PDA

View Full Version : ஹிந்திleomohan
24-06-2007, 08:11 AM
வட மாநிலங்களில் சென்று வேலை செய்யும் நண்பர்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் சென்று பணிபுரிய விரும்பும் நண்பர்களுக்கும் மூத்த உறுப்பினர் ஆரென் அவர்களின் அறிவுரை படி இந்த ஹிந்தி பயிலும் திரி துவங்கப்படுகிறது.

ஆர்வும் உள்ளவர்கள் படித்து பயன்பெறுங்கள்.

சில புத்தகங்களின் ஆதாரத்துடனும் இணைய தொடுப்புகளுடனும் சில இடங்களில் சொந்த விளக்கங்களுடனும் இதை தர முயற்சி செய்கிறேன்.

leomohan
24-06-2007, 08:15 AM
अ आ इ ई
उ ऊ ऋ ए
ऐ ऒ औ अं
अः

உச்சரிப்பு விரைவில்

அன்புரசிகன்
24-06-2007, 08:16 AM
ஏதோ ஓரிரண்டு வார்த்தைகளை புரிந்து வைத்திருக்கிறென். இது நல்லவாய்ப்பு. தொடருங்கள்.

ஷீ-நிசி
24-06-2007, 08:18 AM
நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!

namsec
24-06-2007, 08:20 AM
அச்சா தோஸ்த்

leomohan
24-06-2007, 08:21 AM
क ख ग घ ङ

च छ ज झ ञ

ट ठ ड ढ ण

त थ द ध न

प फ ब भ म

य र ल व

श ष स ह

श्र त्र ज्ञ


உச்சரிப்பு விரைவில்

இதயம்
24-06-2007, 08:31 AM
எனக்கு ஹிந்தி பேச தெரியும். ஆனால், எழுத வராது. காரணம், நான் ஹிந்தி கற்றது நண்பர்களின் பேச்சு வழக்கில் தான். உங்கள் தொடர் மூலம் ஹிந்தி எழுதவும் கற்க முடியும் என நினைக்கிறேன்.

பாராட்டுக்கள்.! தொடரட்டும் உங்கள் தொண்டு..!

aren
24-06-2007, 11:01 AM
நல்ல விஷயம். நம் மக்கள் வட இந்தியா செல்லும்பொழுது உபயோகமாக இருக்கும். தொடருங்கள்.

shivasevagan
24-06-2007, 11:01 AM
சுக்ரியா ஜீ!

leomohan
24-06-2007, 11:11 AM
http://www.cs.colostate.edu/~malaiya/hindilinks.htm
http://www.language-learning-advisor.com/learn-hindi.html

http://faculty.maxwell.syr.edu/jishnu/hindi.asp

leomohan
25-06-2007, 05:09 AM
अ - அ

आ - ஆ

इ - இ

ई - ஈ

उ - உ

ऊ - ஊ

ऋ - ரு


ए - ஏ

ऐ - ஐ

ऒ - ஓ

औ - ஔ

अं - அம்

अः - அஹ

leomohan
25-06-2007, 05:15 AM
தமிழில் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு. ஹிந்தியில் அவை பதின்மூன்று

தமிழில் உள்ள எ, ஒ என்னும் குறில்கள் ஹிந்தியில் இல்லை. ஏ ஓ என்ற நெடில்களை கொண்டே தேவை பூர்த்தி செய்யபடுகிறது

உயிரெழுத்துக்களில் 7−வது, ரி, ரு என்ற எழுத்துக்களின் இடையேயுள்ள உச்சரிப்பை கொண்டிருக்கும். சரியான உச்சரிப்பை அறிஞர்களிடம் தெரிந்துக் கொள்ளவும்


இறுதி எழுத்துக்கள் இரண்டும் அநுஸ்வாரம், விஸர்க்கம் என்று சொல்லப்படும். அநுஸ்வாரத்தை ம் என்று உதடுகளை மூடாமல் உச்சரிக்க வேண்டும். இது தனக்குப் பின் இருக்கும் எழுத்தின் உச்சரிப்பை கொண்டிருக்கும். உதாரணம் அங்க், பாஞ் முதலியன

விஸர்க்கம் தன் முன்னுள்ள எழுத்தின் உச்சரிப்பை கொண்டிருக்கும். ராமஹ, ஹரிஹி முதலியன

சில ஹிந்திச் சொற்களின் இறுதியில் உள்ள ஆ, ஈ, ஊ, ஏ, ஓ எழுத்துக்களின் முறையே யா, யீ, வூ, யே, வோ என்று தொனிக்கும். உதாரணம் புவா, கோயீ, ஆவூம், கயே, காவோ முதலியன. பிறகு விரிவாக பார்ப்போம்.

