PDA

View Full Version : இதுவும் காதல்தான்...(600வது பதிப்பு)



rambal
21-05-2003, 09:58 AM
இதுவும் காதல்தான்...(600வது பதிப்பு)

எதையோ சொல்ல வந்து
மௌனம் மட்டும்
அதிகமாய் சொல்லி..

தலையணை
கட்டித் தழுவி
காதல் மொழி பேசி..

கண்ணாடி முன்
நின்று
காதல் பழகி..

தூர இருந்தும்
அருகில்
இருப்பதாய் உணர்ந்து..

அருகில் இருந்தும்
அதிக இடைவெளியாய்
தவித்து..

கடிகார
நொடிமுட்களோடு
சண்டை நடத்தி காத்திருந்து..

வந்த பின்
ஒற்றைப் புன்னகையில்
சொக்கி மதியிழந்து..

இப்படியாகத்தான்
இன்றளவும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
நீ வேறு ஒருவனை
மணமுடித்த பின்னும்..

karikaalan
21-05-2003, 12:58 PM
கவிதை நன்றே! புரிந்தாற்போல் இருக்கிறது; ஆனால் புரியவில்லை!

===கரிகாலன்

Nanban
21-05-2003, 03:59 PM
தெளிவாகச் செல்லும் கவிதை, கடைசி வரிகளில் பூகம்பமாக வெடிக்கிறது..... காதலி, பிறன் மனை ஏகிய பின்னும், காதல் மட்டும் மிச்சமிருக்கிறது....

கடைசி வரிகள் இல்லையென்றால், இதுவும் மற்றவைகளில் ஒன்றாகியிருக்கும் என்றாகியிருக்கும்........

பாராட்டுகள்.....

poo
21-05-2003, 04:13 PM
இதுவும் காதல்... இந்த காதல் சரியா?!!...

பாராட்டுக்கள் ராம்!!!!!

rambal
21-05-2003, 04:37 PM
எல்லாம் காதல்தான்..
இது சரியா? தவறா? என்றால் சரியே......
அவளிடம் ஏதும் தத்துபித்தாய் உளறாமல் அமைதியாய் மனதிற்குள் வைத்துக் கோண்டு
வெளிக் காட்டா வண்ணம் தொடர்கிறது அல்லவா?
ஆகையால், இந்தக் காதல் சரியே..

prabha_friend
21-05-2003, 04:51 PM
இதுதான் உண்மையான காதல் .

பாலமுருகன்
26-05-2003, 11:14 AM
எது தவறு?.. அவன் காதல் உன்மை... காதலிக்கிறான்..காதலித்துக்கொண்டிருப்பான்... சொல்லி தோற்றுப்போகும் கதலை விட சொல்லமல் வாழும் காதலுக்கு வலிமை அதிகம். பார்த்து பார்த்து காதலித்து எத்தனை நாள் தவமிருந்து ,எத்தனை இரவு தூக்கத்தை தொலைத்து, உண்ணும் உனவை மறந்து அவள் சொல்லும் ஒரெ ஒரு சொல்லுக்காக காத்திருந்தவன் எதற்காக நேற்று வந்தவனுக்காக மறக்க வேண்டும்? காதல் வாழும் அமைதியாக.... அவனுக்குள் மட்டும் ரகசியமாக.....