PDA

View Full Version : காதல்



இனியவள்
25-06-2007, 07:44 AM
காதல் ஒரு
கைக்குழந்தை
வா! என்றழைப் போரிடம்
வாஞ்சையுடன்
ஓட்டிகொள்ளும்

பரிசுத்த ஆன்மாக்களின்
பராக்கிரமம்
அன்புக் களஞ்சியத்தில்
அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
அரியவகை உணவு

இரு இதயங்கள்
இரத்தம் பாய்ச்சி
மலரச் செய்யும்
மகோன்னத மலர்

கண்கள் வளர்க்கும்
ரகசியத் தேனி
காமம் இதற்கு
கசப்புத் தீனி

ஒவ்வொரு உயிரியும்
ஒளிவு மறைவாகவேனும்
வாசித்துவிட்டுச் செல்லும்
ஒற்றை வரி

இருளுக்குள்
பொருள் தேடுவதல்ல
காதல்
உயிருக்குள்
உயிர் தேடுவது...

அமரன்
25-06-2007, 07:57 AM
காதல் ஒரு
கைக்குழந்தை
வா! என்றழைப் போரிடம்
வாஞ்சையுடன்
ஓட்டிகொள்ளும்
நல்ல கருத்துதான். குழந்தைக்கு சில குழந்தைகள் சாக்லட் கொடுத்தால்தானே வருகின்றது..


பரிசுத்த ஆன்மாக்களின்
பராக்கிரமம்
அன்புக் களஞ்சியத்தில்
அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
உண்மைதான் பரிசுத்தமான இதயங்களில்தான் உண்மைக்காதல் வளர்கின்றது.

அரியவகை உணவு
கண்கள் வளர்க்கும்
ரகசியத் தேனி
காமம் இதற்கு
கசப்புத் தீனி
இன்று இந்த நிலை அரிதாகிவிட்டது.இதயத்தை காதல் சின்னம் ஆக்கினதாலோ என்னவோ இரத்த வெறிபிடித்து அழிவுகளைச் செய்வோர் காதலில் அதிகரித்துவிட்டனர். இடப்பக்கம் இதயம் இருப்பதால் பாக்கட்டின் கனத்தை அறிந்து காதல் செய்வோரும் அதிகரித்து விட்டனர்.


இருளுக்குள்
பொருள் தேடுவதல்ல
காதல்
உயிருக்குள்
உயிர் தேடுவது...

உண்மையான வரிகள். உயிருக்குள் உயிர் தேடுவதுதான் காதல். சிலர் உயிருக்குள் உயிர் கொடுத்துவிட்டு காதலின் உயிரை எடுத்துவிடுகின்றனர்.

கவிதைக்கு பராட்டுகள் இனியவள்

அன்புரசிகன்
25-06-2007, 08:01 AM
இரு இதயங்கள்
இரத்தம் பாய்ச்சி
மலரச் செய்யும்
மகோன்னத மலர்
இரு இதயங்கள் இரத்தம் பாச்ச
சில இதயங்கள் இரத்தம் குடிக்கின்றன.
குடிப்பவர்களுக்கு தெரியுமா
காதலின் வாசனை.



கண்கள் வளர்க்கும்
ரகசியத் தேனி
காமம் இதற்கு
கசப்புத் தீனி
முள்ளும் உண்டு.
ரோஜாவும் உண்டு.
முள்ளைத்தொட்டால் வலி
ரோஜாவைப்பார்த்தால் ரணவலி.
வலியிலும் ரணவலி இதமானது.


ஒவ்வொரு உயிரியும்
ஒளிவு மறைவாகவேனும்
வாசித்துவிட்டுச் செல்லும்
ஒற்றை வரி
ஒற்றை வரியில்
வாசிப்பு எழிது.
இரட்டை வரியில்
திருக்குறளுக்கு ஒப்பு.
காதலின் உதடுகள்
குறளிலும் வலிது
அதனால் தான்
வாசிப்பதும் வலிது

அமரன்
25-06-2007, 08:03 AM
சபாஷ் அன்புரசிகன்..கவிதைகளை ஆழமாக ஆராய்கின்றீர்கள். அழகாக பின்னூட்டமிடுகிறீர்கள். பாராட்டுகள். வளர வாழ்த்துக்கள்.

மனோஜ்
25-06-2007, 08:07 AM
சிறப்பான கவிதை

ஷீ-நிசி
25-06-2007, 09:16 AM
இருளுக்குள்
பொருள் தேடுவதல்ல
காதல்
உயிருக்குள்
உயிர் தேடுவது...

ரசிக்க வைத்த வரிகள்! தொடருங்கள்!

இனியவள்
27-06-2007, 06:58 AM
உண்மையான வரிகள். உயிருக்குள் உயிர் தேடுவதுதான் காதல். சிலர் உயிருக்குள் உயிர் கொடுத்துவிட்டு காதலின் உயிரை எடுத்துவிடுகின்றனர்.
கவிதைக்கு பராட்டுகள் இனியவள்


நன்றி அமரன்...
நீங்கள் சொல்வதும் சரிதான்

இனியவள்
27-06-2007, 06:59 AM
இரு இதயங்கள் இரத்தம் பாச்ச
சில இதயங்கள் இரத்தம் குடிக்கின்றன.
குடிப்பவர்களுக்கு தெரியுமா
காதலின் வாசனை.


முள்ளும் உண்டு.
ரோஜாவும் உண்டு.
முள்ளைத்தொட்டால் வலி
ரோஜாவைப்பார்த்தால் ரணவலி.
வலியிலும் ரணவலி இதமானது.

ஒற்றை வரியில்
வாசிப்பு எழிது.
இரட்டை வரியில்
திருக்குறளுக்கு ஒப்பு.
காதலின் உதடுகள்
குறளிலும் வலிது
அதனால் தான்
வாசிப்பதும் வலிது


அருமை அன்பு ரசிகன் வாழ்த்துக்களுடன் நன்றிகள்

இனியவள்
27-06-2007, 07:02 AM
ரசிக்க வைத்த வரிகள்! தொடருங்கள்!

நன்றி ஷீ-நிசி


சிறப்பான கவிதை

நன்றி மனோஜ்

சூரியன்
27-06-2007, 07:06 AM
நல்ல கவிதை,வரிகள் அருமை