்பது நட்பு

வாழ்த்துக்கள் லதுஜா

ஆமாம் இனியவள், நட்பு ஒரு தெய்வீகம். ஆனாலும் துன்பத்தை கொடுப்பதும் நல்ல நட்பை கெடுப்பதும் சில நட்பே!! ஆத்திர*கார*னுக்கு புத்தி ம*ட்டு என்பதை சில* ந*ட்பில் அப்பட்டமாக காண*லாம்.

என் துன்ப*த்தில் என்னை தாலாட்டிய* என் தோழிக*ள், என் ஆஸ்தான தோழிகளை என்றும் மறக்க முடியாது, கொஞ்சம் நினைத்து பார்க்கிறேன், ஃபரிடாபீபீ, லூ பீ ஹோங், ஷீ ஷீ. சுஜாதா, ரீத்தா, தாமினி, முக்கியமாக ஜேனிஃபர் அஸ்ராப்......ம்ம் மறுபிற*வியிலும் இவர்கள் எனக்கு வேண்டும்.

இனியவள்
26-06-2007, 02:04 PM
ம்ம் நிச்சயமாக ஒவியா தூய நட்பு இந்த பிறப்பில் மட்டுமல்ல அடுத்த அடுத்த பிறப்பிலும் எம்மோடு தொடர்ந்து வரும்...உங்கள் ஆசைகள் நிறைவேற எனது வாழ்த்துக்கள்
தோழமையுடன் இனியவள்

ஓவியா
26-06-2007, 02:23 PM
எம்மோடு தொருமா!!!! இடிக்குதே..............ஓ ஓ

நன்றி.

இனியவள்
26-06-2007, 02:32 PM
எம்மோடு தொருமா!!!! இடிக்குதே..............ஓ ஓ

நன்றி.


அடடா ஒவியா பக்கத்தில எதாவது சுவர் இருக்க இல்லை இடிக்குதே என்டீங்களா அது தான் கேட்டன்

ஓவியா
26-06-2007, 02:35 PM
என் பக்கத்தில் சுவர் இருக்கு இடித்தால் தலை நன்கு வலிக்கும், ஆனால் இடிக்க மாட்டேன். ஏன் என்றால் தலை என்னது, அதான்.

theepa
28-06-2007, 09:05 PM
சரியாய் சொண்ணீர்கல் நன்பரே நட்பு போல உன்மயானது தூய்மையானது இந்த உலகத்தில் வேற எதுவுமே கிடையாது இந்த உலகத்தில் எதுவேனும் எண்டாலும் கிடைதிடும் ஆனால் உன்மையான நட்பு கிடைப்பதென்றால் அவ்வலவு சுலபம் இல்லங்க அது கிடைத்துவிட்டால் அவர்கலை போல் அதிஸ்றசாலி இந்த உலகதில் வேரயாரும் இல்லை

இணைய நண்பன்
28-06-2007, 09:22 PM
நட்பின் மகிமையை அழகிய கவிவரியில் எடுத்து காட்டியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

theepa
02-07-2007, 02:09 PM
நன்றிகள் என் அருமை நன்பர்கலே

ஆதவா
03-07-2007, 03:30 PM
நட்புப் பூக்கள், காதல் வனத்தில்....

ஒரு நிலையை இன்னொரு நிலையோடு ஒப்பிடமுடியாத தூரத்தில் இருக்கிறது நட்பு. அந்த நிலைகளின் நிலைகள் எத்தனை தூரம் உண்மை என்பதில் இருக்கிறது.... அளவுக்கு மீறினால் நட்பு காதல் ஆகலாம்... குறைந்தால் சந்தேகம் ஆகலாம்.. வாழ்த்துக்கள் தீபா....