PDA

View Full Version : கலைவேந்தனின்.... காதல் கதை பகுதி_எட்டு



கலைவேந்தன்
24-06-2007, 12:27 PM
பகுதி_எட்டு


இவர்களது காதல் வளர்ச்சியை

பலர் விமரிசனம் செய்தனர்.

சிலர் கரிசனம் காட்டினர்..

அவளது தோழிகள் அவளை

வார்ததைகளால் அறைந்தனர்..

காதலைத் தொல்காப்பியம் மட்டுமே

தத்து எடுத்துள்ளதா?

அகநானூறு மட்டுமே காட்டும்

சித்து விளையாட்டா அது?

காப்பியங்கள் மட்டும் காதல் உரிமை

காப்பிரைட் எடுத்துள்ளதா?

தாஜ்மகாலை வியக்கும் மனித உள்ளம்

ஷாஜஹானையும் மும்தாஜையும்

மறந்து போனதேன்?

உண்மைக் காதலைச்

சுற்றி நினறு தூற்றுவதேன்??

அவசர அவசரமாய் அதற்கு

சவப்பெட்டி தயாரிப்பதேன்?

நாட்டு மக்களிடமிருந்து காதல்

நாடு கடத்த வேண்டிய ஒன்றா?

படித்தவராக வேடமிடும் பாமரர்கள்

சுற்றி நின்று அக்காதலரைச்

சுட்டெரித்தனர்..

ஆனாலும் அந்த

ஆனந்தக் குயிலகளுக்கு

ஆதரவுச் சாமரம் வீசிய

நட்பு வள்ளல்களும் இருந்தன!

இணைப்பறவைகளின்

இணைப்பைப் புரிந்து கொண்டு

எதையும் செய்யத் துடித்தது ஓர் இதயம்...

அந்தக் காதல் இதயங்களைக்

கனிவுடன் வருடியது...

கலைவேந்தன்
24-06-2007, 12:29 PM
அடுத்த பகுதி அடுத்த தலைப்பில் தொடர்கிறேன்.

ஓவியன்
24-06-2007, 12:32 PM
மன்னிக்கவும் கலை, முழுவதையும் ஒரு சேரப் படித்து விட்டுப் பின்னூட்டம் போடுகிறேன்.

ஓவியன்
24-06-2007, 12:34 PM
இளம் புயலானமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.:nature-smiley-008:

இளசு
24-06-2007, 01:10 PM
மெய்யான காதலில்
மெய்யணைப்பும் சேர
எதிர்ப்பு உரம் முன்னமே
இன்னும் வலுவூட்ட

காதல் மரம் வேரை இன்னும் ஆழமாக்க...
பிடுங்கும் காலம் வந்தால் பிரளயமாகுமே மன மண்!!!!

பாராட்டுகள் கலைவேந்தன்!

(எதுகை கெடாமல் காப்பிரைட் = காப்புரிமை)

ஷீ-நிசி
24-06-2007, 01:23 PM
மிக அருமை....

[QUOTE]பொறுப்புள்ள தாம்பத்யம் போல்
திட்டமிட்டு வளர்ந்தது அவர்கள் ஆய்வு! [/QUஓடே]

வரலாற்று புத்தகங்களின் காதல் கதைகள் படித்து வருத்தப்படுகின்ற மனம். நிஜக் காதல் என்றால் வெறுக்கத்தானே செய்கின்றனர்!

காதலிக்கும் எல்லோரின் கனவிலும் குடும்பம் குழந்தைகள் வராமல் இருந்ததுண்டா.... காதலியவளின் முதல் ஸ்பரிசம் என்றுமே மறக்க இயலாததுதானே!

வாழ்த்துக்கள் வேந்தரே!

கலைவேந்தன்
24-06-2008, 09:46 AM
நன்றி நண்பர்களே!

மீரா
27-06-2008, 08:44 AM
அழகான வலிகள் நிறைந்த மென்மையான காதல் க(வி)தை..... படிக்க படிக்க இப்படியும் இருப்பார்களா என்று நினைக்க தோன்றுகிறது.. அழகு தமிழில் கவிதை எழுதி அதில் உங்கள் காதல் கதையை எமக்கு அறிய தந்தமைக்கு நன்றி கலைவேந்தன் அவர்களே....

கலைவேந்தன்
18-07-2009, 04:24 PM
மிக்க நன்றி மீரா..!

கா.ரமேஷ்
19-08-2009, 12:58 PM
எல்லா கவிதைகளுமே அருமை தோழரே. ஒரு சேர ஒன்பது பகுதிகளையும் படித்தேன்....

அறிஞர்
19-08-2009, 01:13 PM
காதலின் வலிகள்/இனிமை கலைவேந்தனின் வரிகளில்

அருமை கலைவேந்தன்

கலைவேந்தன்
20-08-2009, 04:15 PM
மிக்க நன்றி நண்பர்களே....!

சோகங்களைப் பங்கிடும்போது சுமைகள் இறங்கினாற்போல் ஒரு நிம்மதி...

அந்த சோகங்களைச் சலிக்காமல் வழங்குவதில் தான் வெற்றி இருக்கிறது.

என் மனம் லேசானது.

மீண்டும் நன்றி நண்பர்களே...!