PDA

View Full Version : ஊனம்

இனியவள்
24-06-2007, 08:09 AM
உன் கால் முடம் என்றால்
ஊன்றுகோல் நான் தருவேன்

உன் கை முடம் என்றால்
என்கையால் உனைத் தாங்குவேன்

நீ ஊமையென்றால் நானும் மெளனமாகிப்போவேன்

ஆனால் உன்பேச்சில் ஊனம் உள்ளதால்...
நான் ஊமையானேன் ...

இளசு
24-06-2007, 08:17 AM
கவிதை நன்று இனியவள்.

நச்சென்று மனவிகாரம் உள்ள மனிதரைக் குட்டும் கவிதை!

மூன்றாம் வரி ( நீ ஊமையென்றால்) நீக்கப்பட்டால்
இன்னும் கூர்மையாகும் என்பது என் கருத்து.

(எழுத்துப்பிழைகளைக் களைய முயலுங்கள்).

ஓவியன்
24-06-2007, 08:35 AM
உள்ளம் ஊனப்பட்டால் உடம்பிருந்தும் பயனில்லை என்ற பொற்காலம் திரைப்படப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

அருமையான கருத்து இளசு அண்ணா சொன்ன மாதிரி இன்னும் செதுக்கினால் இன்னமும் கவிதை அழகு பெறும் என்பது என் கருத்து.

அமரன்
24-06-2007, 01:10 PM
உடல் ஊனம் ஊனமல்ல. சொல்லும் உள்ளமும் ஊனமில்லாது இருந்தால் அதுவே கொடை. நச்சென்ற கருத்துடைய கவிதை பாராட்டுகள் இனியவள்

ஷீ-நிசி
24-06-2007, 01:37 PM
காதல் பெரிதென நினைத்துவிட்டால் காதலியின் ஊனங்கள் பெரிதாக தெரியாது காதலில்!

உன் பேச்சில் ஊனம் உள்ளதால் நான் ஊமையானேன்!

(பேச்சில் என்ன ஊனம்?? விளங்கவில்லை நண்பரே)

இனியவள்
27-06-2007, 07:32 AM
காதல் பெரிதென நினைத்துவிட்டால் காதலியின் ஊனங்கள் பெரிதாக தெரியாது காதலில்!
உன் பேச்சில் ஊனம் உள்ளதால் நான் ஊமையானேன்!
(பேச்சில் என்ன ஊனம்?? விளங்கவில்லை நண்பரே)

வஞ்சகப் போச்சு அல்லது மற்றவர்களை காயப்படுத்தும் போச்சை ஊனம் என்று கூறலாம் ஷீ-நிசி

இனியவள்
27-06-2007, 07:34 AM
கவிதை நன்று இனியவள்.
நச்சென்று மனவிகாரம் உள்ள மனிதரைக் குட்டும் கவிதை!
மூன்றாம் வரி ( நீ ஊமையென்றால்) நீக்கப்பட்டால்
இன்னும் கூர்மையாகும் என்பது என் கருத்து.
(எழுத்துப்பிழைகளைக் களைய முயலுங்கள்).

நன்றி இளசு
எழுத்துப்பிழைகளை களைய முயற்சிக்கின்றேன்...சில சமயம் என்னையும் அறியாமல் சிறு பிழைகள் ஏற்படுகின்றன மன்னிக்கவும்

இனியவள்
27-06-2007, 07:35 AM
உடல் ஊனம் ஊனமல்ல. சொல்லும் உள்ளமும் ஊனமில்லாது இருந்தால் அதுவே கொடை. நச்சென்ற கருத்துடைய கவிதை பாராட்டுகள் இனியவள்

நன்றி அமரன்

இனியவள்
27-06-2007, 07:38 AM
உள்ளம் ஊனப்பட்டால் உடம்பிருந்தும் பயனில்லை என்ற பொற்காலம் திரைப்படப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
அருமையான கருத்து இளசு அண்ணா சொன்ன மாதிரி இன்னும் செதுக்கினால் இன்னமும் கவிதை அழகு பெறும் என்பது என் கருத்து.

ம்ம் இன்னும் அழகாக செதுக்க முயற்சி செய்கின்றேன் இளசு (எப்படி அழைப்பது:mini023:)& ஒவியன்

அக்னி
27-06-2007, 09:47 AM
தீயினால் சுட்ட வடு ஆறும்...
ஆறாது நாவினால் சுட்ட வடு...

இந்த வரிகளின் ஆழம் உங்கள் கவியிலும் உளது...

அக்னி
27-06-2007, 09:49 AM
ம்ம் இன்னும் அழகாக செதுக்க முயற்சி செய்கின்றேன் இளசு (எப்படி அழைப்பது:mini023:)& ஒவியன்

யாரையும் மரியாதையாக அழைக்க, இனியவள் அவர்கள் என்பதைப் போல அழையுங்கள். வயது வித்தியாசம் தாண்டி, மரியாதைப்படுத்தலாம்...