அரசன்
25-06-2007, 05:21 AM
உங்கள் பொதுநலச் சிந்தனை எங்களை பெருமைக் கொள்ள செய்கிறது. இந்த திரி மிகுந்த வரவேற்புடன் வெற்றிப் பெற வேண்டும். என்னைப் போன்ற பலருக்கும் இந்த திரி பயனுடையதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தொடரட்டும் உங்கள் சேவை. சந்தேகம் தோன்றின் கேட்கலாமா? நண்பரே

lolluvathiyar
25-06-2007, 06:12 AM
வட இந்தியா செல்லும்பொழுது உபயோகமாக இருக்கும்.
இங்கேயே இருந்தாலும் இங்கு வரும் வ*ட* இந்திய* வியாரிக*ளை க*வ*ர*வும் உபயோகமாக இருக்கும்.

leomohan
25-06-2007, 10:09 AM
உங்கள் பொதுநலச் சிந்தனை எங்களை பெருமைக் கொள்ள செய்கிறது. இந்த திரி மிகுந்த வரவேற்புடன் வெற்றிப் பெற வேண்டும். என்னைப் போன்ற பலருக்கும் இந்த திரி பயனுடையதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தொடரட்டும் உங்கள் சேவை. சந்தேகம் தோன்றின் கேட்கலாமா? நண்பரே

தாராளமாக மூர்த்தி ஐயா.

ஓவியா
25-06-2007, 02:06 PM
மோகன்,
அருமையான திரி, பின்னூடங்களை கண்டேன், பலருக்கு உபயோகமாக இருக்கும் என்று தெரிகிறது.

நானும் கலந்து கற்றுக்கொண்டு நல்ல பயனையடைகிறேன். மிக்க நன்றி

என் ஆசிரியர்களின் பட்டியலில் நீங்களும் சேர்ந்தச்சு, இனி மோகனய்யாதான்.

சேவையை பாராட்டுகிறேன்.

தொடருங்கள் ஐய்யா.

சுக்ரியா, நமஸ்தே.

leomohan
25-06-2007, 02:19 PM
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி ஓவியா.

பென்ஸ்
25-06-2007, 02:24 PM
நல்ல முயற்சி மோகன்...
தொடருங்கள்...
பிறமொழி கற்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது பயனுள்ளதாய் இருக்கும் (என்னை போல).

குறிப்பு: பிறமொழி தேவையில்லை என்று நினைப்பவர்கள் இதை தேவையில்லாமல் பதிக்கவேண்டாம்.

நாஞ்சில் த.க.ஜெய்
03-12-2010, 03:12 PM
நானும் கலந்து கொள்கிறேன் உங்களோடு .நானும் பல புத்தகங்கள் வாங்கி ஹிந்தி படிக்க முயற்சி செய்தேன் ஆனால் அதன் இலக்கணம் எவ்விடத்தில் வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் என்று தெரியாததால் அதனை இடையிலே விட்டு விட்டேன் .இந்த திரியை கண்டதும் மிகவும் மகிழ்ந்தேன் . தொடருங்கள் இதனை
உங்கள் மாணவன்
த.க.ஜெய்

ஆன்டனி ஜானி
03-12-2010, 05:08 PM
எளிதான முறை படிப்பதற்க்கு ஈசியாக இருக்கு
எழுதவும் கஷ்டம் இருக்காது என்று நினைக்கிறேன் .....
இன்று முதல் நானும் உங்கள் மாணவன் .......
தொடருங்கள் .........

வாழ்த்துக்கள் !!!!

sakthim
05-12-2010, 04:58 AM
எனக்கும் ஹிந்தி கற்றுக்கொள்ள ஆசை. வசந்த் டிவியில் வரும் தமிழ் வழி ஹிந்தி தொடர்ந்து பார்த்து வருகிறேன். தங்களுடைய திரியும் அதற்கு துணை புரியும். முயற்சிக்கு பாராட்டுக்கள்.

jrc
05-12-2010, 12:50 PM
எனக்கு பேச்சு கிந்தி வேண்டும். கிடைக்குமா-

பாலகன்
05-12-2010, 01:55 PM
ஹிந்தி படிப்பது நல்லது தான். எனக்கு மட்டும் ஹிந்தி தெரிந்திருந்தால் இன்னொரு ரவுன்டு வட இந்தியாவில் வலம் வந்திருப்பேன்