PDA

View Full Version : நிழலைத் தொலைத்த நிஜம்.....



Nanban
21-05-2003, 03:50 PM
நிஜம் எனக்குச் சொந்தமில்லை
நிழல் என்னுடனே இருக்கிறது
நிழலைத் தொலைத்த நிஜம்
எத்தனை பொய் சொல்லுமோ
தொலைந்து போன நிழலுக்காக?
மூலையில் முடங்கிப் போன நிஜத்தை
இந்த உலகம் என்ன செய்கிறதோ!

நிஜம் இல்லாத நிழலால்
எனக்கு மட்டும் என்ன பயன்?
நிழலைத் திருப்பித் தர
நிஜத்தைச் சந்திக்க வேண்டும்!

நிஜத்தின் வீதிகளில்
பயத்துடன் நடந்தேன்
நிழலையும் எடுத்துக் கொண்டு!
நிஜமும் நிழலும் ஒட்டாத
தூரத்துக்கு எடுத்துச் சென்று
நிஜத்தை எரித்துவிட்ட
நிம்மதியில் எல்லோரும்.........
பையில் கனத்த
நிஜத்தின் நிழலோடு
நான் மட்டும் தனியே.......

rambal
21-05-2003, 04:31 PM
நிழல் கேட்ட கேள்விகளுக்கு
விடை தெரியாமல்தான்
பயத்தோடு..

நிழலின் கேள்விக்கே
இந்த சக்தி என்றால்..
நிஜம் மட்டும்
உயிரோடு
இருந்திருந்தால்?

செத்துப் போன
நிஜத்திற்காக
இப்போதுதான்
மகிழ்ச்சியடைகிறேன்...

prabha_friend
21-05-2003, 05:03 PM
நிஜத்திற்காக நிழல் இத்தனை செய்தும் , அந்த நிஜம் இந்த நிழலுக்காக என்ன செய்தது ? . "இவனை வெறும் நிழலாக்கியதை தவிற...."

பாரதி
21-05-2003, 06:33 PM
பல நிஜங்களே நிழலைத்தைத்தான் நம்புகின்றன.

gankrish
22-05-2003, 05:45 AM
இங்கு நிழல் நிஜமாகிறது...

karikaalan
22-05-2003, 08:45 AM
" நிழலைத் தொலைத்த நிஜம்
எத்தனை பொய் சொல்லுமோ
தொலைந்து போன நிழலுக்காக? "

நிஜமும் பொய் பேசுமோ! விந்தைதான்!

poo
22-05-2003, 04:19 PM
வளமான கவிதைகள்.. வல்லவரே பாராட்டுக்கள்.....

Nanban
24-05-2003, 05:23 PM
" நிழலைத் தொலைத்த நிஜம்
எத்தனை பொய் சொல்லுமோ
தொலைந்து போன நிழலுக்காக? "

நிஜமும் பொய் பேசுமோ! விந்தைதான்!

நிஜமும் பொய் பேசினால் தான் வாழ் முடியும், இங்கே! சரிதானே?