PDA

View Full Version : காதல் பாடம்



theepa
25-06-2007, 10:57 PM
இதயமெனும் கல்லூரியில்
ஆசிரியனாக நீயிருந்து அதில்
மாணவியான எனக்கு
காதலெனும் பாடத்தை அன்போடு
கற்பித்த என் ஜீவனே
உன் மாயக்கண்ணால் என்னை
மயக்கி மந்திரக்கோளாய்
உன் பின் அலைய வைத்தாய்
உன்னை நினைத்து நான்
என்னை மறந்து என் பெயரைக்
கூட உன்னிடம் கேட்டுத் தெரிந்து கொன்டேன்
பூவிலே தேன் குடிக்கும் வண்டு போல் உன் தேன்
வார்த்தைகளைக் கேட்பதற்கு ஒரு வண்டு போல்
மாறி உன் பின்னே சுற்றினேன்....
நெய்யால் இறைவனுக்கு அபிசேகம் செய்வது போல்
என் அன்பால் உன்னை அபிசேகம் செய்தேன்
எத்தனை தடைகள் வந்தாலும் நீயும் நானும்
வாழ்க்கையில ஒன்று சேர்ந்து நம் காதல் பாடத்தை
தொடர்ந்தும் படிப்போம்


அன்புடன்,
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

க.கமலக்கண்ணன்
28-08-2007, 05:36 AM
அருமையான கவிதை

அற்புதமாக

அரங்கேற்றி உள்ளீர்கள்

அள்ளியது உள்ளத்தை

அழகு

சிவா.ஜி
28-08-2007, 05:58 AM
காதல் பாடம்


இதயமெனும் கல்லூரியில்
ஆசிரியனாக நீயிருந்து அதில்
மாணவியான எனக்கு
காதலெனும் பாடத்தை அன்போடு
கற்பித்த என் ஜீவனே
உன் மாயக்கண்ணால் என்னை
மயக்கி மந்திரக்கோளாய்
உன் பின் அலைய வைத்தாய்
உன்னை நினைத்து நான்
என்னை மறந்து என் பெயரைக்
கூட உன்னிடம் கேட்டுத் தெரிந்து கொன்டேன்
பூவிலே தேன் குடிக்கும் வண்டு போல் உன் தேன்
வார்த்தைகளைக் கேட்பதற்கு ஒரு வண்டு போல்
மாறி உன் பின்னே சுற்றினேன்....
நெய்யால் இறைவனுக்கு அபிசேகம் செய்வது போல்
என் அன்பால் உன்னை அபிசேகம் செய்தேன்
எத்தனை தடைகள் வந்தாலும் நீயும் நானும்
வாழ்க்கையில ஒன்று சேர்ந்து நம் காதல் பாடத்தை
தொடர்ந்தும் படிப்போம்


அன்புடன்,
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா
பூவை வண்டு சுற்றுவது இயற்கை..இங்கு பூவே தேன்குடிக்க வண்டை நாடுகிறது..இந்த காதல் ஜோடி வாழ்க்கையில் ஒன்று சேர வாழ்த்துக்கள்.
லதுஜா தயவுகூர்ந்து எழுத்துப்பிழைகளில் கொஞ்சம் கவனம் செலுத்த முடியுமா...?நெருடல்களைத் தவிர்க்கலாமே..

alaguraj
28-08-2007, 07:56 AM
காதல் பாடம்
இதயமெனும் கல்லூறியில்
ஆசிரியனாக நீயிருந்து அதில்
மாணவியான எனக்கு
காதலெனும் பாடத்தை

கவிதை நன்றாக உள்ளது, ஆனால் ஆசிரியர், மாணவி காதல் உவமைதான் சற்று நெருடல்....

இனியவள்
28-08-2007, 09:46 AM
அழகிய கவிதை லது வாழ்த்துக்கள்:aktion033:

பார்த்துங்க அம்மணி குருதட்சணையாய்
பிரிவை கேட்டு வாங்கிட்டு போகப்போறினம்

சுகந்தப்ரீதன்
28-08-2007, 09:49 AM
என்னனு சொல்ல தெரியல ஆனாலும் ரொம்ப புடிசிருக்கு எனக்கு இந்த கவிதை...வாழ்த்துக்கள்...தீபா.!

அக்னி
28-08-2007, 09:51 AM
காதல்...
படித்துக்கொண்டிருக்கும்வரை,
முடிவில்லை...
முடிந்துவிட்டாலோ..,
படிப்பினை...

பாராட்டுக்கள் லதுஜா...

ஓவியன்
30-08-2007, 08:55 PM
அழகான ஒரு கவிதைக்கு அக்னியின் அசத்தல் பின்னூட்டம் மேலும் அழகூட்டுகிறது.

இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!.

வசீகரன்
01-09-2007, 05:25 AM
உணர்வு பூர்வமான உரைநடை ஊற்று இந்த கவி

பாராட்டுக்கள் லதுஜா....!

வசீகரன்

ஓவியா
02-09-2007, 01:42 AM
காதல் உணர்வுகளை வரிகளில் அடக்கி கொடுக்க முடியாது, ஆனாலும் நீங்கள் செய்திள்ளீர்கள். உங்களின் திறமைக்கு பாராட்டுக்கள்.

பொறாமையுடன் ஒரு பூ
− ஓவியா