PDA

View Full Version : கலைவேந்தனின்.... காதல் கதை பகுதி_ஆறு



கலைவேந்தன்
24-06-2007, 12:23 PM
பகுதி_ஆறு

ஒருவருக்கொருவர்

குடும்பச்செய்திகளை

பரிமாறிக்கொண்டனர்..

அவள் இருந்து வரும்

நாற்றங்கால் பற்றியும்

வளரப்போகும் வயல் வெளி பற்றியும்

விசாலமான விலாசம் கண்டனர்...

இடை இடையே சிலநேரம்

இருவரது உடல்களும்

கூட்டல் கணக்காகிவிடத் துடித்தது...

ஆனாலும்

பண்பாட்டுப் பெருக்கல் தான்

இருவரது மனங்களையும்

வகுத்துச் சென்றது..

வார்த்தைச் சுகங்களாலேயே

வாழ்க்கைச் சுகங்கள் கழிந்தன...

தனிமை ஒருமுறை இவர்களைத்

தள்ளாட விட்டது உண்மை

ஆனால்................

அவளது பெண்மையும் அவனது உணமையும்

விரகத்தீயை விரட்டிவிட்டது!

காதல் பாடம் வளர்ந்து வரும்போதே

கல்லூரிப் பாடம் குறுகிவந்தது

கல்லூரிவாழ்க்கை முடியப்போவதை எண்ணி

கண் கலங்கினர்...

ஒருவர் புன்னகை மற்றவர் கண்ணீரைத் துடைத்தது...

அப்போது......

திடீரெனப் பத்து நாட்கள்

தீயென வந்தது!

இளசு
24-06-2007, 01:02 PM
காதல் + கட்டுப்பாடு = கண்ணியம்..

கணக்கு மிக அழகாக விளக்குகிறது
நாயகன் −நாயகி மன முதிர்வை..

மதிப்பும் மகிழ்ச்சியுமாய் அவர்களைத் தொடர்கிறேன்..

பாராட்டுகள் கலைவேந்தன்!

ஷீ-நிசி
24-06-2007, 01:12 PM
இடை இடையே சிலநேரம்
இருவரது உடல்களும்
கூட்டல் கணக்காகிவிடத் துடித்தது...
ஆனாலும்
பண்பாட்டுப் பெருக்கல் தான்
இருவரது மனங்களையும்
வகுத்துச் சென்றது..
வார்த்தைச் சுகங்களாலேயே
வாழ்க்கைச் சுகங்கள் கழிந்தன...


இதுதன் காதலின் கணக்கோ! காதல் கனிந்தவுடன் மோகம் என்ற கல்தானே முதலில் பறந்துவருகிறது.. அந்த கல்லிற்கு தப்பும் கனிகள் தானே முறையாக வியாபாரமாகிறது.

அழகிய அர்த்தங்களை தாங்கியபடி உள்ளது வரிகள்!

வாழ்த்துக்கள் வேந்தரே!

கலைவேந்தன்
24-06-2008, 09:21 AM
நன்றி நண்பர்களே

மீரா
27-06-2008, 09:11 AM
இருவரது உடல்களும்
கூட்டல் கணக்காகிவிடத் துடித்தது...
ஆனாலும்
பண்பாட்டுப் பெருக்கல் தான்
இருவரது மனங்களையும்
வகுத்துச் சென்றது..

காதலை கணக்காய் தான் கொண்டு சென்று இருக்கீங்க கலைவேந்தன்....

தனிமை ஒருமுறை இவர்களைத்
தள்ளாட விட்டது உண்மை
ஆனால்................
அவளது பெண்மையும் அவனது உணமையும்
விரகத்தீயை விரட்டிவிட்டது!

மனதில் உண்மை இருக்கும்போது இது போன்ற அற்ப சுகங்களை உடல் தேடாது என்பதை மிக அழகாய் உணர்த்திவிட்டீர்கள்.... இவ்வரிகளை ரசித்து படித்தேன் திரும்ப திரும்ப..... நன்றி கலைவேந்தன்...

கலைவேந்தன்
18-07-2009, 04:21 PM
மிக்க நன்றி மீரா..!