PDA

View Full Version : கலைவேந்தனின்.... காதல் கதை பகுதி_ஏழு



கலைவேந்தன்
24-06-2007, 12:26 PM
பகுதி_ஏழு



பத்து நாட்கள் பாட விடுமுறை...

அவள்

உயிரை இவனிடம் விட்டுவிட்டு

உடலுடன் சென்னை சென்றாள்..

இவன் உயிர்

உடலை இங்கே விட்டுவிட்டு

அவளுடன் சென்னை சென்றது!

மனத்தளவில் பிரிவில்லை எனினும்

நான்கு கண்கள் பத்து நாட்கள்

இமைக்க மறந்தன....

காவிரி மணலில் படுத்து

விண்மீன்களிடையே

அவளைத்தேடினான்....

சூன்யம் கண்டு வாடினான்...

கல்லூரிபாடங்கள்

கண்களில் ஏறவில்லை..

காதலி ஏக்கம் அவனை

அனாதைக் குழந்தை ஆக்கியது....

தினசரி அவள் வரவை எண்ணி

கண்கள் பூத்தன...

கண்ணீர்ப்பூக்கள் கோர்த்தன...

அவளது வழக்கமான வழித்தடங்களை

கண்களால் முத்தமிட்டான்...

மனதுக்குள் மட்டும் சத்தமிட்டான்...

பத்து நாட்களில்

பதது வகை நரகங்கள்

பரிச்சயமாயின....

அவளும் சென்னையில்

நடமாடும் பிணமானாள்...

நாயகன் நினைவுடன்

நாட்களை ஓட்டினாள்...

அந்தக் குழந்தை

தனது இந்தக் குழந்தைக்காக

பரிசுகள் வாங்கி வந்தபோது...

இந்தக் குழந்தை

கையில் பரிசுகளுடன்

அந்தக் குழந்தையைத் தாங்கியது!

பத்து நாட்களின் சோகங்களை

பார்வைகளில் கரைத்தனர்...

மீண்டுமொரு வசந்த காலம்

பூத்துவந்தது...

இருவரது உயிர்களையும் காத்துவந்தது..

இளசு
24-06-2007, 01:06 PM
பாட விடுமுறை காதல் பறவைகள்
வாடும் விடுமுறையானதே..

தடங்கள் பார்த்து ரணங்கள் ஆறாதே..
நேற்றுப் புசித்த நினைவு இன்று பசி ஆற்றாதே..

ஆற்றாமையுடன் தொடர்கிறேன்..
அவர்களின் தேர்வு முடிவு பற்றிய கவலை வேறு!!!!

பாராட்டுகள் கலைவேந்தன்..

ஷீ-நிசி
24-06-2007, 01:17 PM
காதல் என்ற புத்தகத்தில் பிரிவு என்பது தவிர்க்க முடியாத பாடம்தானே!

பிரிவுகள் இதயங்களை இறுக்கத்தானே செய்கிறது... வெறுக்கவா செய்கிறது!

மிக கொடுமையான தருணங்கள் தான்.. அந்த வலிகளிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது...

காதலின் நாட்களை கண் முன் கொண்டு வந்தீர் வேந்தரே! வாழ்த்துக்கள்!

கலைவேந்தன்
24-06-2008, 09:37 AM
நன்றி நண்பர்களே!

மீரா
27-06-2008, 09:16 AM
சிந்தனை சிற்பியா நீங்கள் கலைவேந்தன்??? சோகத்தை கூட அழகான கவிதைவரிகளாய் உருவாக்கி எமக்கு படைத்துவிட்டீரே....

இன்று இம்மன்றத்தில் முழுவதும் உங்கள் காதல் க(வி)தை படிக்கவே சரியாக இருந்தது.... எத்தனை அழகான அர்த்தங்கள் ஆழமான வேதனை வலிகள்.....

கற்றாலும் இத்தனை அழகு தமிழில் எழுத வருமா எனக்கு வராது உண்மையை நான் ஒத்து கொள்ள வேண்டும்.. தமிழ் மீது காதலா?? காதலி மேல் கொண்ட காதலா?? காதலை அழகாய் கவிதையாக்கி எமக்கு விருந்தே படைத்துவிட்டீர்....

எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் வாசகர்கள் எப்படி இந்த திரியை பார்க்க மறந்தனர் என்பதே..... காவியமாக திகழ்கிறது உங்கள் காதல்
க(வி)தை....

அவளது வழக்கமான வழித்தடங்களை

கண்களால் முத்தமிட்டான்...

மனதுக்குள் மட்டும் சத்தமிட்டான்...

எப்படி யோசிக்கிறீர்கள் கவிதையை செதுக்க வரிகளை அமைக்க என்று ஆச்சர்யமாக இருக்கிறது கலைவேந்தன்....

நன்றி கலைவேந்தன்...

கலைவேந்தன்
18-07-2009, 04:22 PM
மிக்க நன்றி மீரா..!